Monday, March 3, 2014

ஆண்டஇனம் என்றும் அடங்காது



நாடார்

"நாடார்" என்பதே நாட்டை ஆண்டவர்கள் என்ற கருத்தில் விரிவடைந்த வார்த்தை எனக் கூறப்படுகிறது. தமிழகத்திலும், இன்னும் பல மாநிலங்களிலும் நாடார் சமுதாயம் பரவி இருக்கிறது. அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்களின் பங்கு முத்திரை பதிக்க ஏதாவது இருந்து வருகிறது. அரசியலும், ஆன்மீக வழி காட்டலிலும் சமுதாய விழிப்புணர்வையும் பொது நல சேவையை உள்ளடக்கிய ஒரு தொண்டுள்ளத்தை, நல்ல பல கருத்துகளைச் சொல்லி வருபவர்கள் நாடார் சமுதாய மக்கள். காமராஜர் அவர்களின் எளிமை, புத்திக் கூர்மை, நாட்டு வளர்ச்சிக்கான சிந்தனை - இன்றைக்கும் அனைத்து தரப்பு அரசியல் வாதிகளை பாராட்ட வைப்பதாக இருக்கிறது புதிய அரசியல் கல்வியின், அரிச்சுவடு அவரின் பொது வாழ்வு என போற்ற கூடியதாக இன்றும், என்றும் இருந்து வரும். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து வணிகத்திற்கு வாய்ப்பு அளித்தவர்கள் நாடார்கள் இன்றைக்கு கம்பீரமாக பல பல கிளைகளோடு அதுவும் சொந்தக் கட்டிடத்திலேயே நாடார் வங்கியாகச் செயல்பட்டுவருகிற "தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க்" ஒரு அடையாளச் சின்னம். சங்க அமைப்புகள் மூலம் கல்வி ஸ்தாபனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள் சிறு தொழிற் வளாகங்கள் லாட்ஜ் பொழுதுபோக்கு நிறுவனங்கள் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என பற்பல சமுதாய வளர்ச்சித்தொண்டுகள் பரவி நிற்கிறது. இவர்கள் இப்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சங்கங்கள் நிறுவி பல தொண்டுகள் செய்கிறார்கள் மற்றும் சிறிலங்கா, லண்டன், மலேசிய, சிங்கப்பூர், துபாய் என்று பலநாடுகளிலும் சங்கம் அமைத்து நாடார் சமுதாய அரணாக விளங்குகிறார்கள்