Thursday, June 11, 2015

பதிவு 5 - சான்றோரே சத்திரியர் என்பதற்கான மேலும் சில ஆதாரங்கள்.

சான்றோரே சத்திரியர் என்பதற்கான ஆதாரமாக, அவர்கள் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும் சான்றோரின் குணநலன்களாக சங்க நூல்கள் கூறுவன.

சான்றோர் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும் சான்றோரின் குணநலன்களும்..
“பண்டும், தாமறி செம்மைச் சான்றோர் “ – குறுந்தொகை 256:3.
“சான்றோர், புகழு முன்னர் நாணுப,
பழியாங் கொள்பவோ காணுங் காலே” –குறுந்தொகை -252: 67,68.
புகழப்படும் முன்னரே நாணம் கொள்ளும் தன்மை வாய்ந்த சான்றோர், பழிச்சொல்லை எவ்வாறு தாங்கிக்கொள்வார்?
“கடிப்பிடு கண்முரசம் காதகத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரேனப்படுஞ் சொல்” – நாலடியார், 100.
முரசு ஒலி காதுதூரம் கேட்கும். இடியோசை யோசனை தூரம் கேட்கும். சான்றோர் கொடுப்பதாலுண்டாகும் புகழோ மூவுலகும் கேட்கும். இங்கு சான்றோர் என்பது தானம் செய்யும் கடமையுள்ள அரசகுலத்தவரையே!
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு” – குறள்
“ஊழி பெயரினும் தாம்பெயராய் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார்” -குறள் 989.
“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை” – குறள் 990.
“சான்றோர் செல்வம் என்பது , சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” –நற்றிணை (2.10)
அடைக்கலமாக வந்தோரின் துன்பம் கண்டு வருந்தும் மென்மையான உள்ளமே சான்றோரின் உண்மையான செல்வமாம்.
சான்றோர் நிவாகச் சபையில் அமர்ந்து வழிநடத்தினர், மன்றங்களில் அமர்ந்து நீதி வழங்கினர் என்பதை சில பாடல்கள்..
“சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும்”
- திரிகடுகம்
“நெறி அறிசெறிகுறி புரிதிரிபு அறியா அறிவை முந்துறீஇ
தகை மிகுதொகை வகை அறியும் சான்றவர் இனமாக”
-கலித்தொகை 39: 46,47
“ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே”- தண்டியலங்காரம் 126 சூ
“மன்றத்துக் கண்டாங்கே சான்றோர்”
-முல்லைக்கலி 110: 20
“தனிச்செங்கோல் கொள்கை சான்ற வறுசமையமும்”
கல்வெட்டு, SII Vol V645.
“சான்றோர் இருந்தவை” – புறநானூறு 266:8.
‘நின்றநீதி வென்றநேமி பழுதில் கொள்கை, வழுதியர் அவைக்கண் அறிவு வீற்றிருந்த செறிவுடை மன்றத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழு”- அகநானூறு, பாயிரம் – 4.
“சான்றோர் அவை “- பழமொழி நானூறு,86.
“சான்றோர் அவை”- பாரத வெண்பா .56
“வழுதியர் அவை” புறநானூறு, பாயிரம் 2.
வழுதியர் அவை என்பது பாண்டியர் அவையாகும்.
கேரள மாநிலம் கோட்டயம் குமாரநல்லூர் பகவதி கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு “...... இக்கச்சம் பிழைச்சவர் முழிக்களத்து தொழுக்க வின்சான்றாரை பிழைச் சொரிள்ப் படுவிது” என்று கூறுகிறது. முளிக்களம் என்பது நீதிவழங்கும் ,நிர்வாகம் செய்யும் சபையாகும். முளிக்களம் மூளிக்குளம் சத்திரிய சபை என கேரளதேச வரலாறு கூறுகிறது. (Kerala Desa Varalaru, p 9. Edited by T.Chandrasekaran Orient Manuscripts series No.56)
குமரி மாவட்டம்,திருநயினார் குறிச்சி, திருனந்திக்கரைக் கல்வெட்டு “திருநந்திக்கரை பெருமக்களுந் தனியாள்வானு(ங்) கண்குந்தம்பா களத்து கூடி” எனக் கூறுகிறது. மற்றொரு கல்வெட்டில் “இச்செலவு விலக்குவார் முளிக்கள(க) ச்ச ...” எனச் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. (கல்வெட்டு 38F .38G-1969) அரைகுறையாக உள்ள அச்சொல் “முளிக்களகச் சான்றோர்” என இருந்திருக்க வேண்டும். மேற்கண்ட இருகல்வெட்டுகளும் கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டை சார்ந்தவை என தொல்லியல் துறை கூறியுள்ளது. ஆகவே, சத்திரியர் சபையான முளிக்களம்,சேரமான் பெருமாள்களின் காலத்திற்கு முன்பிருந்தும்,அல்லது அவர்களின் ஆட்சிகாலத்திலும், செயல்பட்டுள்ளது என நம்பலாம். சந்தித்தல் என்ற பொருள்படும் மில், மிலி என்ற வடசொல்லிலிருந்து மிலிக்களம் எனப்பட்டு பிற்காலத்தில் முளிக்களம், மூளிக்குளம், என்றெல்லாம் திரிந்துவிட்டது. சத்திரிய பிரபுக்கள் சந்தித்த மன்றமே முளிக்களமாகும்.
“சான்றான் மாட்டுமேனிப் பொன்னும்” – கி.பி 849 ஆம் ஆண்டு கல்வெட்டு. மாடு,மாடா என்பதற்கு செல்வம்,பொன்,லட்சுமி என்றும் பொருள் உண்டு. வீட்டுக்கு வரும் லட்சுமி என்ற பொருளிலேயே ,மருமகளை “மாட்டுப்பெண்” எனக் கூறுகின்றனர். மாடக்காசு – பொற்காசு.
இவ்வாறு, உயர்குடி பிறப்புடைய அரசகுலத்தவரான சான்றோர் அரசராகவும், அமைச்சர் தளபதியாகவும், நீதிபதியாகவும், அசரசருக்கு ஆலோசனை கூறிய வினைக்கடன் சான்றோராகவும், கோவில் நிவாகம், நீர்ப்பாசன நிவாகம் போன்றவற்றைக் கண்காணித்தோராகவும், காசு விடுத்தொராகவும், பொன்னின் தரத்தை நிர்ணயயித்தோராகவும் பணியாற்றி, பிரஜாபரிபாலனம் எனப்படும் நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.குடிகாவலுக்குத் தேவையான போர்ப் பயிற்சியுடன் மற்ற கல்விகளையும் கற்றுப் பல்வேறு மாண்புகளுடன் விளங்கினர் ( Wearied with the unmeaning ritual and ceremonials prescribed by Brahman priests, the Kshatriyas started new speculation and bold enquiries after the Truth….. and these speculation remained the Hindu philosophical system and religious of a later day…… The bold speculation started by the Kshatriyas is known as the Upanishads….
King Janaka of Videka was the father of the Upanishadic movement. Learned men assembled in his court and held discussions, and the king rewarded them according to their scholarship. Brahmans, in those days sat at the feet of Kshatriya kings to learn the highest wisdom which was known only to kings like janaka.
- R.C Dutt, History of Civilization in Ancient India, Vol. I, p.228.
“The Kshatriyas Kings who were directly concerned with the problems of administration, war and peace, and had to hold their subjects together as leaders and protectors, were naturally more liberal in their outlook and had a greater sense of justice and the equality than the priests, whose governing passion was the exploitation of the religious feelings of the people.
Even in the sphere of philosophy and religions, the Kshatriyas were not disposed to accept without resource the authority of the Brahman priests; much less were they prepared to submit to any curtailment of the royal prerogatives and dignity”
- Swamy Dharma Theertha, History of Hindu Imperialism, p.50. First edition 1941. Lahore 4th edition 1992, Babasahip Ambedkar foundation, Kottayam.
ஆகையால் , சான்றோர் என்றால் மாண்புடையோராய் இருந்த ,கல்வியில் சிறந்தோராயிருந்த, அறம் பிறளாக் கொள்கை சான்ற நற்குடிப் பிறப்பாளராயிருந்த சந்திரியர் என்பது புலப்படும்.
இன்றைக்கு சத்திரியர் என்று தங்களை சொல்லிக்கொள்வோர் இதில் ஏதேனும் ஒரு குணத்தை தங்கள் குணமாக முன்னிருத்துகிறார்களா?
இல்லை, வாளை ஓங்கிப் பிடித்து குதிரையில் செல்வதுபோல் புகைப்படத்தை போட்டு தங்களை சத்திரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். வாள் ஆணவத்தின் அடையாளம். ஆணவத்தால் அடக்கி ஆண்டவர்களே சத்திரியர்கள் என்ற ஒரு பொய்யான பிம்பம் மக்கள் மத்தியில் உலவுகிறது. அதுவே அவர்கள் சத்திரியர்கள் என்றாலே வெறுக்க காரணமாகிறது.
உண்மையில் ஒரு சத்திரியன் என்பவன் ஆணவத்தால், வீரத்தால் அடக்கி ஆள்பவனல்ல மக்கள் மனதை புரிந்துகொண்டு செயல்படுபவனே, மக்கள் தேவையை அறிந்து கொண்டு “அன்பால்” ஆட்சி செய்பவனே உண்மையான சத்திரியன், சான்றான். ராமனும், கண்ணனும், கிருஷ்ணனும்,அய்யப்பனும் முருகனும் அதனாலேயே இன்றுவரை மக்களால் வணங்கப்படுகின்றனர்...

1 comment:

  1. அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏

    தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் ஆண்டு 🙏 கீழறைத் தமிழ் ஆண்டு 🙏 ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி 🙏 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை 🙏

    வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகத் தமிழ்ச் சான்றோர்கள் குலத்தில் வந்த ஆதித்த சந்திர சேர சோழ பாண்டியர்கள் பாண்டவர்கள் நாடாளும் நாடார்கள் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் 🙏 மேலும் நமது தமிழ் குடிகளின் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

    ReplyDelete