Saturday, April 18, 2015

பதிவு 3 ஷத்திரியர் என்றால் யார் ?தமிழகத்தில் சத்திரியர் யார்?

பதிவு 1ல் தமிழகத்தில் சத்திரியர் இல்லை என்று சொல்வது அறியாமை என்று பார்த்தோம்.

பதிவு 2ல் சத்திரியரே முதற்தரக்குடியினர், பிராமணர்கள் சத்திரியர்களை வணங்க வேண்டியவர்கள் என்று பார்த்தோம். 

இந்த பதிவில் ஷத்திரியர் என்றால் யார்? அவர்களின் குணங்கள் என்னவென்று பார்ப்போம்.

ஷத்திரியர் என்றால் யார் ?தமிழகத்தில் சத்திரியர் யார்?

“உள்ளத்தை அள்ளித்தா” என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் உண்மையான மணிவண்ணன் யார் என்று கண்டுபிடிக்க ஒருவர் ஒரு யோசனை சொல்வார் "இடுப்பை கிள்ளினால் முதலாளி கத்துவார்" என்று சொல்லி ஒரு மணிவண்ணனின் இடுப்பை கிள்ளுவார் அதற்கு அவர் கத்துவார். “ஐ இவர் கத்துறார் இவர்தார் மொதலாளி” என்பார்.. கவுண்டமணி இன்னொரு மணிவன்னை கிள்ள அவரும் கத்துவார் அதற்க்கு கவுண்டமணி “ஐ இவரு கத்துறார் இவரும் மொதலாளி, ஐ அவரு கத்துறார் அவரும் மொதலாளி, ஐ நானும் கத்துறேன் நானும் மொதலாளி” என்று நகைப்பார்,,

அதுபோலதான் உள்ளது தமிழகத்தில் இன்றைய சத்திரியரின் தேடல் ,வாள் ஏந்தியவறேல்லாம் தம்மை சத்திரியர் என்று கூறிக்கொள்கிறார்கள்.

பெரியாரின் கேள்வி.

“சத்திரியன் என்ற பெயர் யாருக்கு உரிமை உண்டென்று சொல்ல முடியும்? யார் யாரை ஷத்திரியர் என்று கூப்பிடுவது? சத்திரியன் என்றால் நாட்டை ஆள்பவன், போர்வீரன் என்பதாக பொருள் சொல்ல பட்டிருக்கிறது.அந்த முறைப்படி எல்லோரும் ஷத்திரியர் தாம். ஏதாவது ஒருகாலத்தில் நாட்டை ஆளாதார் யார் இருக்கிறார்? பட்டாளத்தில் போர்வீரனாயிலாதார் யார்? ஒரு காலத்தில் வேளாளர்,நாயிடு, வன்னியர், ராஜுக்கள் , நாடார்கள், செட்டியார்கள், குயவர்கள், மறவர்கள், தொட்டியர்கள் ,பார்பனர்கள் ,முகமதியர்கள் போன்று பலரும் அரசாண்டு இருக்கிறார்கள். இப்போது நம் நாட்டை ஆங்கிலேயர்கள் தான் ஆள்கிறார்கள் அந்த முறைப்படி யாரை ஷத்திரியர் என்று கூப்பிடுவது? ஒரு காலத்தில் ஆண்டவர்களை ஷத்திரியர் என்பதா? அல்லது இப்போது அரசாள்பவர்களை ஷத்திரியர் என்பதா? ஆளுகிரவனை மாத்திரம் சத்திரியன் என்பதா..? அல்லது அவன் குடும்பத்தையே ஷத்திரியர் என்பதா? அல்லது ஆளுகின்ற சாதியை ஷத்திரியர் என்பதா..? 



இப்படி பார்ப்போமானால் உலகத்தில் உலகத்தில் உள்ள மக்கள் பூராவையும் ஷத்திரியர்கள் என்று சொல்ல வேண்டும். என்னென்றால் நாம் காணு சாதியோர் என்போர் ஒரு காலத்தில் ஆண்டுதான் இருக்கிறார்கள் ,யுத்தத்தில் சேவை செய்துதான் இருக்கிறார்கள்”

பெரியார் இன்று இல்லாவிட்டாலும் அவரைப்போலவே இன்று பலருக்கும் ஐயங்கள் ஏற்ப்பட்டிருக்கும்,ஏற்படவும் கூடும்.ஆகவே இவற்றிற்கான விடை கூறவேண்டியது நமது கடமையாகிறது.

பெரியாரின் கேள்வியில் நியாயம் உள்ளதா? வர்ணம் , சாதி என்பவை பிறப்பினால் ஏற்படுபவை . எவரும் தங்கள் விருப்பப்படி தங்கள் வர்ணத்தை சாதியை மாற்றிக்கொள்ள இயலாது. வர்ணம் என்பது ஒப்பனைக்கு பயன்படுத்தும் முகபூச்சோ ,உதட்டு சாயமோ அல்ல, விருப்பம் போல் மாற்றிக்கொள்ள . வர்ணம் , சாதி என்பவை மதமோ,அரசியல் கட்சியோ அல்ல,நினைத்தபடி வெட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள.

கோவில்களில் பூசை செய்வதாலோ ,பூனூல் அணிந்து சந்தியாவந்தனம் ,காயத்திரி மந்திரம் செய்வதினாலோ,எல்லோரும் பிராமணன் ஆகிவிடுவதில்லை. பிராமணனைப் பிறந்தவன் பூநூல் அணியாது, ஆச்சாரங்களை மறந்து மது,மாமிசம் உண்பதால், அவன் பிராமணனில்லை என்றாகிவிடாது, ராணுவத்தில் எத்தனையோ பிராமணர் பணியாற்றுகின்றனரே? வணிகத்தில் ஈடுபட்டவறேல்லாம் வைசியரா? செட்டிகளா? வணிகம் செய்ததால் பெரியாரின் தந்தையும்,தனயனும் ஈரோடு செட்டியாராகிவிடவில்லையே. 


ஆட்சியிலிருந்தோர் , யுத்தசெவை செய்தவர்கள் எல்லோருமே சத்திரியர்தாமே என்ற கேள்வி நையாண்டி தனமாக உள்ளேதே அன்றி, அறிவு பூர்வமாக இல்லை. வணிகத்தில் ஈடுபடாது மருத்துவம், பொறியியல், சட்டம், அரசு ஊழியம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுள்ள செட்டியார்கள் சாதி நீக்கம் செய்யப்படுவதில்லையே. வணிகம் செய்யும் செட்டிதான் வைசியரா? இல்லை அவரது மனைவி மக்களும் வைசியரா? இது என்ன கேள்வி சத்திரியன்,வைசியன்,சூத்திரன்,பிராமணன் என்பதெல்லாம் குலப்பெயர்கள். அவை தனிமனிதப் பெயர்களல்ல.

மன்னர்கள் படைதிரட்டிய போது,பல்வேறு சாதிகளை சமூகங்களைச் சேர்ந்தோரையும் அதில் சேர்த்தனர். அவ்வாறு , வேறு குலங்களிலிருந்து படையில் சேர்ந்தோரெல்லாம் சத்திரிய குலமாகி விடுவதில்லை. சத்திரியன் என்பது பிறப்பினால் ஏற்ப்படுவது ஆகும்.


வாள் ஏந்துபவர்கள் எல்லாம் ஷத்திரியர் ஆகமுடியாது...





உலக வரலாற்றில் மிகச்சிறந்த உயர்ந்த நெடிய தொன்மையான பாரம்பரியமிக் பெருமை மிக்க உயர்நாகரீக கலாச்சாரம் கொண்ட முதன்மையான வரலாறு இந்திய வரலாறாகும்.

இந்திய வரலாறு காலத்தால் நிர்ணயிக்க இயலாத காலந்தொட்டு சிறந்து விளங்கி வந்தது .அவ்வாறு காலத்தால் நிர்ணயிக்க இயலாத காலத்தில் நடந்த நிகழ்வுகளை நாம் புராணங்கள் என்கிறோம். காலத்தால் அறிந்து கொள்ளகூடிய நிகழ்வுகளை வரலாறு என்றே அழைக்கிறோம். இந்தியாவில் புராண காலந்தொட்டே உலகே வியக்கக்கூடிய அளவில் மிக உயர்ந்த கலாசார பண்பாட்டு பெருமைகளுடன் மக்கள் வாழ்ந்துவந்தனர்.

அப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தின் தலைமை பொறுப்பை இரு குடிவழியினர் ஏற்று வழிவழியாக சிறப்புற நடத்தி வந்தனர் .அக்குடி வழியினர் சூரிய குலத்தோர் என்றும் சந்திர குலத்தோர் என்றும் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சத்தியத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து ஒழுகினார்கள். மக்களின் நலனை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட தவ வாழ்கை வாழ்ந்த சீலர்களாக வழிவழியாக திகழ்ந்தார்கள்.

சூரிய சந்திர குலத்தவரின் ஆளுகையின் கீழ் மக்கள் சுபீட்சமாக வாழ்ந்தனர். அடக்குமுறையற்ற சுதந்திரமான மக்கள் கூட்டத்திலிருந்துதான் உயர்நெறி கலாச்சாரங்களும் சிறப்பான தோன்றும். சுபீட்சமாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் சந்திராதித்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டனர். ஆதலால் இந்தியாவின் நாகரிகம் மிகசிறப்புற்று விளங்கியது.


 


இவ்விரு குலத்தாரின் ஆட்சி வடக்கே திபெத் பீடபூமியிலிருந்து தெற்க்கே லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) வரை பரந்திருந்தது.

இவ்வாறு அவர்கள் பரவி வாழ்ந்த பகுதிகளை 56பகுதிகளாகப் பிரித்து 56தேசங்களாக கொண்டு ஆண்டு வந்திருக்கின்றனர். 56 தேசங்களையும் (நாடுகளையும்) க்ஷேத்திரங்கள் என்று அழைத்தனர். க்ஷேத்திரம் என்றால் தமிழில் “நாடு” என்று பொருள்படும். க்ஷேத்திரமாகிய நாடுகளுக்கு அதிபதிகளாமையால் நாடுகளுக்கு அதிபதிகள் என்று பொருள் கொள்ளும் விதமாக க்ஷேத்திரியர்கள் என்று அழைக்கப்பட்டனர் . ஷேத்திரியர் என்ற பதம் மொழிவழக்கில் ஷத்திரியராகி அவர்கள் சூரிய குல சத்திரியர் சந்திரகுல ஷத்திரியர் என்று அழைக்கப்பட்டனர்.


தசரதன், ராமன் போன்றோர் சூரிய குலமென இராமாயணம் கூறுகிறது.
(தென்னாட்டில் சோழ மன்னர்கள் சூரியகுலத்தை சேர்ந்தோர் என அவர்களின் மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள், போன்றவையும், பெரியபுராணம் போன்ற நூல்களும் உணர்த்துகின்றன. முதலாம் இராசராச சோழன் தன்னை ரவிகுல மாணிக்கமெனவும். சத்திரிய சிகாமணி எனவும் கல்வெட்டுகளில் பொறித்துள்ளான். தன் ஆட்சியிலிருந்த பேரரசை ஒன்பது நாடுகளாக பிரித்து அவற்றிலோன்றிற்கு ரவிகுல மாணிக்க வளநாடென்றும்,மற்றொன்றிக்கு சத்திரிய சிகாமணி வளநாடென்றும் பெயரிட்டான்.)





மகாபாரத பாண்டவர் , கவுரவர் போன்றோரும் அரிச்சந்திரன் , துஷ்யந்தன், பரதன் போன்ற வடபுல மன்னர்களும் சந்த்திரகுலத்தோராவர்.
(தமிழ்நாட்டுப் பாண்டியரும்,சேரரும் சந்திரகுலத்தவரே என பண்டைய நூல்கள்,கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் கூறுகின்றன.)

இந்த ஆட்சிகுடியினரான ஷத்திரியர்களுக்கு மக்களை வழிநடத்தி செல்ல வீரத்துடன் ஊக்கம் ,நேர்மை , பொறுமை போன்ற குணங்களும் தேவைப்பட்டன . நேர்மையற்ற வீரம் முரட்டுத்தனமாகும். அது கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் . பலநூறு ஊர்களைக் கொள்ளையிட்டுத் தரைமட்டமாக்கிப் பல லட்சம் மக்களை கொன்றுகுவித்த மங்கோலியத் தலைவன் கேங்கிஸ்கானை வீரன் என்றோ சத்திரியன் என்றோ பாராட்ட இயலாது.

சத்திரியர் போர்களத்திலும் போறுமையுடையோராக ,அடக்கம் உடையோராக இருத்தல் வேண்டும். வெற்றியை மட்டுமே குறியாக கொண்டு ,முடிந்தவரை உயிர்ப்பலியை குறைத்திட வேண்டும். முதியோரை , நோயுற்றோரை பெண்களை, குழந்தைகளைக் கொள்ளாதிருத்தல்,புறமுதுகிடுவோரை ,அடிபணிந்தோரை ,ஆயுதம் இல்லாதோரைத் தாக்காமை, மறைந்திருந்து தாக்காமை, தகுந்த காரணமின்றி உயிர்ப்பலி கொள்ளாமை , தூதுக்கு பின்னரே போருக்குசெல்லுதல் கதிரவன் மறைவுக்குபின் போர் செய்யாதிருத்தல் போன்ற மரபுகளை சத்திரியர் கடைபிடித்தனர்.





“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறா அ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்”
–புறநானூறு பாடல் 9

எனப் போர் துவங்கும் முன் எச்சரித்தனர். “படைக்கருவி இழந்தவன்,காயம்பட்டு வீழ்ந்தவன், ஆயுதம் இல்லாதவன், புறமுதுகிட்டவன், அஞ்சியவன், சரணடைந்தவன், கைதொழுது நிற்ப்பவன்,பிள்ளையிழந்து சொகமுற்றவன், ஆடையற்றவன், உறங்குபவன், உட்காந்திருப்பவன், பிறருடன் போரிட்டுகொண்டிருப்பவன் ,தன்னை எதிர்க்காதவன், வேறு சிந்தனையிலிருப்பவன், இவர்களை கொல்லக்கூடாது என மநுதர்மம் வலியுறுத்துகிறது.- மநுதர்மம் – 8, 138, 139.

இவ்வாறு நீதிநேரிமுரைகளுக்குக் கட்டுப்பட்டு போரிடுதலே அறப்போராகும்.
சத்திரியர் முறையானப் போர்பயிற்சி பெற்று , அறப்போர் முறையினைக் கையாண்டனர். அறப்போருக்கு மாறானது “மறப்போராகும்” . அது இரக்கமற்ற முறையில் கொன்றுகுவித்தலும், தீயிட்டு கொளுத்துதலும் , கொள்ளையிடுதலுமாகும். அந்தவகையில் “கவுண்டமணி சொன்னது போல நாங்களும் வாளேந்தினோம் நாங்களும் சத்திரியர்தான்” என்று சிலர் தற்போது கூறத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு சத்திரியரின் தகுதியில் வீரத்தை தவிர வேறு எதாவது பண்பு இருக்கிறதா? இதை அவர்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்திருபார்க்ளா? அப்படி சிந்தித்திருந்தால் அவர்கள் என்றோ உணர்ந்திருப்பார்கள் அவர்கள் “அசூர” குலமென்று. .”வீரம் மட்டும் ஒருவனிடம் இருந்தால் அதற்குப் பெயர் வீரமல்ல “முரட்டுத்தனம்.”



சத்திரியர் யாரும் தவறு செய்தால் மட்டுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்களுக்கு இயல்பாகவே யாரையும் சீண்டி பார்க்கும் குணமோ, மற்றவர்களை துன்புறுத்தி பார்க்கும் குணமோ இராது. அசூரர்கள் அதற்க்கு எதிர்மாறாக இருப்பார்கள். அந்த அசூர்களும் மூவேந்தர் படையில் நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கின்றனர். அதனால்தான் இப்போது மூவேந்தர் தாங்கள்தான் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

“வீரலல்லாதோர் , புறமுதுகிட்டோர், காயம்பட்டோர், வயோதிகர், சிறுவர், இவர்கள் மீது போர் செலுத்துதல் படைமடம்” எனச் சங்கநூல்கள் இழித்துக் கூறுகின்றன. நேர்மையான வீரன் படைமடம் செல்லான் என்பதைப், “படைமடம் படான்பிறர் படைமயக்குரினே” எனப் புறநானூறும், (புறநானூறு-142 ) “படைமயக் குற்றபோதும் படைமட மொன்றில்லாதான்” எனச் சூடாமணியும் சுட்டுகின்றன.(சூடாமணி -9,10)

இவ்வாறு ,வீரத்துடன் பல்வேறு மாண்புகளை பெற்றிருந்தச் சத்திரியகுலமே, தமிழகத்தில் சான்றோர் குலம் எனப்பட்டது. சங்கநூல்களில் பிராமணன் என்ற வடசொல் அந்தணன், பார்ப்பான் எனவும், ஷத்திரியன் என்ற வடசொல் சான்றான் எனவும் எழுதப்பட்டுள்ளதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

//மக்களின் நலனை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட தவ வாழ்கை வாழ்ந்த சீலர்களாக வழிவழியாக திகழ்ந்தார்கள்.// (மக்களின் நல்வாழ்வே தன் உயிர்மூச்சென்று வாழ்ந்த நம் காமராஜர் ஐயாவின் வாழ்வே இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இருக்காதா, எத்தனை ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி தந்த குலம். அதே மரபணுவில் வந்து, அதே உணர்வு இரத்தத்தில் கலந்திருந்தமையால். காமராஜரால் மிக அசாதரணமான, மிகத்திறமையான ஆட்சியை வழங்க முடிந்தது.) 


Thursday, April 16, 2015

காமராஜரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்) (ஆட்டுக்குட்டி கதை பச்சை பொய் என கீழே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது.)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.
அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

ஆட்டுக்குட்டி கதை பச்சை பொய் ஆதாரம்:  

வரலாற்றுப்பிழை!! 
காமரஜரால்தான் முத்துராமலிங்க தேவர்...
தேவரால் காமராஜர் அல்ல....


இந்த காமரஜரால்தான் தேவர் காணொளியில் இந்த நண்பர் கூறும் மற்ற கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால்,
"காமராஜரால் கைகாட்டப்பட்டு, சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் " என்ற வரலாற்று உண்மையையும் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
--------------------------------------------
ஆட்டுகுட்டி கதை பொய் பிரச்சாரம்.

1936 ஆண்டு விருதுநகரில் நடந்த நகராட்சி தேர்தலில் காமராஜர் போட்டியிடும் போது.
" வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல, நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம், காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை என்பதனால். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருக்கு ஒரு ஆட்டுக்குட்டி (ஒருசிலர் ஒரு ஆட்டுக்குட்டி என்கிறார்கள் சிலர் ரெண்டு ஆட்டுக்குட்டி என்கிறார்கள்) வாங்கிகொடுத்து காமராஜரை ஓட்டர் ஆக்கினார்" என்று ஒரு கட்டுக்கதை உலாவி வருகிறது.

அதற்க்கான விடை ஆதாரத்துடன் இங்கே.

1936ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.தனது வெற்றிக்கு முக்கிய காரணமான மிகப்பெரிய ஆர்கனைசரான காமராஜரை கட்சியின் இரண்டாவது பெரியபதவியான ஒரே மாநிலசெயலாளராக்கினார்.

1936ல் ஜில்லா போர்டு தேர்தல் வருகிறது, அந்த காலகட்டத்தில் முதுகளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவராக முத்துராமலிங்கதேவர் பதவி வகித்தார்(இதைவிட பெரிய பதவியை காங்கிரசஸில் தேவர் எந்த காலத்திலும் பெறமுடியவில்லை)
ராமநாதபுரம் முதுகளத்தூர் சர்க்கிள் உறுப்பினராக தேவரும்,கமுதி சர்க்கிள் ஜில்லா போர்டு உறுப்பினராக வீரர்வேலுச்சாமி நாடாரும் தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்றார்கள்.

ஜில்லா போர்டு தலைவராக இருந்த அண்ணல் சவுந்திரபாண்டியன் போல் தானும் ஜில்லா போர்ட் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் குதித்தார் தேவர் .

தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை ஜில்லா போர்ட் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு ஜில்லா போர்டு உறுப்பினர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வாகனத்தில் சென்று பார்த்து நிலமையை தனது ஆதரவாளரான குமாரசாமிராஜாவுக்கு சாதகமாக்கினார் மாநிலசெயலாளர் காமராஜர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்ட் தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் சார்பாக தனதுதீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை வேட்பாளராக அறிவிக்கசெய்தார் காமராஜர்.இதனை ஏற்றுக்கொள்ள கூடாது என தேவரின் உற்ற நண்பரான வீரர்வேலுச்சாமி நாடார் தேவரிடம் நீங்கள் போட்டி இடுங்கள் நான் ஆதரவு தருகிறேன் அல்லது நான் போட்டி போடுகிறேன் நீங்கள் ஆதரவு தாருங்கள் என கேட்டுஇருந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்தேவரே குமாரசாமிராஜாவை முன்மொழிந்து விட்டார்.தான் போட்டியிட்டால் குமாரசாமிராஜாவை தோற்க்கடிக்க முடியாது என்பதே இதற்க்கு காரணம்
,வாய்பூட்டு சட்ட வீரரான தனது நண்பர்வேலுச்சாமி நாடாருக்கும் அவர் ஆதரவு அளிக்காமல் பின்வாங்கி விட்டார் தேவர்.

இதனால் தான் ஜில்லா போர்ட் தலைவராகும் வாய்ப்பை கெடுத்துவிட்டாரே காமராஜர் என்ற கோபம் தேவருக்கு உண்டு அதன் வெளிப்பாடே சுமார் 20 வருடங்களுக்கு பின் பொய்யாக ஒவ்வொரு ஊர்களிலும் ஆட்டுகுட்டி கதை என்ற புளுகுமூட்டைகதைளை கூறித்திரிந்தார் தேவர்.

இந்த உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் தான் தேவருக்கும் வீரர்வேலுச்சாமி நாடாருக்கும் வாய்பூட்டு சட்டம் போடப்பட்டது ஆதாரம் (தி இந்து மதுரை பதிப்பு) 7.11.1936.


1936ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் ,காங்கிரஸ் கட்சியில் சென்னைமாகாணத்தின் ஒரே மாநிலச் செயலாளர் அப்போது முத்துராமலிங்க தேவர் முதுகளத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர். (ஆனால் தேவர் பலமேடைகளில் 1936 ல் காமராஜர் சாதாரண காங்கிரஸ் தொண்டராக இருந்தார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளார்) மேலும் தேவரைவிட காமராஜர் ஆறு வயது பெரியவர். காங்கிரசில் அவரைவிட பல ஆண்டுகளுக்கு முன்பே இணைந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருக்கு வட்டார தலைவர் ஆடு வாங்கி கொடுத்தார் என்பது நம்பக்கூடிய நிகழ்வா? இல்லை காங்கிரசில் தேவரைவிட செல்வாக்கு மிக்க காமராஜர்தான் தேவரை முன்மொழிந்தார் என்பது நம்பக்கூடிய நிகழ்வா? நீங்களே அடிப்படை அறிவோடு சிந்தித்து பாருங்கள்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருக்கு வட்டார தலைவர் ஆடு வாங்கி கொடுத்திருந்தால் அந்த அசாதாரணமான நிகழ்வு நிச்சயம் செய்தியாக வந்திருக்கும்.ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப மாட்டார்கள் ஆதாரம் இருந்தால் செய்தி வெளியிடவும் அறிவுள்ளவர்கள் பொய் செய்திகளை வெளியிட மாட்டார்கள்...

நாங்கள் கூறும் கருத்துக்களில் பகுத்தறிவு உள்ளவர்கள் பார்க்க வேண்டிய ஆதாரங்கள்,

1.1936ல் காமராஜரின் பதவி மாநில காங்கிரஸ் கட்சியின் சக்திவாய்ந்த மாநில செயலாளர் பதவி(ஆதாரம் தமிழக அரசியல் வரலாறு)

2.முத்துராமலிங்கதேவர் முதுகளத்தூர் தாலூக்கா காங்கிரஸ் தலைவராக இருந்தார்(ஆதாரம் 7.11.1936.தி இந்து மதுரை பதிப்பு)

3.நடைபெறாத சம்பவத்தை மாவட்ட அளவிலான 3+1 எம் எல் ஏகளின் தலைவர் முத்துராமலிங்கதேவர் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் பேசி திரிந்துள்ளார்,இந்த பொய்னால் அரசியலில் தேவரால் முன்னேற முடியவில்லை,

4MLA பதவிகள் மட்டுமே கடைசிவரை கிடைத்தது.4 தேவரின் பொய்களால் காமராஜருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை கூட்டணி இல்லாமல் தனித்தே 45%வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் அறியணை ஏறினார் முதல்வர் காமராஜர்.

ஆதாரமற்ற பொய்கதைகளை கூறி திரிந்த முத்துராமலிங்கதேவரை மக்கள் புறக்கணித்து அவரது கட்சியின் மாநில அந்தஸ்த்தையும் அவரது சிங்கம் சின்னத்தையும் இழக்க செய்தனர்..

ஆட்டுக்குட்டி கதையை நம்பிய தேவர் சமுதாய இளைஞர்கள் சிலர் இதை கூறி தேவர் புகழ் பாடி வருகின்றனர் இது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். உண்மை சிலநேரங்களில் கசக்கும்.
தன்மானம் முள்ளவர்கள் பகிருங்கள்..

இந்த நண்பர் கூறுவதே உண்மை. காமராஜரும் தேவரும் ஆரம்பகாலகட்டத்தில் நல்ல நண்பர்கள். கமராஜரால்தான் தேவர்


போலி புகைப்படம்: 
 

ஒரு சிறு கும்பலின் பொய் பிரச்சாரத்தின் முகமுடி இன்று ஆதாரத்துடன்  கிழித்தெரியப்படுகிறது.

1936ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராக தீரர் சத்தியமூர்த்தி இருந்தபோது அவருக்கு அடுத்த இடத்தில் செயலாளராக காமராஜர் இருந்தது தமிழக அரசியல் வரலாறை படித்து தெரிந்துகொள்ளலாம
்.

அமைப்பு பணிகளை முழுமையான ஆர்கணைசரான காமராஜரிடம் முழுமையாக ஒப்படைத்தார் அறிவுஜீவியான சத்தியமூர்த்தி.அப்போது முதுகளத்தூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்(ஆதாரம் தி இந்து 7.11.1936.மதுரை பதிப்பு)அந்த காலகட்டத்தில் காமராஜரின் வயது33,தேவரின் வயது28.

தேவருக்கும்,வீரர் வேலுச்சாமி நாடாருக்கும்,வாய்பூட்டு சட்டம் முதுகளத்தூர் தாலுக்காவிற்குள் மட்டும் போடப்பட்டு இருந்தது.இரண்டு பேருமே ஜில்லா போர்டு உறுப்பினராக போட்டியிட விரும்பியபோது அம் மாவட்டத்தை சேர்ந்த மாநிலசெயலாளர் காமராஜர் தேவருக்கு முதுகளத்தூர் சர்க்களில் நிற்க்கும்படியும் வீரர் வேலுச்சாமிநாடாரை கமுதிசர்க்களில் நிற்கசெய்யும்படி செய்தார்.

தேர்தலுக்கு பிறகு ஜில்லாபோர்டு சேர்மனாக தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை வேட்பாளராக சத்தியமூர்த்தி மூலம் அறிவிக்கசெய்தார் அவர் ஜில்லாபோர்டு தலைவரானார் இது வரலாறு.

அதேபோல் 1946ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது தேவருக்கு ராமநாதபுரம் கிராமம் பொது(முதுகளத்தூர்)தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் இவை அனைத்தும் ஆதாரபூர்வமான உண்மைகள்.

இந்த உண்மைகளை மறைப்பதற்க்காக சிலர் வதந்திகளையும்,கட்டுகதைகளையும் பரப்பி விடுகிறார்கள்.இதில் ஆட்டுகுட்டிகதை,குதிரைகதைகளும் அடங்கும்.அத்தைகைய மோசடிகளில் ஒன்றுதான் முத்துரங்கமுதலியார் படத்தை போட்டுவிட்டு முத்துராமலிங்கதேவர் படம் என்று சிலர் பொய்யாக பரப்புரை செய்துவருகின்றனர். 

"முத்துரங்கமுதலியார்" அவர்கள் பழம்பெரும் தேசபக்தர்.மூதறினர் ராஜாஜியின் தீவிர ஆதரவாளர் முத்துராமலிங்கதேவரைவிட மூத்தவர்,பெரியவர் பக்தவச்சலத்தின் மாமனார்,1938ம் வருடம் இவர் காங்கிரஸின் மாநிலதலைவராக இருந்தார்.

செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் அவர்களுடன் முத்துரங்கமுதலியார் இருக்கும் படத்தை போட்டுவிட்டு முத்துராமலிங்கதேவர் படம் என்று சிலர் வரலாற்று மோசடி வேலை. இதை பசும்பொன் தேவர் நினைவு இல்லத்தில் கூட அதை தேவர் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய மோசடி என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டும் 1930 களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தேவர் காமராஜரை விட 5 வயது சிறியவர், அந்த புகைப்படத்தை பார்த்தாலே புரியும் காமராஜரின் அந்த வயது தோற்றத்தில் தேவர் எப்படி இருந்திருப்பார் என்று, ஆனால் அது முத்துரங்க முதலியார் என்பதனால் சிறிது முதிர்ந்த தோற்றம் நமக்கு அதை உணர்த்துகிறது.

முத்துரங்கமுதலியார்படத்தையும்,முத்துராமலிங்கதேவர் படத்தையும் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது என்பது தெள்ளதெளிவாக தெரியும். 
இரண்டு படத்தையும் வெளியிட்டு உள்ளோம்.

இந்த மோசடியை நம்பி ஏமாந்த அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்திருந்தாலும் அய்யோ நாம் ஏமாந்துவிட்டோமே என்று தங்களது செருப்பை எடுத்து தாங்களே அடித்துகொள்ளவும்,

இந்த மோசடியால் ஏமாந்த அரசியல் வாதிகள், பத்திரிக்கையாளர்கள், அனைவருக்கும் இது பொருந்தும்.தமிழ் உலகம் மோசடி பேர்வழிகளின் உண்மை ரூபத்தை இனியாவது உணரும்.

பதிவு 2 ஷத்திரியர் இரண்டாம் தரக்குடிகளா?

ஷத்திரியர் இரண்டாம் தரக்குடிகளா?
முந்தைய பதிவில் (பதிவு 1’ல்) தமிழகத்தில் சத்திரியர்கள் இல்லை என்று சொல்வது அறியாமை என்று பார்த்தோம்.
இந்தப்பதிவில் சத்திரியரே முதற்குடியினர் என்பதை பார்ப்போம். “ஒருவர் “நாங்கள் ஷத்திரியர்” என்று கூறிய உடனே அவர்கள் பிராமணனுக்கு கீழ்படிந்தவர்கள் என்றாகிவிட்டது போல சிலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல.
சத்திரியன் இரண்டாம் வர்ணத்தான் என யார்கூரியது? சத்திரியன் இரண்டாம் வர்ணத்தான் அல்லன் ,அவனே முதல் வர்ணத்தான். மநுதர்மத்திற்கு முந்தைய யுத்த தர்மம் ‘சத்திரியனே அனைவரிலும் உயர்ந்தவன் எனக் கூறுகிறது.

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’ -குறள் 543
எனத் திருவள்ளுவர் கூறியதின் பொருள் யாது? உலகை ஆளுதலும் மக்களை காத்தலும் சத்திரியனின் கடமையாகக் கூறப்பட்டுள்ளபோது அவன் எவ்வாறு இரண்டாம் வர்ணமாக முடியும்? (மநுதர்மம் –அத்தியாயம்,சுலோகம் 72)
வாகனம்,படைக்கலன் இவற்றை தொட்டாலே சத்திரியனுக்கு தீட்டு விலகும்; நீராடினால்தான் பிராமணனுக்கு தீட்டு போகும்(மேலது -6;125)
‘போரில் விழுப்புண்பட்டு இறக்கும் சத்திரியனுக்கு தீட்டு இல்லை; அவனுக்கு வேள்வி செய்வதனால் மேலுலக வாழ்வு கிடைக்கும் எனவும் மநுதர்மம் கூறுகிறது .
சத்திரியனிடம் பொருள்பெற்று ஜீவனம் நடத்த வேண்டியவனே பிராமணன். பிராமணனுக்கு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் கடமை உள்ளவன் சத்திரியன். ஆதலால் சத்திரியன் வசித்த இடத்திலே பிராமணனும் வசித்தான். “பிராமணன் பிழைப்பைத் தேடவேண்டியவன் ; வெகுமதியை ஏற்க வேண்டியவன். ஆனால் மன்னன் விரும்பாவிட்டால் விலக்கப்படக் கூடியவன்” என அயித்த்ரேயபிராமணம் கூறுகிறது.(R.S Sharma, Ancient India, Quoted by Er. T.Thangavel தமிழ் மறைகளும் வடவேதங்களும்)
இந்நிலையில் சத்திரியன் எவ்வாறு இரண்டாம் தரக்குடியவான்? அந்தணரால் உருவாக்கப்பட்டவர்களான அக்னிகுல சத்திரியர்கள் அந்தணர்ருக்கு கீழ்பட்டவர் ஆகலாம்.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் பிராமணர் சொற்ப்படிதான் ஆட்சி செய்தனர் , அவர்களுக்கு அடிபணிந்தே வாழ்ந்தனர் என்றெல்லாம் சில மேதைகள் கதைப்பது வேடிக்கையாய் உள்ளது. பிற்க்கலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் ,உடையாக்கள் ,ராயர் , போன்றோர் அவ்விதம் செயல்பட்டுள்ளனர். இன்றைய அரசியல் தலைவர்கள் எவரெவர் கால்களிலேல்லாமோ விழுகின்றனர்.இக்காலத் திரைப்படங்கள் ,தொலைகாட்சி தொடர்கள், பிராமணர் முன் அரசர்கள் அடங்கி ஒடுங்கிப் பிராணம் செய்வதாகவும், பிராமணர் ஆணவத்தோடு இடும் கட்டளைகளை அவன் கைகட்டிப் பயபக்தியுடன் கேட்டுக்கொள்வதாகவும் காட்டுகின்றன. சிறுவர்களுக்கான படக்கதை நூல்ககூட இவ்விதமாகவே உருவகப்படுத்தப்படுகின்றன. புராணங்களில் சொல்லப்பட்டவை உண்மைக்கதைகள். திரைப்படங்களில் வருபவை திட்டமிட்ட பிரச்சாரமாகும்.

பண்டைய தமிழ் மக்கள் சத்திரிய அரசர்களைத்தான் காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமாகப் போற்றி வந்தனரே அன்றி அந்தணரை அல்ல.
தி.வை சதாசிவ பண்டாரத்தார், சோழர் வரலாறு,பக்கம் 478 . “பெருமாள் முகங்கண்ட பின்னர் “- முத்தொள்ளாயிரம் 81.
“புகா அர்ப் பெருமானார்” –முத்தொ.. 90 .
‘திறந்திடுமின்... .... ..... ரமிழ்நர் பெருமானைக், கண்ணாரக் காணக் கதவு” – முத்தொ.. 85
“மன்னனைக் கண்டு மகிழ்தல் திருமாலைக் கண்டு மகிழ்வதற்கு ஒப்பாகும்” என ஆழ்வாரின் திருவாய்மொழி கூறுகிறது. ( 34-8) .
முறைசெய்து காக்கும் மன்னனைத்தான் மக்கட்கு இறை எனத் திருவள்ளுவர் கூறினாரே அன்றி,அந்தணரை அல்ல. நாட்டிற்கு உயிரானவன் அரசனே என மநுதர்மம் கூறுகிறது. மேற்சொன்ன நூல்களில் உயிரானவன் அரசன் எனக் கூறப்பட்டுள்ளோர் சத்திரிய குல மன்னர்களே ஆவர். அரசனின் அரண்மனையைத்தான் கோயில்,பெருங்கோயில் என அழைத்தனரே அன்றி அந்தணரின் வீட்டை அல்ல. ஆகவே சத்திரியன் இரண்டாம் தரக்குடி அல்லன்.
“அரச வருணத்தாற்குச் சேவை செய்வோரில் பார்ப்பாரும் அடங்குவர். பார்ப்பார் ,உயர்குடி பிறந்த செவகராகவே செயல்பட்டுள்ளனர். தமிழ் மரபு பெயரளவில் அந்தணருக்கு முதலிடம் கொடுத்தாலும். பிராமணங்கள் தருமசூத்திர மரபுப்படி அரசனுக்கே உச்ச அதிகாரத்தை கொடுக்கின்றது.
“மனுஸ்மிருதி இயற்றப்பட்ட காலத்தில் வட இந்தியா முழுவதும் சூரிய சந்திர குலங்களைச் சேராத அக்னிகுல (ராஜ புத்திரர்) அரசர்களின் ஆட்சியே நடந்தது. அக்னி குலத்தவரின் சமூக அந்தஸ்தை பிராமணர்களே தீர்மானித்தனர்.எனவே தான் மனுஸ்மிருதி சத்திரியர்களை பிராமணர்களை விடக் கீழ் நிலையில் வைத்தது”
நாடு முழுவதும் சத்திரியர் ஆட்சிகள் முடிவுற்று,ஆங்காங்கே தாழ்ந்த குலங்களின் ஆட்சிகள் ஏற்ப்பட்டன. புதிதாக ஆட்சிக்கு வந்த ராஜபுத்திரர்,லிச்சாவி, மல்லர், ராயர், உடையார், நாயக்கர், தம்புரான்கள் போன்ற்ப்பல அரசர்களும் தமது பதவியைக் காத்துக்கொள்ள பிராமணர்களின் அதிகாரத்தையும் ஆசியையும் நாடவேண்டிய இருந்தது. இல்லையெனில் ,”நீசனின் ஆட்சியில் நாடு நாசமாகிவிட்டது: ஆட்சியில் இருப்பவனிடம் தர்மம் ,நீதி இல்லாததால், வர்ணபகவான் வர்சாவை பொழியச் செய்யவில்லை; தெய்வக் குற்றத்தால் நாட்டில் கொள்ளை நோய்கள் ஏற்ப்பட்டு உயிர்ப்பலியாகிறது”, என்றெல்லாம் மக்களிடம் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கவிழ்த்திருப்பர் “நீயாவது படையெடுத்துவந்து தர்மத்தை காப்பாற்று” என ,அண்டை நாட்டு மன்னரைத் தூண்டி விட்டிருப்பர்.
பிராமணனுக்கு சாதகமாக ஆட்சிகளையே,நாட்டின் பொற்காலம் என வரலாற்றில் வரைவது வாடிக்கையாகிவிட்டது, சான்றாக சமண,புத்த மதங்களின் தாக்கத்தால் சரிந்து போயிருந்தப் பிராமணர் வாழ்வைத் தூக்கி நிறுத்தி மறுவாழ்வளித்த குப்தர்களின் ஆட்சியையே இன்று வரையில் போர்க்கால ஆட்சி எனப் போற்றுகின்றனர்.
சத்திரியர் ஆட்சிகளிலும், பிராமணனுக்கு சலுகைகள், தானங்கள் வழகப்பட்டுள்ளன. அமைச்சர் , தளபதி பதவிகள் தரப்பெற்றுள்ளன.ஆனாலும், அவற்றிற்கும் ஓர் வரம்பிருந்தது; வரைமுறைகளற்றச் சலுகைள் வழங்கப்படதில்லை. பிராமணராயிரும்,தவறு செய்தவரகளைத் தண்டிக்காமல் விட்டதில்லை.
ஆனால் இடையில் வந்தவர்களின் ஆட்சிகளில்தான்,பிராமணரின் அதிகார அத்துமீறல்கள் நடந்துள்ளன. சான்றாக “திருமலை நாயக்கனின் தளவாயாக இருந்த பிராமணனான ராமையப்பன் பழனிக்குச் சென்றிருந்த போது , அங்குள்ள தண்டாயுதபாணி கோயிலில் தரப்பெற்ற பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டான். காரணம், அக்கோயிலில் பரம்பரையாகப் பூசை செய்துவந்தச் சைவப் பண்டாரங்களின் கையால்ப் பிரசாதம் வாங்குவது,தன சாதி அந்தஸ்துக்கு இழுக்கு என அவன் எண்ணியதே தண்டாயுதபாணியின் பிரசாதத்தை விட,எவர்கையால் வாங்குகிறோம் என்பதே அவனுக்கு முக்கியமாகப்பட்டது. விளைவு? அப்பண்டாரங்கள் நீக்கப்பட்டு .அப்பணிக்கு ஐந்து பிராமணர்கள் உடனடியாக நியமிக்கப் பட்டனர். இப்படிச்சம்பவம் ஒன்றையாவது சத்திரியனின் ஆட்சியில் காணமுடியுமா? (நாடு விடுதலை அடைந்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக அறநிலைத்துறைக்கே மைச்ராக்கியது, ஒரு சத்திரியரின் ஆட்சிதான்.மூன்றாவது அமைச்சரவை அமைத்த போதுதான், ஒரு பிராமணருக்கே அமைச்சரவையில் இடம் தரப்பட்டது.)

சத்திரிய மன்னன் எவனும், பிராமணன் காலில் விழுந்து ஆசிபெற்றதாகச் சங்க நூல்களிலோ , பிற்கால இலக்கியங்களிலோ, கவேட்டு, செப்பெடுகளிலோ காணப்படவில்லை. காலையில் துயில் எழும்போது பிராமணன் முகத்தில் விழிக்கவேண்டும்; இரவில் படுக்கும் முன்னரும் பிராமணனிடம் ஆசிபெறவேண்டும்; உண்பதற்கு உறங்குவதற்கும் கூடப் பிராமனின் ஆலோசனையைப் பெறவேண்டும். அமைச்சராகும் தகுதி,பிராமணனுக்கே உண்டு என்ற நியதிகளேல்லாம். புதிதாக ஏற்றம் கண்ட பிறங்கடைகளின் ஆட்சியில் ஏற்ப்பட்ட புதுச்சட்டங்களே.
“புவன முழுதுடையாளோடும் வீற்றிருந்த..’,
உலகமுழுதுடையாலோடும் வீற்றிருந்தருளிய..”,
“முக்கோக் கிழனாடிகளோடும் வீற்றிருந்தருளிய ..”
என்றெல்லாம் , தம் பட்டத்தரசியுடன் அரியணையில் வீற்று இருந்ததாக மெய்க்கீர்த்திகளில் மூவேந்தரும் (சேர சோழ பாண்டியர்) கூறியுள்ளனரே தவிரே,
‘அந்தணரோடு வீற்றிருந்தருளிய ‘ என்றோ
‘அந்தணர் ஆசியுடன் ,அவர்தம் கீழ் வீற்றிருந்தருளிய ..’ என்றோ ஒருபோதும் அன்னோர் கூறியதில்லை.

மூவேந்தரிடம் , பிராமணர் கையேந்தி நின்றனரே தவிர, வேந்தர்கள் பிராமணரிடம் கையேந்தவில்லை. ‘குடியிருக்க பிரமதேயமாக நிலம் வேண்டும். (தங்களின் தொழிர்கூடங்களான) கோயில்களுக்கு மான்யம் வேண்டும்; மண்டபம் கட்டவேண்டும் ;கோபுரம் கட்டவேண்டும்; சம்ரோட்ஷணம் செய்ய வேண்டும். பாலாபிஷேகத்துக்கு பசு வேண்டும்; பஞ்சாமிர்தத்துக்கு பழம் வேண்டும் ‘ விளக்கு எரிக்க (போஜனத்துக்கு) நெய்வேண்டும்; இவ்வாறான வேண்டுகளுடன் தானத்திற்காக அரசரை அண்டியவர்கள் பிராமணரே. இதனை எத்தனையோ கல்வெட்டுகள், செப்பேடுகள் உணர்த்துகின்றன. பொருள் கொடுத்து வேள்வி செய்வித்தவன் சத்திரியன். ஊதியம் பெற்று வேள்வி செய்தவன் பிராமணன். தானம் பெற்று வாழ்வது பிராமணரின் கடமையெனவும் ,தானம் செய்வது சத்திரியரின் கடமையெனவும் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.
தொழ்ற்சாலையில் உடலால் கடினமாக உழைக்கும் தொழிலாளியைவிட, எழுத்துவேலையில் உள்ளவனுக்கு செல்வாக்கு அதிகம். அவனைவிட கண்காணிப்பாளன், மேலாளனுக்கு அதிகாரமும் ஊதியமும் அதிகம்.(ஆனாலும்,சம்பளம் கொடுக்கும் முதலாளியே சர்வ அதிகாரமும் படைத்தவர்) பொதுவாக உடல் உழைப்பைவிட மூளையால் உழைப்பவரே உயர்ந்த இடம் வகிப்பர். எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஐம்புலன்களில் நான்கு புலன்களாக கண் ,காது ,மூக்கு, நாக்கு போன்றவை இருப்பது தலையில். ஆகவேதான்,தலை உடலின் மேற்ப்பாகத்தில் அமைந்துள்ளது.

சிந்தனை ,நினைவு ,ஆற்றலுடன் அனைத்து உறுப்புகளும் கட்டளையிடும் மூளை உச்சத்தில் உள்ளது. ஆகவே மூளையால் உழைப்பவர் முதன்மை பெறுவது இயல்பே.பிராமணர் வேதத்தைக் காதால் கேட்டு, மூளையில் பதியவைத்து, வாயால் ஓதியதால் சிறப்பு பெற்றனர்.தலையால் பிழைப்பவர் என்பதையேப் பிரம்மாவின் தலையில் பிறந்தவர் எனப் பரப்பிவிட்டனர். சத்திரியன் தோள் வலிமையால் நாட்டைக்காத்ததுடன், தலையால் சிந்தித்து நீதி நெறியுடன் ஆட்சி செய்யும் கடமை பெற்றிருந்தான். ஆதலால் சத்திரியனே நாட்டின் தலைமையானவன். ஆனால், பிற்காலத்தில் தோள் வலிமை மட்டுமேப் பெற்றிருந்தோர் ஆட்சிக்கு வரநேர்ந்தமையால், அன்னோர் தம் புத்திக்கொள் முதலுக்காக பிராமணரை சரணடைந்தனர். அதனால் பிராமணர் ஏற்றம் பெற்றனர் .அதன் தொடர்ச்சியாகவே, நாடு விடுதலை பெற்றபோது, அனைத்து உயர்பதவிகளையும் பிராமணர் பங்குபோட்டு கொண்டனர்.
அரசு .மதம் இடையிலான போட்டி, நெடுங்காலமாகவேப் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வந்துள்ளது.இந்தியாவில் சத்திரியர் ,பிராமணர் இடையிலான ஆதிக்க போட்டி வேதகாலம் முதலே உள்ளது. கௌசிக மன்னனான விசுவாமித்திரன் – வசிட்டன் பூசல் முதல், பலவற்றை தனி நூலாகவே எழுதலாம். ஆனாலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம் போன்ற எண்ணற்ற புராணங்களும் சத்திரியரையே தலைவனாகக் கொண்டு இயற்றப் பெற்றுள்ளன அவற்றில் பிராமணர் துணைப் பாத்திரங்களே.
இராமன், கிருஷ்ணன் ,சிவன், முருகன், காளி, லட்சுமி, அய்யப்பன், போன்ற சத்திரிய தெய்வங்களையே, பிராமணர் உட்பட மக்கள் அனைவரும் வணகுகின்றனர் பிராமண தெய்வமாகக் கூறப்படும் பிரம்மாவுக்கோ, ருக்வேதத் தலைவனான இந்திரனுக்கோ வழிபாடில்லை. ஆதி முதலே இருந்துவரும் இந்து மதத்தில் ஏற்ப்பட்ட பிராமண ஆதிக்கத்தால், அதிலிருந்து மக்களை விடுவிக்க சத்திரியர் உருவாக்கிய மதங்களே சமணம்,பௌத்தம்.


இந்து மதத்தில் சங்கரர்,இராமானுசர், மத்வர்,சாய்பாபா,ராகவேந்திரர் போன்றோரின் சமயப்பணிகள், சமயத்திலும்,சமுதாயத்திலும் பிராமண மேலாண்மைக்காக நடைபெற்ற முயற்சிகளே ஆகும். ஆயினும் சத்திரியக் கடவுள்களுக்காக, சத்திரியர்களால் கட்டப்பெற்ற ஆலயங்களில், ஊதியம் பெற்றுப் பணி செய்தவர்களே பிராமணர்.
ஆதலால் சத்திரியர் என்று ஒருவர் சொல்வதினால் தவறோ, இழிவோ இல்லை.ஆனால் இன்று தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொள்வோரிடம் அந்த தகுதி இருக்கிறதா என்பது நியாயமான கேள்வி.

Sunday, April 12, 2015

பதிவு 1 தமிழகத்தில் சத்திரியரே கிடையாதா? வர்ணாசிரமம் தமிழர்களுக்கு கிடையாதா?

தமிழகத்தில் சத்திரியரே கிடையாதா? வர்ணாசிரமம் தமிழர்களுக்கு கிடையாதா?

தமிழன் பழமையான ஒரு இனத்தை சேர்ந்தவன் ,வரலாற்று ஆய்வாளர்களின் காலக்கணிப்புகள் எட்டிப்பார்க்க முடியாத காலகட்டத்திலே கடல் கடந்து பல தேசங்களுக்கு சென்று தனது முத்திரைகளை பதித்தவன் தமிழன். ஆனால் அவன் எப்போதும் பாரதம் என்ற நீரோட்டத்திலிருந்து தனி நதியாக பெருக்கெடுத்து ஓடியவன் அல்ல அப்படி ஓட நினைத்தவனும் அல்ல.
இன்று இந்திய மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து உருவானவை என்பதை நாம் நம்புகிறோம். நாம் இன்று பேசும் தமிழுக்கும் பண்டைய தமிழுக்கும் வேறு பாடு உள்ளதை நாம் தெளிவாக அறிய முடியும். அதே வேறுபாடுதான் மற்ற மொழிகளில் மிக அதிகமாக உள்ளதே அன்றி அதுவும் தமிழே.தமிழிலிருந்து வந்ததே. அந்த மொழிகள் பிரிந்தவாறு நம்மிலிருந்து உருவானவர்கள்தான் இன்று பல இனமாக நாம் கருதும் இந்தியர்கள். இந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ததை நாம் ஏற்றுகொள்கிறோம் ஆனால் இந்தியர்கள் தமிழனிலிருந்து பிரிந்தவர்கள் என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது. தமிழன் என்பவன் தனி இனமல்ல அவனிலிருந்து வந்தவர்களே அனைவரும். தமிழ் நாடு என்பது தனி நாடல்ல நம்மிலிருந்து மொழியால் பிரிந்தவர்களயே நாம் வேறு இனமாக பார்க்கிறோம். அவர்களே இன்று நம்மை தனி இனமாக்கி நம் நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள் அது வேறு விஷயம். நாம் அவர்களிலிருந்து சளைத்தவர்கள் இல்லை என்று அவர்களுக்கு உணரவைக்க வேண்டும்.
உண்மையில் இந்துமதம் நம்முடைய சொத்து . இந்து மதத்திற்கு “இந்து மதம்” என பெயரிட்டது வேண்டுமென்றால் நாம் ஆரியன் என்று சொல்லும் ஒருவனாக இருக்கலாம். உண்மையில் அம்மதம் நம் பண்டைய தமிழர்கள் “மூதாதையர் வழிபாடாக” பின்பற்றியது. அதிலிருந்து வந்ததே இன்றைய இந்துமதம்.
இன்று சிலர் தமிழனுக்கும் இந்து மதத்திற்கும் ,தமிழனுக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எந்த சம்மந்தமும் இல்லை என்று பேசி வருகிறார்கள்.
உதாரணமாக திருக்குறள் என்பது எவ்வளவு சிறப்புவாய்ந்த ஒரு சிந்தனைக்களஞ்சியம் என்று நமக்கு தெரியும் , கொல்லாமை கள்ளுண்ணாமை போன்றவைகளை வள்ளுவர் பேசுகிறார் எனவே திருக்குறள் இந்து மதத்திற்கு சொந்த மானதல்ல அது தமிழன் என்ற தனி இனத்திற்க்காக அவனது கோட்பாடுகளால் (புதிதாக நம் மனதில் உருவாக்கப்பட்ட கோட்பாடு) வடுக்கப்பட நூல் போல சிலர் பெசிவருகிரார்கள். அகிம்சை மட்டுமே வள்ளுவரின் தத்துவம் என்றால் தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்குவது ராஜ நீதி என்று இலக்கணம் வகுத்து கொடுத்திருப்பாரா? தமிழனுக்கு இந்து மததத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றால் வள்ளுவர் ஏன் அதில் இந்து மதக்கடவுள்கள் பற்றியும் இந்து மத நம்பிக்கைகள் பற்றியும் அம்மதத்தின் சில ஆணிவேர் போன்ற எண்ணங்கள் பற்றியும் பல செய்திகளை கொடுத்தார்?
"வகுத்தான் வகுத்த வகைஅல்லால் ..", " அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு"
என்று கூறுவதிலும் இறைவனை அதுவும் திருமாலை உணர்த்துகிறார்.
"அடி அளந்தான்" என்பது திருமால். ஆண்டாள் கூட "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்று திருமாலை வழி படுகிறாள்.
"விசும்புளோர் கோமான் இந்திரனே சாலும் கரி" என்று வள்ளுவர் கூறும் போது தேவர்களின் தலைவன் இந்திரன் என்று இந்து மதத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறார்.
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"
- இங்கே எண்குணத்தான் என்பது 8 குணங்களை உடைய சிவ பெருமானைக்குறிக்கிறது. சிவ பெருமானுக்கு 8 குணங்கள் உள்ளன என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்"
- மலரின்மேல் அமர்ந்துள்ள கடவுள் - பிரம்மா - அடி சேர்ந்தார் இவ்வுலகில் நீடூழி வாழ்வார்
"அந்தணன் என்போன் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்" என்று கூறும் போது, அந்தணர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் நடக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
"ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்" என்று அறு தொழிலோர் என்று அந்தணர்களை குறிப்பிடுகிறார். மேலும், ஒரு நாட்டின் அரசன் சரியாக ஆட்சி புரியவில்லை என்பதை அந்த நாட்டின் பசு மாடுகளின் பால் வளம் குறைவதாலும், அந்தணர்கள் தங்கள் நூலான வேதத்தை மறப்பதாலும் உணரலாம் என்று கூறுகிறார்
இந்து மதத்தில் மறு பிறப்பு பற்றிய நம்பிக்கை மிகவும் இன்றியமையாதது.
மறு பிறப்பு பற்றி வள்ளுவர்:
ஒருவன் தன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு 7 பிறவிகளிலும் நன்மை பயக்கும் என்பதை ,
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து" என்று அறிவிக்கிறார்.
தமிழ்நிலத்தில் பார்புகழும் நல்லாட்சி தந்த ,பண்டைய தமிழகத்தை ஆண்ட மாபெரும் புகழுக்குரிய பெரிய மன்னர்களான சேர சோழ பாண்டியர்கள் அனைவரும் ஷத்திரியர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் ,மெய்கீர்த்திகள், கைபீதுகள் மற்றும் நம் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன.

மேலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற தமிழ் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் ஆன்மீகத்தன்மை மட்டுமல்ல வேதநெறியோடு தமிழர்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் மதிப்பையும் பக்தியையும் தெளிவாக காட்டுகிறது.பின்னர் எப்படி தமிழர்களுக்கும் இந்து மதத்திற்க்கும் சம்மந்தம் இல்லை, தமிழர்களுக்கு வர்ணாசிரமம் கிடையாது என்று கூறமுடியும் ?
வள்ளுவன் கூறிய
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்ற குறளின் விளக்கக்கத்தில் பிறப்பினால் அனைவரும் சமம், ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் அவர்களின் தகுதி ஒத்திருப்பதில்லை என்று கூறுவது அவரவரை செய்கின்ற தொழிலின் மூலம் வேறுபடுத்தி காட்டுகின்றதே? அதுவே இந்து மதத்தின் வர்ணாசிரமம். அக்குறளின் உண்மையான கருத்து. பிறக்கும் உயிர்கள் அனைத்தும் சமமே (சமமாக மதிக்கப்படவேண்டும்) தவிர ஒருவனின் குணம் அவன் செய்தொழிலால் வேறுபடும் என்பதே. இதன் மூலம் ஒருவன் தன் தகுதிக்கு எட்டாத இடத்தில் இருந்து அந்த பதவியின் கடமையை முடிக்க இயலாது என்பதே ஆகும்.
எடுத்துகாட்டாக சிறந்த ஆட்சியை ஒரு ஷதிரியனால்தான் வழங்கமுடியும் என்று அன்று இருந்தது. அந்த சிறந்த ஆட்சியை வேறு வர்ணத்தார் வழங்க இயலாது.ஆனால் இன்று அப்படி இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி.
ஒருவன் “நான் ஷத்திரியர்” என்று கூறிய உடனே அவன் பிராமணனுக்கு கீழ்நிலையில் உள்ளவன் என்றாகிவிட்டது என சிலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல. ஷத்திரியர்கள் இரண்டாம் தரக்குடியினர் அல்லர் .அவரே முதல் தரக்குடியினர். அதற்கான விளக்கம் மற்றொரு பதிவில்... கண்டிப்பாக இங்கு இடப்பட்டுள அனைத்து பதிவையும் படியுங்கள்.
மகாவீரர் வட நாட்டில் பிறந்தவர் எப்படி சான்றோர் குல நாடார் சமுகம் என்று சொல்ல முடியும் என்று சிலர்க்கு சந்தேகம் வரலாம். சந்தேகத்தை தீர்க்கும் விதமாக இங்கே சில ஆதாரங்களை எழுத வேண்டியிருக்கிறது.
தூத்துக்குடி யும் சமண மதமும் கன்னியாகுமரியும் சமண மதமும் சிவகங்கை மாவட்டமும் உள்ளே படிங்க புரியும்.
தமிழ் மன்னர்கள்(சேர சோழ பாண்டிய நாடார்கள் ) கிறிஸ்து பிறக்கும் காலம் முன்பே வட நாடுகள் வரை தங்கள் ஆட்சியை நிறுவியிருந்தனர் இது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ்மன்னர்கள் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பே காதில் தடையம்(புரியும்படி சொல்லவேண்டுமென்றால் கடுக்கன் அல்லது கம்மல் ) அணிந்திருந்தனர். நம்முடைய பாட்டிகள் அணிந்திருக்கும் பெரிய கம்மல் அதாவது தடையம் அல்லது காது வடித்தல் போல பழைய காலத்தில் கிறிஸ்து பிறக்கும் காலத்திருக்கு முன்பே நாட்டை ஆளும் குலத்தை சேர்ந்த மன்னர் குல ஆண்களும் இந்த காது வடிக்கும் முறையை பின் பற்றியிருந்தனர்..


சமண மதத்தை உருவாக்கிய மகாவீரர் காதுகளையும் காது வடித்தல் செய்திருப்பார்.புகை படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள். நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் அனைவரும் காது வடிப்பு செய்திருந்தனர்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமண மதம் தோற்றுவித்த மகாவீரரின் முன்னோர்கள் தமிழகத்தில் இருந்து வடக்கே ஒரிசாவில் சென்று ஆட்சி செய்த சான்றோர் குல மன்னர்கள் ஆவார்.
ஆகவே தான் ராஜா குடும்பத்தில் பிறந்த மகாவீரரும் காதுகளை வடித்திருப்பார். நாட்டையும் ஆட்சியையும் துறந்து சமண மத கொள்கைகளை பரப்ப சென்றார்..அதுவே சமண மதமாக மாறியது.
ஆகவே தான் மகாவீரர் போலவே சமண மதத்தினரும்
தங்கள் காதுகளை வடித்திருந்தனர் .
சமண முனிவர்கள் தங்களுடைய காதினை வடிகாதாகத் தொங்க விட்டுக் கொண்டனர். என்பதை சமணர்மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம்,ஆனைமலை, அழகர்மலை, ஆறுநாட்டான்மலை,சித்தன்னவாசல்,ஆகியவற்றில் காணப்படும் புடைச்சிற்பங்கள்,தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம். தங்களுடைய காதினை வடித்துக் கொண்டது நம்பிக்கை வயப்பட்ட பண்பாட்டுக் கூறாகக் கருதலாம். வடிகாது வழக்காறு தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக இருந்தது என்பதற்கு அடிப்படையாக பல்லவர் குடைவரைப் படைப்புக்களில் முதன்மையான மாமல்லபுரத்திலும், பாண்டியரின் குடைவரைப் படைப்புக்களில் கழுகுமலையிலும், சோழரின் கலைப்படைப்புக்களில் வடிகாது வடிவங்கள் தஞ்சையிலும் நிறைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் காணப்பெறும் சிலைகள், கோபுரங்கள்,தூண் சிற்பங்கள்,ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்தவர்களுடைய காலங்களிலும் வடிகாது என்பது தொடர்ந்து வரும் கூறாக காட்சி தருகின்றன. .
.
காதில் அணியும் அணிகலன்கள் பல்வேறு பெயரிட்டு அழைக்கப் பெற்றன. தோடு என்ற அணிகலன் காதுடன் இணைக்கப் பெற்று ஒட்டியிருக்கும்.தோட்டிலிருந்து தொங்கும் நகை தொங்கட்டான் எனப்படும். ஒட்டு,ஓலை, சின்னப்பூ,கொட்பூ, கன்னப்பூ, குழை [3], கம்பி,வல்லிகை, குணுக்கு,தருப்பு,கடுக்கண், மகரி,வீரசன்னம், திரிசரி,பஞ்சரி, நவசரி, நவகண்டி,அட்டிகை, கடிப்பினை, தண்டட்டி, குண்டலம்,கொப்பு,புகடி, முருகு, செவிப்பூ, மடல், சன்னாவதஞ்சம்,பாம்பணி,நாகபடம்,பாம்படம்,குதம்பை, நீலக்குதம்பை, சந்திரபாணி, குரடு,செவியீடு என்பனவாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,பெருமாளின் நவத் திருப்பதிகள் பல்வேறு சிறப்பியல்புகளுடன் அமைந்துள்ளன.அவற்றுள் தென்திருப்பேரை [3] மூலவர் மகரத்தை [மீனை] அணிகலனாக குழையாக [4] தனது வடிகாதில் அணிந்து கொண்டதால்,மகரநெடுங்குழைக்காதர் என்று அழைக்கப்படுகின்றார்.
பெண்களும் மகரக்குழையை [5] அணிந்தனர் என்று ஒட்டக்கூத்தர் கூறுகின்றார்.
தெய்வங்கள்,உயர் நிலையில் மற்றவர்களால் வழிபடத்தக்க இடத்தில் வாழ்ந்தோர் மட்டுமின்றி எளிய மக்களும் நாகரீகத்தின் வெளிப்பாடாகக் காது வடித்தலைக் கொண்டிருந்தனர்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களுடைய காதுகளை வடித்துக் கொண்டு அழகுபடுத்திக் கொண்டனர் அதற்குச் சான்றாக முற்கால ஓவியங்களும்,சிற்பங்களும் உள்ளன.
பொற்பூ
காதிலணியும் அணிகலன் பொற் கன்னப்பூ என்றும்,மற்றுமொரு அணிகலன் நாறைக்கண்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. வளைய வடிவில் இருபகுதிகளாகச் செய்யப்பட்டு திருகாணி மூலம் பொருத்துவது தாழக்கூட்டுக்கம்பி ஆகும். சோழர் காலத்தில் முத்து பதிக்கப்பட்ட காதணி வடுகவாலி எனப்பட்டது. அது வட்டவடிவில் அமைந்ததாகும். வட்டவடிவ வாலி மக்களால் இரட்டை வாலி [7] என்றும் அழைக்கப்படுகிறது.
பூடி
மேற்காதில் அழகுற பூவடிவத்தில் அணிவது கொட்பூ எனப்பட்டது. திருகாணியோடு இருக்கும். கொட்பூ “ பூடி “ என்று தூத்துக்குடி வட்டாரத்தில் அழைக்கப்படுகின்றது. நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “முத்தின் சிடுக்கு”எனப்படும்.[8]. இப்பகுதியில் நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “கடுக்கண்” என்று கூறப்படுகிறது. “சிடுக்கு” “கடுக்கனாக”திரிபடைந்துள்ளது.
நாகரிக வளர்ச்சி
நாகரிக வளர்ச்சி , மக்களின் தகவல் தொடர்பு மேம்பாடு இவற்றால் இந்நாளில் காதுவடிக்கும் வழக்காறு நின்று போயிற்று. முன்னரே காது வடித்தவர்கள் மருத்துவ அறுவைச் சிகிச்சை மூலம் வடிகாதை அகற்றி ஒட்டவைத்துள்ளனர்.
துறவிகளான சமணர்கள் தங்களுடைய வடிகாதில் அணிகலன் அணியாததைப் போல தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை இழந்தவர்கள் [ நாடார் சமுதாயத்தினர் ] வடிகாதில் அணிகலன் அணியாது வெள்ளை ஆடை அணிந்து இருந்தது, ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கூறாகும்.
சமண மதம் தமிழகத்தில் ஏன் பரவியது என்றால் சமண மதத்தை உருவாக்கிய மகாவீரர் தமிழ்மன்னர்கள் (சான்றோர் குல நாடார்கள் ) இனத்தை சார்ந்தவர் என்பதே.
இவரின் காலம் கி.மு. 534 - கி.மு. 462
இன்றைய பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக்கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர்; தாயின் பெயர் திரிசலை.
மனைவி பெயர் யசோதா; அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.
இல்வாழ்க்கையை துறந்தது 30ஆம் வயதில்.
தியானத்தில் ஆழ்ந்த வருடங்கள் மொத்தம் 12.
வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.
மக்கள் அவரை ‘மகாவீரர்’ என்று அழைத்தனர்.
வர்த்தமானர் போதித்த மும்மணிகள் ; நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.சமண சமயத்தைப் பின்பற்றி அரசர்கள்; சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்.
சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள் ; சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்கள் மற்றும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும் இயற்றியவர்கள் சமணர்கள்.
சமணக் கட்டடக் கலை: ராஜஸ்தான் -மவுண்ட் அபு, தில்வாரா கோயில். கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில்.
சமணர்களின் புனித நூல்கள் - அங்கங்கள், பூர்வங்கள்.
இவரது தந்தையார் சித்தார்த்தரால் மகாவீரர் பற்றி எழுத பட்ட கல்வெட்டில் மகாவீரர் சந்திரகுல நாடா புத்திரன் என்று பிராமி மொழியில் பதிய பட்டுள்ளது ." இதை " nadar history " என்ற புத்தகத்தில் 198 ம் பக்கத்தில் டாக்டர் இம்மானுவேல் பதிவு செய்துள்ளார்..இதன் மூலம் நம் குல அரசர்கள் வாட நாட்டையும் ஆட்சி செய்தனர் என்பது அறியமுடிகிறது. இன்னும் வாசிக்க படாமல் பல்வேறு கல்வெட்டுக்களும் இருக்கின்றன ஒரிசாவில். நம் நாடார் குலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் குறைவு. இன்னும் நிறைய வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கினால் நம்முடைய பல அற்புத வரலாறுகளை உருவாக்க வசதியாக இருக்கும்.......
மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமண மதம் பரப்ப கி.மு.1 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமண மதத்தை பரப்புவதற்காக தமிழ்நாட்டிற்கு சமண தீர்த்தங்கரர்கள் வந்தனர். தமிழ் நாட்டில் பல இடங்களில் படுக்கைகளை அமைத்தனர் . 2000 ம் ஆண்டுகளுக்கு முன்பு படுக்கை என்றால் கல் கொண்டு அமைக்க படும் தங்குமிடம் என்பது பொருள் ஆகும். பத்து என்றால் இடம் என்பது பொருள் ஆகும்.. இங்குதான் சமணர்கள் தங்கி தங்கள் மதங்களை பரப்பினர்.பொதுவாக சமணர்கள் நிர்வாணமாக இருப்பர் அதனால் ஊருக்கு ஒதுக்கு புறமுள்ள மலைக்குன்றுகளில் படுக்கைகள் அமைத்து தங்குவர்.இரவு நேரம் தங்கி ஓய்வெடுத்து காலை பொழுதில் ஊருக்குள் சென்று தங்கள் மதத்தை பரப்புவர்.இவர்களுக்கான சமண படுக்கைகளை அங்குள்ள அரசர்கலோ அல்லது வணிகர்களோ அமைத்து கொடுப்பார்கள் .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள "படுக்கபத்து" "மானாடுதண்டுபத்து" " செட்டியாபத்து" "பள்ளிப்பத்து" போன்ற இடங்கள் சமண மதத்தை பரப்பிய சமணர்கள் தங்கிய இடம் ஆகும்..இதை ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டவர் நாடார் குலத்தை சார்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் டாக்டர் தவசி முத்து மாறன் நாடார் ஆவார்.
மார்த்தாண்டத்தில் மகாவீரருக்கு மலை உச்சியில் கட்ட பட்ட அருமையான மலை கோவில். உள்ளது .மார்த்தாண்டத்திலிருந்து மலைகோவில் என்ற பெயரில் பஸ் வசதி உள்ளது. குறிப்பிட தக்கது.இங்கே அந்த காலத்தில் ரொம்ப கோலாகலமா ஆண்டு விழா மற்றும் டெய்லி 2 நேரம் பூஜை நடக்கும்... அப்புறம் மலைக்கு கீழே இருக்குற சர்ச் க்கு தொந்தரவா இருக்குதுண்ணு கம்ப்ளெண்ட் பண்ணி போலீஸ் வந்து ரேடியோ வைத்திருந்த பில்லர ஐயும்... முத்து குடையை யும் அடித்து உடைத்து விட்டார்கள்... அதன் பின் ரொம்ப வருடங்கள் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்ததால் பூஜை பண்ணமுடியாத நிலை... அதன் பிறகு மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனின் முயர்ச்சியால் பலகோடி ரூபா ஒதுக்கபட்டு இப்போது சுற்றுலா தலமாக்க பட்டுள்ளது... Under care of central government of india.. தகவல் NS RAM RAM ஊர் marthandam .
இதெ போல்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி ஊரில் உள்ள முருகன் கோவிலின் மேற்கு பகுதியில் சமணர்கள் வாழ்ந்ததர்க்கான தடயங்கள் உள்ளன.இங்கு நான்கு சமணர்கள் தங்குவதற்கான சமணபடுக்கைகள் உள்ளன.அப்படி இந்த படுக்கையை ஆதன் சாத்தன் என்ற வணிகன் அமைத்து கொடுத்ததாக இங்கு உள்ள பிராமி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த கல்வெட்டானது மிர்ரர் (கண்ணாடிஎழுத்துக்களை பார்க்கும் முறை )முறையில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு. தகவல் (Ezhilarasan - Archaeologist)
ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலர் என்பவரால் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.[1]
இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலர் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால் சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது. இன்னும் இந்த கல்வெட்டில்
இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள்(நாடார்கள் ) கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர்[15] என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள்பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.
கலிங்கத்தின் காரவேலரின் காலத்தைச் சாதவாகன மன்னரான முதலாம் சாதகர்ணி என்னும் நூற்றுவர் கன்னரோடும், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியோடும் பொருத்த முடிகிறது. அவர் 1300 அல்லது 113 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடபுலத்துக்கு எதிராக இருந்த தமிர தேக சங்காத்தம் என்பதை முறியடித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்தத் தமிர தேக சாங்காத்தம் என்பதே தமிழ் அரசர்களின் கூட்டணியென ஆய்வாளர்களால் கருதப்படுவதால் தமிழ் அரசர்களின் வரலாறு பற்றியும் அவர்கள் தொன்மை பற்றியும் சில வரலாற்றுக் குறிப்புகள் இதில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழரசர்கள் கூட்டணியை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரைப் பாண்டியர்களிடமிருந்து பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்ததாகக் கல்வெட்டில் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டில் 1300 ஆண்டுகளாகத் தம் கொற்றத்துக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த தமிர தேக சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்ததாகப் பெருமைக் கொள்கிறார் மன்னர் காரவேலர். இந்தக் கூட்டணி எத்தனை காலம் நீடித்தது என்பதில் கருத்து வேறுகள் இருந்தாலும் அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களோடு சத்தியபுத்திரர் அல்லது அதியமான் என்னும் அரசர்களையும் சேர்த்துக் கொண்டால் ஒரு தமிழரசர் கூட்டணி தமிழக எல்லைக்கு அப்பால் அரண் அமைத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்று மாமூலனார் குறிப்பிடுவது (அகநானூறு 31), பண்டையத் தமிழகத்தின் வேங்கட மலை வடக்கே, மொழிபெயர்த் தேயம் அல்லது தமிழ் மொழி மயங்கி வேறு மொழிகள் புழங்கத் தொடங்கும் நிலம் தமிழ் மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு அடிகோலுகிறது.[16] தமிர தேச சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் உடன்பாடு என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது மாமூலனாரின் கூற்றோடு இசைந்து வருவது நோக்கத்தக்கது.
தமிழ் மூவேந்தர் கூட்டணியை (தமிர தேச சங்காத்தம்) உடைத்தேன் என்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பெரும்பொருளைப் பெற்றேன் என்றும் இந்தக் கல்வெட்டில் காரவேலர் பெருமைப்பட்டிருந்தாலும், பொதுவாகத் தென்னக மன்னர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார்கள் என்று ஜெயசுவால் கருதினார். தமிழ் மூவேந்தர்களில் வலிமை மிக்கவர்களும் செல்வந்தர்களுமான பாண்டியர்கள் காரவேலருக்குக் கொடுத்த செல்வங்களை நட்பு பாராட்டி அன்பளிப்பாக அனுப்பியது என்று அவர் கருதினார்.[17] இதற்கு நேர் மாறாக, மூவேந்தர் கூட்டணியைப் பேச்சுவார்த்தைமூலம் காரவேலர் உடைத்திருக்க வேண்டும் என்னும் சசிகாந்து, அதற்குப் பின்னர் பாண்டியர்மீது தரைப்படை, கடற்படை என்று இரண்டின் மூலமும் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்.[18].
பல நூறு ஆண்டுகளாய்க் கலிங்கத்துக்குத் தொல்லையாக இருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்தேன் என்று சொல்லும் காரவேலர், மகத நாட்டையும் கலிங்கத்தின் அருகில் இருந்த அரசுகளையும் தோற்கடித்ததைக் காட்டிலும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைத்தான் “அற்புதம் ஆச்சரியம்” என்று கொண்டாடுகிறார். சோழநாட்டைக் கடந்துதான் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடியும் என்றாலும், சோழநாட்டின்மீது படையெடுத்ததாகக் குறிப்பிடாமல் பாண்டியர்மீது வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்தைத் திறையாகப் பெற்றது பற்றிச் சொல்வதால் தமிழ் மூவேந்தர் கூட்டணியை இவர் (சோழர்களோடு செய்த) ஒப்பந்தங்களால் உடைத்திருக்க வேண்டும்.[19]
பாண்டியர்கள் இவர் காலத்தில் அணிகலன்கள், முத்து, மாணிக்கம், வைடூரியங்கள் என்று பெருஞ்செல்வத்தைக் கொண்டிருக்கும் வல்லமையுள்ள அரசாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னகத்தில் மாணிக்க, வைடூரியச் சுரங்கங்கள் இல்லை என்பதால் இவை ஈழம், பர்மா அல்லது பாரசீக நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். பாண்டியர்களின் குதிரைகளையும் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் மாணிக்கம், வைடூரியங்கள் மட்டுமல்லாமல் குதிரைகளையும் பாண்டியர்கள் கடல்வழி வாணிகத்தில் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.
நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சமணர்கள் தொழில் வணிகம், தமிழ் மன்னர்கள் குலத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வணிகம் செய்தனர். இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் வணிகம் செய்வது நாடார்களே .இன்றைய தமிழக அரசிற்கு வணிகம் மூலம் பெருமளவு செல்வத்தை ஈட்டி கொடுப்பவர்கள் நாடார்கள் தான். வணிகம் செய்தது அரசாங்க குலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றும் வணிகம் நாடார்கள் ரத்ததிலே கலந்திருக்க காரணமும் இது தான் . நாடார்கள் அரச குலம் என்பதை இன்று பல்வேறு துறைகளில் பெற்ற வெற்றிகள் மூலம் நிருபித்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ்மன்னர்களால் கட்டப்பட்ட அணைத்து கோபுரங்களிலும் மகாவீரர் சிலை ஏதாவது இரு இடத்தில கண்டிப்பாக இருக்கும்,வேண்டுமென்றால் கோபுரங்களை உற்று கவனியுங்கள் புரியும்,,,
நாடார்கள்(சேர சோழ பாண்டியர்கள் ) கள்ள மறவ கூட்டு சதியால் நாயக்க மன்னர்களிடம் ஆட்சி இழந்த போதும் சரி நாஞ்சில் நாட்டில் மலையாள நாயர்கள் தோள்சீலை கொடுமை செய்த பொதும் சரி வெள்ளைய+நாயர் +நாயக்க கூட்டு சதியலும் சரி நாடார்களை அடக்க முடியவும் இல்லை அழிக்கவும் முடியவில்லை, பல்வேறு மதங்களையும் வழிபாடும் முறைகளையும் உருவாக்கியவர்களும் இந்த சான்றோர் குல நாடார்கள் தான்.
இந்த பூமி உள்ளவரை நாடார் வரலாறு அழியாது ,அந்த வானம் அழியும் வரை விண்ணுலகிலும் நாடார் புகழ் மறையாது.விண்ணும் மண்ணும் கட்டியளந்தவன் தான் இந்த நாடாள்வான் என்னும் சான்றோர் என்ற நாடார்.....