Friday, August 7, 2015

நாடார் என்பது சாதிப்பெயரா?

இந்த நாடார் நாடார்னு சொல்றாங்களே அப்டினா என்ன?
நாடார் என்பது ஒரு சாதி பெயரா? இல்லை பட்டப் பெயரா?


நாடார்
------------
.உண்மையில் சொன்னால் நாடார் என்பது பட்டமே . அது ஒரு சமுதாயத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பட்டம்.தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர்.

எடுத்துக்காட்டாக தேவர் என்பது சாதி அல்ல தேவர் என்பதும் ஒருவகையான எல்லோருக்குமான பட்டம்.

மன்னர்களை மகிழ்விக்க வந்தேறிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேவர் என்பது சமஸ்கிருத சொல்லாடல் ஆகும். மேலும் தேவர் எனும் பெயரில் அரசின் சாதிகளின் பட்டியலில் எந்த ஒரு சாதியும் இல்லை. தேவர் எனும் பட்டத்தை எந்த ஒரு இலக்கியமோ அல்லது கல்வெட்டோ சாதியாகக்கூறும் சான்று இல்லை.இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தேவர் எனும் பட்டத்தை கொண்டுள்ளனர் .அதற்க்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 


எடுத்துக்காட்டிற்குச் சில:

சிவகங்கை பாளையக்காரர் முத்துவடுக உடையனாதத் தேவர்.இவர் தெலுங்கு வடுகர்(நாய்க்கர்) இனத்தவர் ஆவார்.

கி.பி 1260 - 1271 இல் தேவகிரியை ஆண்ட மகாதேவர் வடநாட்டு யாதவர் ஆவார்.

கி.பி 1299 - 1301 இல் வடநாடு ராந்தப்பூர் பகுதியை ஆட்சி புரிந்த கமீர் தேவர் சௌக வம்சத்தவர் ஆவார்.

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர் சீக்கிய இனத்தவர் ஆவார்.

கி.பி 883 - 902 இல் காஷ்மீர் பகுதியை ஆண்ட சங்கிரமத் தேவர் உத்பால வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கத் தேவர் சமண முனிவர் ஆவார்.

அருண்மொழித்தேவர் என பல்லவ மன்னரால் வழங்கப்பெற்ற பெரிய புராணம் பாடிய சேக்கிழார் வேளாண் மரபைச் சார்ந்தவர்.

வன்னியர் எனும் சாதியினரும் தங்களைக் கண்டியத் தேவர் என அழைத்துக்கொள்கின்றனர்.

சென்னை திரிசூலம் கல்வெட்டு ஒன்று காளையை ரிசபத்தேவர் என்கிறது.

சோழர் கால மதுராந்தகம் கல்வெட்டு தேவரடியார் ஒருவரை "இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்" என்கிறது.

கவுண்டர் என்பது கூட ஒரு பட்டமாகும். இதை வேளாளர் மற்றும் வன்னியர் பயபடுத்துகின்றனர்.

ஆனால் நாடார் என்பது சான்றோர் சமுதாயத்திற்கே உரிய பட்டமாகும்.



நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாதிரியான தொழில் செய்பவர்களோ அல்லர் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். பல்வேறு கிளைச்ச்சமூகன்களே நாடார் என்ற பொதுப்பெயரால் அழைக்கபடுகின்றனர். கள்ளர், மறவர், சேர்வை, கொண்டையன் கோட்டை மறவர், காருகுரிசிமறவர், வன்னிய மறவர், அகம்படியார் போன்ற பல்வேறு பிரிவுகள் முக்குலத்தோர் என ஒரே குடையின் கீழ் சேர்க்கப்பட்டதை போன்று.
பறை,பள்ளி,நாயக்கர்,படையாச்சி , வேட்டைக்கார கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட பல்வேறு துணை சாதிகள் வன்னியர் என்ற பொதுப்பெயரால் அழைக்கபடுவதைப் போன்றே, நிலைமைக்காரர், மூப்பர், முக்கந்தர்,பாண்டியகுல சத்திரியர், நட்டாத்திகள், சேர்வைகாரர் , சாணர், கிராமணி, கொடிக்கால் நாட்டார் ,கருக்குப்பட்டையார், ஈழவர் எனப் பல்வேறு பிரிவினரும் கடந்த சில நூற்றாண்டுகளாக நாடார் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். அதற்க்கு முன்பு இதில் ஒருசில கிளையினரே நாடார் என்ற பட்ட பெயரை உபயோக படுத்தினர்.

இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன..


தமிழ் மொழியில் உள்ள வார்த்தை 'நாடு' 'ஒரு நாட்டினை குறிக்கின்றது. நாடு என்ற சொல்லில்'ஆர்' அல்லது 'ஆழ்' பின்ணினைத்தால் ஆட்சி அல்லது ஆளுகை என்று பொருள். அதன்படி 'நாடார்' தன்னை "காணி இறைவன்" என்றும், பூமி அல்லது பூமிக்காரர், நில உரிமையாளர், அல்லது காணிகள் அதிகாரர் என்றும் பொருள். இது சான்றோர் சமூகத்திற்கே உரிய பட்டமாகும்.அவர்களை தவிர்த்து வேறு சமூகத்தினர் இதனை பட்டப்பெயராக பயன்படுத்த இயலாது.

நாடன் என்ற சொல் தமிழர்களின் சங்ககாலம் தொட்டு உள்ளது .அது திராவிடர்களின் ஒரு சாதியற்ற காலமாகும். திராவிட மொழிகள் தமிழ்மொழியிலிருந்து சரிவர பிரியாத காலகட்டம். அந்த காலகட்டம் தமிழ் இலக்கியங்களின் படி, 30000 60000 ஆண்டுகள் (Tamil and Tamils, Prehistoric India, Archaeological Reports) தாண்டி செல்வதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் இதை சமஸ்கிருத சிந்தனையாளர்கள் சிலர் “கி.மு” 3000 சுற்றி என மதிப்பிடுகிறார்கள்.



“பெருங்கள் நாடன் பேகனும்” -- சிறுபாணாற்றுப்டை,வரி 87.
“நளிமலை நாடன் நள்ளியும்” -- மேலது,வரி 107.
“நளிமலை நாடன் நள்ளியவன்” –- புறநானூறு 150.
“மலைகெழு நாடன் மாவண் பாரி” -- புறநானூறு 236.
“பசுங்கழை குன்ற நாடன்” -- குறுந்தொகை 74.
“கானக நாடன்” -- குறுந் 54. ஐங்குறுநூறு 253.
“குன்ற நாடன்” -- குறுந் 24,36,74,90,230,327,333,342,383.
“குன்று கெழு நாடர்” -– மேலது 87.

குறுந்தொகையில் நாற்ப்பதுக்கும் மேற்ப்பட்ட பாடல்களில் நாடன் காணப்படுகிறது.

“வீழும் அருவி விறன்மலை நன்னாடன்” –- திணைமொழி ஐம்பது.
“நீள்சோலை நாடனை” -- ஐந்திணை எழுபது 14.
“புறவணி நாடன்”-- ஐங்குறுநூறு 424.
“ஓங்கு மலை நாடன்” -- குறுந் 150,88,241.
“வரையக நாடன்” -- மேலது 3
“மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன்” -- களவழி நாப்பது 3.

“நாடறிய #நாடார் சபையகத்தே பாஞ்சாலி
நாடறியத் தூச்சுரிந்த நாசத்தால்”- பெருந்தேவனார் ,பாரதவெண்பா,உத்தியோக பருவம்,பாடல் .52

இதைப்போன்று நூற்றுக்கும் மேற்ப்பட்ட புராண நூல்களில் “நாடன்” என்ற சொல் மூவேந்தர்களை புகழ பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டினை ஆள்பவர்,நிலத்தின் உரிமையாளர் மற்றும் நாட்டின் பாதுகாவலலர்களை 'நாடான்' (ஈழகுலம்) என்றும், பழங்குடி மக்களை நாடாழ்வார்,நாடாவார்,நாடார்,நாடாவி என்றும் அழைத்திருக்கிறார்கள்.
இதையே நாடாவா,நாடாவாரு, என ஆந்திராவிலும். பண்ட் அல்லது பில்(லு) (திருவாங்கூர் வில்லவ நாடார்களுக்கு சமமான) மற்றும், கவுடு என கர்நாடகத்திலும்(Karnataka Inscriptions) அழைக்கப்படுகின்றனர்.

நாடனிலிருந்து நாடான் வேறுபட்டதா? நாடாழ்வானிலிருந்து ,நாடாவான், நாடான் வேறுபட்டதா? நாடானிலிருந்து நாடார் வேறுபட்டதா?
ராசன் வேறு அரசன் வேறு ராசா வேறா? தேவன் வேறு தேவர் வேறா? அண்ணனை அண்ணா, அண்ணே(ன்), என்று கூபிடுவதால் உறவு மாறிவிடுமா? அப்பன் அப்பாவாகவும், தம்பி தம்பீ எனவும் விழிக்கபடுவதில்லையா? ஆகவே முன்னாளில் நாடன் என வழங்கப்பட்டச் சொல் பிற்காலத்தில் நாடாழ்வான் என்றும், நாடாவான் என்றும் நாடான்,நாடார் என்றும் வழங்கலாயிற்று என்பதே உண்மை.
நாடார்களே நாடான் ,நாடாள்வான், நாடன் என அழைக்கப்பட்டனர் இதற்க்கு எண்ணற்ற ஆதாரங்கள் கடலளவில் உள்ளன.

1.) நாடான் - A Polite epithet in the South, applied to the shaanars.(Rev . J.P.Rottler,Tamila English Dictionary,1834)நாடான் என்பது சாணருக்குரிய பட்டப்பெயர்.

2.) NADAVAN (நாடாவான்) – A head of Chandrars –Dr. Gundart,Malayalam English Dictionary.

3.) “Nadan is a rular of Nadu or district, it is the usual title of the Southern Chandrans – Census of India,1891 Vol XIII P.” நாடான் என்பவன் ஒரு நாட்டை அல்லது ஒருபகுதியை ஆள்பவன், இது தென்னக சான்றாங்களின் வழக்கமான பட்டமாக உள்ளது என கலெக்டர் Sir H.W.Stuawart எழுதியுள்ளார்.

4.) நாடான்- A term applied to the cast if toddy drawers, சாணாருக்குரிய பட்டப்பெயர்.(Rev.Miron winslow ,Tamil English Dictionary)
சென்ற இரு நூற்றாண்டுகளில் ,கால்டுவெல் உட்பட ஐரோப்பியர் சிலரும்,இங்கிருந்த வரலாற்றாசிரியர் சிலரும், நாடார் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளாது இழிவுபடுத்தியே எழுதியுள்ளனர். ஆயினும் சாராதக்கர்,எட்கர் தர்ஸ்டன்,H.R பேற்றி போன்ற பலர் “நாடார் என்பது ஒரே சாதியல்ல’ என்ற உண்மையை உணர்ந்து எழுதியுள்ளனர். நாடார் எனப் பொதுப் பெயரால் இன்று அழைக்கப்படும் இச்சமூகமானது ,பல உட்கிளைகளையும்,அவற்றிடையே ஏற்றத் தாழ்வு களையும்,வெவ்வேறு தொழில்களையும்,பல் வேற்றுபட்ட வழக்கங்களையும் உடையது என உணர்ந்ததால்தான் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.

5.) “Nadars claim perhaps,with justice,to be the original lords of the land” –W.W.Hunter,Imperial Gazetter of India, Vol VII.p -302, 1887.The Manual of administration of Madras Presidency,Vol II ,p-131, 1893)”தாங்களே இம்மண்ணின் உணமையான உரிமையாளர்கள் (மன்னர்கள்) என நாடார்கள் உரிமை கொண்டாடுவது நியாயமாகவே உள்ளது”-இம்பீரியல் கேஸட்டியர்.

6.) “The two words Nadan and Gramani mean the same thing,namely ruler of a country or of a villege, the former being a Tamil word and the latter a Sanskrit word”- Thurston Edgur,Cast and Trips of South India,Vol V,p-389.”நாடார்,கிராமணி வார்த்தைகள் ஒரே பொருளைக் குறிப்பனவே. நாடான் என்றால் நாட்டை ஆள்பவன்,கிராமணி கிராமத்தை ஆள்பவன்.முன்னது தமிழ்ச் சொல்,பின்னது சம்ஸ்கிருத வார்த்தை”-தர்ஸ்டன்.

7.) “In the Southern part of Tinnavelly, the highest class of Chantrars calld ‘Nadans’ are the acknowledged propriettors of the land” – Ms.Sarath Tucker,The South Indian Sketches.1843. “நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியில், நாடான்கள் என அழைக்கப்படும் சான்றார்களில் உயர்ந்த பிரிவினர் உண்மையாகவே மண்ணின் உரிமையாளர்களே.

8.) NADAN – en epithet of Pandya Kings(நாடான் பாண்டிய மன்னர்களுக்குரிய பட்டப்பெயர்) தரங்கம்பாடி தமிழ் இங்லீஸ் அகராதி.

9.) “There are two divisions even among the Chantrans ,namely Nadans, otherwise calld land holders and commen people”-Bishop Gel. Ingiries made by the Bishop of Madras . சான்றாருள்ளும் இருவகுப்பார் உள்ளனர்.நாடார்கள் எனப்படும் நிலச் சுவாந்தார்களும் மற்றும் சாதாரணமக்களும்”எ என சென்னை பிசப் ஜெல் கூறியுள்ளார்.

இவ்வாறு ,சான்றோரில் உயர் வகுப்பினர் நாடார் எனப்பட்டனர் என்பதையும்,அந்த நாடார் உயர் வகுப்பினர் ஒருபோதும் சாணார் என்ற பெயரில் அழைக்கபட்டதில்லை என்பதையும் மக்களில் பலர் அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் சாணார் என இழிவாக எழுதிவந்த கால்டுவெல், பின்னாளில் இந்த உயர்குடி நாடார்களைப் பற்றி அறிந்து 1869-ல் பின்வருமாருறு எழுதினான்.

10.) “I had also to deal with another class of claiments – the Nadans, who had still, professed as the lords of the land, to have certain right of levying a small rent on all houses build within their boundaries and a small free at wedding ect.. I have no doupt its having been customarily submitted to” – Bihop Caldwell, Reminissance, p-87. “எனக்கு மற்றொரு வகுப்பாரிடமும் தொடர்பு கொள்ள நேர்ந்தது நாடார்கள்; இவர்களே சுற்றுவட்டாரத்திலுள்ள நிலங்களுக்கேல்லாம் பூர்வீகமான உரிமையாளர்கள். அதனால், தாங்கள் விற்றுவிட்ட நிலத்துக்கும்,அவர்கள் ஒரு வகையான பூர்வீகப் பாத்தியத்தை இன்னமும் வைத்துள்ளனர். தங்கள் எல்லகைக்குள் காட்டப்படும் வீடுகளின் மீது வரிவிதிக்கும் உரிமையும், திருமணம் போன்ற நிகழ்சிகளில் சிறுகட்டணத்தை வசூலிக்கும் உரிமையும் இவர்களுக்கு உள்ளது.மேற்ப்படி வரிகள் எவ்வித மறுப்புமின்றி செலுத்தப்பட்டு வருகின்றன என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை” என கால்டுவெல் கூறியுள்ளான்.

கல்வெட்டு செப்பேடுகளில் நாடார்

1.) சாலிவாகன சகாப்தம் 1561ல் (கி.பி 1639) குதிரை மொழித்தேறி,முத்துகிருஷ்ணாபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) பொறிக்கப்பட்ட கல்வெட்டில் 1.ஆதிச்ச நாடன், 2.கோவிந்த பணிக்க நாடன், 3.வீரப்ப நாடன், 4.தீத்தியப்பன் நாடன், 5.பிச்ச நாடன், 6.அய்யக்குட்டி நாடன், 7.திக்கெல்லாம் கட்டி நாடான், 8.நினைத்தது முடித்த நாடன், 9.அவத்தைக்குவி நாடன், 10.குத்தியுண்டா நாடான் ஆகிய நாடாதி நாடாக்கள்... “

2.) அடைக்கலாபுரம் பழைய கிணற்றுத் தொட்டியில் உள்ள கொல்லம் 750(கி.பி. 1530)ஆம் ஆண்டு கல்வெட்டு “அடைக்கலாபுரம் திருப்பாப்பு நாடாள்வான் தன்மம்” என கூறுகிறது.

3.) கொல்லம் 760(கி.பி 1584) தை மாதம் 14ஆம் தேதி வரையப்பெற்ற திருச்செந்தூர் சாசனம் சிவந்தி ஆதித்த நாடன்,குமாரசாமி ஆதித்த நாடன் உள்ளிட்டோரால் வழங்கப்பட்ட நன்கொடையால் மண்டபம் கட்டப்பெற்றதாகக் கூறுகிறது.

4.) ராதாபுரம் வட்டம்,அச்சம்பாடு கல்வெட்டு (கி.பி ) குட்டம் சந்திராதிச்ச்ச நாடானும்,கொம்மடிக்கொட்டை திருப்பாப்பு நாடானும் படுகைபற்று அருதக்குட்டி ஆதிச்ச நாடனும் என பல்வேறு நாடான் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

5.) கி.பி 1662 ஆம் ஆண்டு வெட்டப்பெற்ற விக்கிரமசிங்கபுரம் கல்வெட்டு “முள்ளிநாட்டில் விக்கிரமசிங்கபுரம் வகங்கை உய்யக் கொண்டார்களில் பெரும்பற்றுச் செவ்வந்தி நாடான் மற்றுண்டான பேர்கள்” எனக் கூறுகிறது.

6.) அவினாசி வட்டம் திருமுருகன்பூண்டி நாடார் பட்டயம் (கி.பி1770) “நாடாதி நாடான்,புட்டவரத்தாளகிய நாடாத்தியம்மை,மதுரைவள நாடான்..”என பதினோரு நாடான் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

7.) ஈரோடு வட்டம் அவல்பூந்துறை நாடார் செப்பேடு (17ஆம் நூற்றாண்டு) “காளி நாடன்,றாக்கி நாடான்,யிருள நாடான்..” என பதினைந்து பெயர்கள் “நாடன்” மற்றும் “நாடான்” என பொறிக்கப்பட்டுள்ளன.

8.) திருவாடுதுறை ஆதீனத்தால் பொறிக்கப்பட்டுள்ள சிவகாசி செப்புப்பட்டயத்தில் (கி.பி. 1769) எண்ணற்ற பெயர்கள் நாடான் என்றே பொறிக்கப்பட்டுள்ளன.

9.) குலசேகர பட்டினம் கல்வெட்டு (கி.பி 1752)-“குட்டம் சந்திர மாத்தாண்ட பணிக்க நாடான்,குமார வீரமாத்தாண்ட நாடான் முதலாகிய நாடார் நாடாக்களும் சகலருமோம்” எனக் கூறுகிறது.

10.) சேரன் வஞ்சி மார்த்தாண்ட தம்புரான் வண்ண குலசேகரப் பெருமாள், கொல்லம் 941 வைகாசி 13( கி.பி 1765) வெளியிட்ட கொடுங்கோலூர் செப்புப்பட்டயத்தில் காணப்படுவது – “சத்திரிய குலத்தில் உதித்தார்... சான்றார் என்று பெயர் இட்டதும், உலகமெங்கும் நாடாண்டதினால் நாடார் என்றும்...”

11.) கருமாபுரம் நாடார் செப்பேடு (கி.பி 17ஆம் நூற்றாண்டு) “திராவிட தேசத்தில் சௌந்தரபாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும் நாடாழ்வாரென்றும் பேர் பெற்றவரான சான்றோர் குலத்தில்..” எனக் கூறுகிறது.

12.) தேவகோட்டை 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. “வடவகை நாடார்”

13.)அகஸ்தீசுவரம் வட்டம் மயிலாடி குலசேகரபுரம் சுமைதாங்கிக் கல்லில் பொறிக்கப்பட்டது.- கொல்லம் 903ஆம் ஆண்டு (கி.பி 1727) கூறுவது “அல்ப்பசி மாசம் 21 தெயதி செவ்வாய் கிளமை ராமசாமி நாடார் மகள் பாறுவதி நாடாச்சி வ(கை)க கன்னங்குளம்”

இது போன்ற எண்ணற்ற கல்வெட்டுகள்,செப்பேடுகள், கிராமியப்பாடல்கள்,வில்லிசை பாடல்கள், சான்றோர் சமூகத்திற்கு மட்டுமே “நாடன்” ,“நாடான்”,”நாடாள்வான்” ,”நாடாவார்”, “நாடார்” என்ற பட்டப் பெயர்கள் இருந்ததை தெரிவிக்கின்றன.

ஆகவே," நீங்க என்ன சாதி" என்று யாரும் கேட்டால். சான்றோர் என்று சொல்லி பின்னர் நாடார் என்று கூறுங்கள்...

5 comments:

  1. சானார் தான்...சான்றார் என்பதற்கு தக்க தரவுகள் இருக்கா...இருந்தால் பகிருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. சானார் - சான்றார் இதுவே தகுதியான சிறந்த சான்று...

      Delete
  2. மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி பிரபஞ்சம் முழுவதும் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவக தமிழ்ச் சான்றோர்கள் குலத்தில் வந்த ஆதித்த சந்திர சேர சோழ பாண்டியர்கள் பாண்டவர்கள் நாடாளும் நாடார்கள் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் மேலும் நமது தமிழ் குடிகளின் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

    ReplyDelete
  3. எனது அன்பான சான்றோனுக்கு(நாடார்) இணை சான்றோன் மரியதாஸ் செல்லப்பன் நாடார் பணிவன்புடன் வேண்டிக் கொள்வது. உங்கள் பதிவுகள் அனைத்தும் நலமானது அதோடு சில வரிகள் (சிலவருடங்களாக) மாணவருத்தப்படுத்துகிறது . அது வேறு ஒன்றுமல்ல எவனோ ஒருவன் தனது மூக்கைப்பிடித்துக்கொண்டு ஓந்தான் என்று சொன்னானாம். அது வேறு பொருள்பட கேள்வி பட்டவர்கள் மனம் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்ததாம். அதுபோலவே நாம் சான்றோன் (சான்றோர்) ஏவோனோ ஒரு மூக்கு கொறுக்கையன் சான்றோன் என்பதை சாணான்(சாணார்) என்று சொல்லி விட்டான். இப்போது நம்மை மாட்டு சாணியை அருவருக்கிறது போல சாணா பயலே என்று சிலர் கூப்பிடுமளவு உள்ளது (கூப்பிட்டார்கள்).
    எனவே அன்பானவரே சாணான்(சாணார்) என்பதை சான்றோன் (சான்றோர்) என்று மாற்றி பதிவிடும்படி தாழ்மையுமுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றிகள்.
    (தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்)

    ReplyDelete