Saturday, March 7, 2015

மதுரையை ஆட்சி செய்த நாடான் உலகுடையபெருமாள்

மதுரையை ஆட்சி செய்த நாடான் உலகுடையபெருமாள் :-


மதுரையில் பிற்காலப் பாண்டியர்களாக நாடார் குலத்தின் ஐந்துசகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர்.அவர்களுள் மூத்தவன் ஜடாவர்மன் குலசேகர பராக்கிரமப் பாண்டிய நாடான் ஆவான் [1480-1507].

வலங்கைச் சான்றோராட்சி மதுரையில் கல்வெட்டும் செப்பேடும் கண்டு;அன்னை மீனாட்சிக்கும், சொக்கநாதருக்கும்,தேரும்;திருவிழாவும் தினமும் கண்டு சீரும்,சிறப்புமாக ஆட்சி செய்து வந்த நேரத்திலேயில் மாற்றார் படையெடுத்து வந்தனர். துணையாய் நின்ற வீரத்தளபதிகள் பதவி ஆசையினால் மாற்றாருக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்தனர்.எதிரிகளுக்குத் துணையாயினர்.

ஐவர் ராஜாக்களும் போரில் வீர சொர்க்கம் புகுந்தனர்.ராஜாக்கள் குடும்பம் மதுரையை விட்டு அகன்றனர்.ஐவருக்கிளையவள் பொன்னுருவியின் அருந்தவத்தால் அவளுக்கு ஐந்து புதல்வர்கள் பிறந்தனர் மூத்தவர் உலகுடையபெருமாள்,அவருக்கு இளையவர் சரியகுலப்பெருமாள் ஆவார். உடைவாள் வெட்டு,மல்யுத்தம்,குதிரையேற்றம்,யானையேற்றம் களரி உள்ளிட்ட அனைத்து அரசகுலவீரப் பயிற்சிகளும் பெற்றனர்.

மதுரை மண்ணில் தாய் மாமனுக்கேற்பட்ட அவலத்தைத் துடைத்திட உறுதி கொண்டனர். அவர்கள் வளர,வளர அவர்களது வைராக்கியமும் வளர்ந்த்து.தருணம் பார்த்து வீறு கொண்டெழுந்தனர் உலகுடையபெருமாளும்,சரியகுலப்பெருமாளும் அவரது தம்பியரும்.மாமனின் பழிதீர்க்க நடைபெற்றப் போரில் மதுரையை மீட்டெடுத்தார் உலகுடையப்பெருமாள்.’’மாமன்மார் பழியை அழித்தவன்’’என்ற நற்பெயர் பெற்றார்.மதுரையைச்சுற்றிலும் தெப்பக்குளங்கள்,கோயில்கள், அறச்சாலைகள் அமைத்தார் மதுரையில் பொற்கால ஆட்சி செய்தனர்.

தோற்றோடிய மாற்றார் படைகள் 12 ஆண்டுகள் மலைப்பகுதியில் ஆயத்தம் செய்து படை திரட்டி வந்து போரிட்டு மதுரையைக் கைப்பற்றினர். மாற்றார் கையில் சிக்கி இறப்பதை விட நம்மை நாமே மாய்த்துக்கொள்வோம் என்று தங்களத் தாங்களே குத்திக் கொண்டு மாண்டனர்.அவர்களுடைய ஆன்மீக பலத்தாலும் மதுரை மீனாட்சியின் அருளாலும் தெய்வமாகி பல வரங்களைச் சிவனிடம் பெறுகின்றனர்.மதுரையிலிருந்து குடிப்பெயர்ச்சியான தங்களுடைய குலத்தோரைக் காத்திடவே பூவுலகில் அமர்கின்றனர். உலகுடையபெருமாளுக்கும் சரியகுலப்பெருமாளுக்கும் தமிழகத்தில் வழிபாடுகள் காணப்படுகின்றன.

-நெல்லைதமிழன் அருண் சேர்மதி



No comments:

Post a Comment