Saturday, April 18, 2015

பதிவு 3 ஷத்திரியர் என்றால் யார் ?தமிழகத்தில் சத்திரியர் யார்?

பதிவு 1ல் தமிழகத்தில் சத்திரியர் இல்லை என்று சொல்வது அறியாமை என்று பார்த்தோம்.

பதிவு 2ல் சத்திரியரே முதற்தரக்குடியினர், பிராமணர்கள் சத்திரியர்களை வணங்க வேண்டியவர்கள் என்று பார்த்தோம். 

இந்த பதிவில் ஷத்திரியர் என்றால் யார்? அவர்களின் குணங்கள் என்னவென்று பார்ப்போம்.

ஷத்திரியர் என்றால் யார் ?தமிழகத்தில் சத்திரியர் யார்?

“உள்ளத்தை அள்ளித்தா” என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் உண்மையான மணிவண்ணன் யார் என்று கண்டுபிடிக்க ஒருவர் ஒரு யோசனை சொல்வார் "இடுப்பை கிள்ளினால் முதலாளி கத்துவார்" என்று சொல்லி ஒரு மணிவண்ணனின் இடுப்பை கிள்ளுவார் அதற்கு அவர் கத்துவார். “ஐ இவர் கத்துறார் இவர்தார் மொதலாளி” என்பார்.. கவுண்டமணி இன்னொரு மணிவன்னை கிள்ள அவரும் கத்துவார் அதற்க்கு கவுண்டமணி “ஐ இவரு கத்துறார் இவரும் மொதலாளி, ஐ அவரு கத்துறார் அவரும் மொதலாளி, ஐ நானும் கத்துறேன் நானும் மொதலாளி” என்று நகைப்பார்,,

அதுபோலதான் உள்ளது தமிழகத்தில் இன்றைய சத்திரியரின் தேடல் ,வாள் ஏந்தியவறேல்லாம் தம்மை சத்திரியர் என்று கூறிக்கொள்கிறார்கள்.

பெரியாரின் கேள்வி.

“சத்திரியன் என்ற பெயர் யாருக்கு உரிமை உண்டென்று சொல்ல முடியும்? யார் யாரை ஷத்திரியர் என்று கூப்பிடுவது? சத்திரியன் என்றால் நாட்டை ஆள்பவன், போர்வீரன் என்பதாக பொருள் சொல்ல பட்டிருக்கிறது.அந்த முறைப்படி எல்லோரும் ஷத்திரியர் தாம். ஏதாவது ஒருகாலத்தில் நாட்டை ஆளாதார் யார் இருக்கிறார்? பட்டாளத்தில் போர்வீரனாயிலாதார் யார்? ஒரு காலத்தில் வேளாளர்,நாயிடு, வன்னியர், ராஜுக்கள் , நாடார்கள், செட்டியார்கள், குயவர்கள், மறவர்கள், தொட்டியர்கள் ,பார்பனர்கள் ,முகமதியர்கள் போன்று பலரும் அரசாண்டு இருக்கிறார்கள். இப்போது நம் நாட்டை ஆங்கிலேயர்கள் தான் ஆள்கிறார்கள் அந்த முறைப்படி யாரை ஷத்திரியர் என்று கூப்பிடுவது? ஒரு காலத்தில் ஆண்டவர்களை ஷத்திரியர் என்பதா? அல்லது இப்போது அரசாள்பவர்களை ஷத்திரியர் என்பதா? ஆளுகிரவனை மாத்திரம் சத்திரியன் என்பதா..? அல்லது அவன் குடும்பத்தையே ஷத்திரியர் என்பதா? அல்லது ஆளுகின்ற சாதியை ஷத்திரியர் என்பதா..? 



இப்படி பார்ப்போமானால் உலகத்தில் உலகத்தில் உள்ள மக்கள் பூராவையும் ஷத்திரியர்கள் என்று சொல்ல வேண்டும். என்னென்றால் நாம் காணு சாதியோர் என்போர் ஒரு காலத்தில் ஆண்டுதான் இருக்கிறார்கள் ,யுத்தத்தில் சேவை செய்துதான் இருக்கிறார்கள்”

பெரியார் இன்று இல்லாவிட்டாலும் அவரைப்போலவே இன்று பலருக்கும் ஐயங்கள் ஏற்ப்பட்டிருக்கும்,ஏற்படவும் கூடும்.ஆகவே இவற்றிற்கான விடை கூறவேண்டியது நமது கடமையாகிறது.

பெரியாரின் கேள்வியில் நியாயம் உள்ளதா? வர்ணம் , சாதி என்பவை பிறப்பினால் ஏற்படுபவை . எவரும் தங்கள் விருப்பப்படி தங்கள் வர்ணத்தை சாதியை மாற்றிக்கொள்ள இயலாது. வர்ணம் என்பது ஒப்பனைக்கு பயன்படுத்தும் முகபூச்சோ ,உதட்டு சாயமோ அல்ல, விருப்பம் போல் மாற்றிக்கொள்ள . வர்ணம் , சாதி என்பவை மதமோ,அரசியல் கட்சியோ அல்ல,நினைத்தபடி வெட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள.

கோவில்களில் பூசை செய்வதாலோ ,பூனூல் அணிந்து சந்தியாவந்தனம் ,காயத்திரி மந்திரம் செய்வதினாலோ,எல்லோரும் பிராமணன் ஆகிவிடுவதில்லை. பிராமணனைப் பிறந்தவன் பூநூல் அணியாது, ஆச்சாரங்களை மறந்து மது,மாமிசம் உண்பதால், அவன் பிராமணனில்லை என்றாகிவிடாது, ராணுவத்தில் எத்தனையோ பிராமணர் பணியாற்றுகின்றனரே? வணிகத்தில் ஈடுபட்டவறேல்லாம் வைசியரா? செட்டிகளா? வணிகம் செய்ததால் பெரியாரின் தந்தையும்,தனயனும் ஈரோடு செட்டியாராகிவிடவில்லையே. 


ஆட்சியிலிருந்தோர் , யுத்தசெவை செய்தவர்கள் எல்லோருமே சத்திரியர்தாமே என்ற கேள்வி நையாண்டி தனமாக உள்ளேதே அன்றி, அறிவு பூர்வமாக இல்லை. வணிகத்தில் ஈடுபடாது மருத்துவம், பொறியியல், சட்டம், அரசு ஊழியம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுள்ள செட்டியார்கள் சாதி நீக்கம் செய்யப்படுவதில்லையே. வணிகம் செய்யும் செட்டிதான் வைசியரா? இல்லை அவரது மனைவி மக்களும் வைசியரா? இது என்ன கேள்வி சத்திரியன்,வைசியன்,சூத்திரன்,பிராமணன் என்பதெல்லாம் குலப்பெயர்கள். அவை தனிமனிதப் பெயர்களல்ல.

மன்னர்கள் படைதிரட்டிய போது,பல்வேறு சாதிகளை சமூகங்களைச் சேர்ந்தோரையும் அதில் சேர்த்தனர். அவ்வாறு , வேறு குலங்களிலிருந்து படையில் சேர்ந்தோரெல்லாம் சத்திரிய குலமாகி விடுவதில்லை. சத்திரியன் என்பது பிறப்பினால் ஏற்ப்படுவது ஆகும்.


வாள் ஏந்துபவர்கள் எல்லாம் ஷத்திரியர் ஆகமுடியாது...





உலக வரலாற்றில் மிகச்சிறந்த உயர்ந்த நெடிய தொன்மையான பாரம்பரியமிக் பெருமை மிக்க உயர்நாகரீக கலாச்சாரம் கொண்ட முதன்மையான வரலாறு இந்திய வரலாறாகும்.

இந்திய வரலாறு காலத்தால் நிர்ணயிக்க இயலாத காலந்தொட்டு சிறந்து விளங்கி வந்தது .அவ்வாறு காலத்தால் நிர்ணயிக்க இயலாத காலத்தில் நடந்த நிகழ்வுகளை நாம் புராணங்கள் என்கிறோம். காலத்தால் அறிந்து கொள்ளகூடிய நிகழ்வுகளை வரலாறு என்றே அழைக்கிறோம். இந்தியாவில் புராண காலந்தொட்டே உலகே வியக்கக்கூடிய அளவில் மிக உயர்ந்த கலாசார பண்பாட்டு பெருமைகளுடன் மக்கள் வாழ்ந்துவந்தனர்.

அப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தின் தலைமை பொறுப்பை இரு குடிவழியினர் ஏற்று வழிவழியாக சிறப்புற நடத்தி வந்தனர் .அக்குடி வழியினர் சூரிய குலத்தோர் என்றும் சந்திர குலத்தோர் என்றும் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சத்தியத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து ஒழுகினார்கள். மக்களின் நலனை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட தவ வாழ்கை வாழ்ந்த சீலர்களாக வழிவழியாக திகழ்ந்தார்கள்.

சூரிய சந்திர குலத்தவரின் ஆளுகையின் கீழ் மக்கள் சுபீட்சமாக வாழ்ந்தனர். அடக்குமுறையற்ற சுதந்திரமான மக்கள் கூட்டத்திலிருந்துதான் உயர்நெறி கலாச்சாரங்களும் சிறப்பான தோன்றும். சுபீட்சமாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் சந்திராதித்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டனர். ஆதலால் இந்தியாவின் நாகரிகம் மிகசிறப்புற்று விளங்கியது.


 


இவ்விரு குலத்தாரின் ஆட்சி வடக்கே திபெத் பீடபூமியிலிருந்து தெற்க்கே லெமூரியா கண்டம் (குமரிக்கண்டம்) வரை பரந்திருந்தது.

இவ்வாறு அவர்கள் பரவி வாழ்ந்த பகுதிகளை 56பகுதிகளாகப் பிரித்து 56தேசங்களாக கொண்டு ஆண்டு வந்திருக்கின்றனர். 56 தேசங்களையும் (நாடுகளையும்) க்ஷேத்திரங்கள் என்று அழைத்தனர். க்ஷேத்திரம் என்றால் தமிழில் “நாடு” என்று பொருள்படும். க்ஷேத்திரமாகிய நாடுகளுக்கு அதிபதிகளாமையால் நாடுகளுக்கு அதிபதிகள் என்று பொருள் கொள்ளும் விதமாக க்ஷேத்திரியர்கள் என்று அழைக்கப்பட்டனர் . ஷேத்திரியர் என்ற பதம் மொழிவழக்கில் ஷத்திரியராகி அவர்கள் சூரிய குல சத்திரியர் சந்திரகுல ஷத்திரியர் என்று அழைக்கப்பட்டனர்.


தசரதன், ராமன் போன்றோர் சூரிய குலமென இராமாயணம் கூறுகிறது.
(தென்னாட்டில் சோழ மன்னர்கள் சூரியகுலத்தை சேர்ந்தோர் என அவர்களின் மெய்கீர்த்திகள், கல்வெட்டுகள், போன்றவையும், பெரியபுராணம் போன்ற நூல்களும் உணர்த்துகின்றன. முதலாம் இராசராச சோழன் தன்னை ரவிகுல மாணிக்கமெனவும். சத்திரிய சிகாமணி எனவும் கல்வெட்டுகளில் பொறித்துள்ளான். தன் ஆட்சியிலிருந்த பேரரசை ஒன்பது நாடுகளாக பிரித்து அவற்றிலோன்றிற்கு ரவிகுல மாணிக்க வளநாடென்றும்,மற்றொன்றிக்கு சத்திரிய சிகாமணி வளநாடென்றும் பெயரிட்டான்.)





மகாபாரத பாண்டவர் , கவுரவர் போன்றோரும் அரிச்சந்திரன் , துஷ்யந்தன், பரதன் போன்ற வடபுல மன்னர்களும் சந்த்திரகுலத்தோராவர்.
(தமிழ்நாட்டுப் பாண்டியரும்,சேரரும் சந்திரகுலத்தவரே என பண்டைய நூல்கள்,கல்வெட்டுகள், மெய்கீர்த்திகள் கூறுகின்றன.)

இந்த ஆட்சிகுடியினரான ஷத்திரியர்களுக்கு மக்களை வழிநடத்தி செல்ல வீரத்துடன் ஊக்கம் ,நேர்மை , பொறுமை போன்ற குணங்களும் தேவைப்பட்டன . நேர்மையற்ற வீரம் முரட்டுத்தனமாகும். அது கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் . பலநூறு ஊர்களைக் கொள்ளையிட்டுத் தரைமட்டமாக்கிப் பல லட்சம் மக்களை கொன்றுகுவித்த மங்கோலியத் தலைவன் கேங்கிஸ்கானை வீரன் என்றோ சத்திரியன் என்றோ பாராட்ட இயலாது.

சத்திரியர் போர்களத்திலும் போறுமையுடையோராக ,அடக்கம் உடையோராக இருத்தல் வேண்டும். வெற்றியை மட்டுமே குறியாக கொண்டு ,முடிந்தவரை உயிர்ப்பலியை குறைத்திட வேண்டும். முதியோரை , நோயுற்றோரை பெண்களை, குழந்தைகளைக் கொள்ளாதிருத்தல்,புறமுதுகிடுவோரை ,அடிபணிந்தோரை ,ஆயுதம் இல்லாதோரைத் தாக்காமை, மறைந்திருந்து தாக்காமை, தகுந்த காரணமின்றி உயிர்ப்பலி கொள்ளாமை , தூதுக்கு பின்னரே போருக்குசெல்லுதல் கதிரவன் மறைவுக்குபின் போர் செய்யாதிருத்தல் போன்ற மரபுகளை சத்திரியர் கடைபிடித்தனர்.





“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறா அ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்”
–புறநானூறு பாடல் 9

எனப் போர் துவங்கும் முன் எச்சரித்தனர். “படைக்கருவி இழந்தவன்,காயம்பட்டு வீழ்ந்தவன், ஆயுதம் இல்லாதவன், புறமுதுகிட்டவன், அஞ்சியவன், சரணடைந்தவன், கைதொழுது நிற்ப்பவன்,பிள்ளையிழந்து சொகமுற்றவன், ஆடையற்றவன், உறங்குபவன், உட்காந்திருப்பவன், பிறருடன் போரிட்டுகொண்டிருப்பவன் ,தன்னை எதிர்க்காதவன், வேறு சிந்தனையிலிருப்பவன், இவர்களை கொல்லக்கூடாது என மநுதர்மம் வலியுறுத்துகிறது.- மநுதர்மம் – 8, 138, 139.

இவ்வாறு நீதிநேரிமுரைகளுக்குக் கட்டுப்பட்டு போரிடுதலே அறப்போராகும்.
சத்திரியர் முறையானப் போர்பயிற்சி பெற்று , அறப்போர் முறையினைக் கையாண்டனர். அறப்போருக்கு மாறானது “மறப்போராகும்” . அது இரக்கமற்ற முறையில் கொன்றுகுவித்தலும், தீயிட்டு கொளுத்துதலும் , கொள்ளையிடுதலுமாகும். அந்தவகையில் “கவுண்டமணி சொன்னது போல நாங்களும் வாளேந்தினோம் நாங்களும் சத்திரியர்தான்” என்று சிலர் தற்போது கூறத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு சத்திரியரின் தகுதியில் வீரத்தை தவிர வேறு எதாவது பண்பு இருக்கிறதா? இதை அவர்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்திருபார்க்ளா? அப்படி சிந்தித்திருந்தால் அவர்கள் என்றோ உணர்ந்திருப்பார்கள் அவர்கள் “அசூர” குலமென்று. .”வீரம் மட்டும் ஒருவனிடம் இருந்தால் அதற்குப் பெயர் வீரமல்ல “முரட்டுத்தனம்.”



சத்திரியர் யாரும் தவறு செய்தால் மட்டுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்களுக்கு இயல்பாகவே யாரையும் சீண்டி பார்க்கும் குணமோ, மற்றவர்களை துன்புறுத்தி பார்க்கும் குணமோ இராது. அசூரர்கள் அதற்க்கு எதிர்மாறாக இருப்பார்கள். அந்த அசூர்களும் மூவேந்தர் படையில் நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கின்றனர். அதனால்தான் இப்போது மூவேந்தர் தாங்கள்தான் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

“வீரலல்லாதோர் , புறமுதுகிட்டோர், காயம்பட்டோர், வயோதிகர், சிறுவர், இவர்கள் மீது போர் செலுத்துதல் படைமடம்” எனச் சங்கநூல்கள் இழித்துக் கூறுகின்றன. நேர்மையான வீரன் படைமடம் செல்லான் என்பதைப், “படைமடம் படான்பிறர் படைமயக்குரினே” எனப் புறநானூறும், (புறநானூறு-142 ) “படைமயக் குற்றபோதும் படைமட மொன்றில்லாதான்” எனச் சூடாமணியும் சுட்டுகின்றன.(சூடாமணி -9,10)

இவ்வாறு ,வீரத்துடன் பல்வேறு மாண்புகளை பெற்றிருந்தச் சத்திரியகுலமே, தமிழகத்தில் சான்றோர் குலம் எனப்பட்டது. சங்கநூல்களில் பிராமணன் என்ற வடசொல் அந்தணன், பார்ப்பான் எனவும், ஷத்திரியன் என்ற வடசொல் சான்றான் எனவும் எழுதப்பட்டுள்ளதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

//மக்களின் நலனை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட தவ வாழ்கை வாழ்ந்த சீலர்களாக வழிவழியாக திகழ்ந்தார்கள்.// (மக்களின் நல்வாழ்வே தன் உயிர்மூச்சென்று வாழ்ந்த நம் காமராஜர் ஐயாவின் வாழ்வே இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இருக்காதா, எத்தனை ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி தந்த குலம். அதே மரபணுவில் வந்து, அதே உணர்வு இரத்தத்தில் கலந்திருந்தமையால். காமராஜரால் மிக அசாதரணமான, மிகத்திறமையான ஆட்சியை வழங்க முடிந்தது.) 


21 comments:

  1. மிக மிக நன்று சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. நாடார்கள் சத்திரியர் என்கிற ஆதாரம் இருக்கிறதா, அல்லது அவர்கள் ஆட்சி செய்த வறலாறு இருந்தால் அனுப்புங்கள் ஏற்றுக் கொள்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. நாடார்களின் பூர்விகம் தென் பகுதியை சார்ந்தது....இவர்களின் வரலாறு பெரும்பான்மை இலங்கை உள்ளது... இராவணன் நாடார் குல சத்ரியன்...சதிரியனை சத்ரியனால் மட்டுமே வெல்ல முடியும்....யாரும் வெல்ல இயலாத ...இலங்க ரவான சத்ரியனை ..சூரிய குல சத்ரியன் ராமணல் மட்டுமே வெல்ல முடிந்து....இராவணன் இலங்கை மன்னன் நாடார் குல வீரன்...ராமன் சூரிய குல சத்திரிய நாடார் ஆவன்

      Delete
  3. நாடர்கள் சத்திரியர்களாக இருக்க முடியாது மகாபாரதத்தில் அக்னி குலத்தில் பிறந்தவனே சத்திரியன் என்று கூறுகிறது. சத்திரியர் என்பதற்கு பொருள் வீரம் யவருக்கும் மன்டியிடதவன்

    ReplyDelete
    Replies
    1. சத்ரியன் முரடன் அல்ல....உயிர்களை மதிக்க தெரிந்தவன் அதனால் தான் போர்கள்ளில் உயிர் இழப்பை தடுக்க .. போரில் மற்ற உயிரிங்கள் இறப்பை தடுத்து வெற்றி என்ற தீர்மானமும் ..பாதுகாப்பு அளிக்கும் நம்பிக்கையை தருபவன் சத்ரியன்....ராமன் ரகு குலதன் ...ரகு சூரியனின் வம்சம் ஆவன்.....ராமன் சூரிய குல சத்ரியன் ஆவன்.....சூரியனின் துளியே அக்னி ஆகும் ..சூரியனை ஒப்பிடும் போது அக்னி சிதறல் பெரிதல்ல....நாடார்கள் சூரிய சந்திர குல சத்திரியர்கள்

      Delete
  4. உண்மைதான் நாடார்கள் சத்திரியர்களே என்பதற்கு சான்று நாடார்களே நாயக்க வடுகர் ஆட்சிகாலத்தில் நாடார்கள் தென் தமிழகத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை500ஆண்டுகள் ஆனால் நாயக்கர் ஆட்சி முடிவுக்குவந்த உடனே நாடார்கள் படைஎடுப்பு தமிழகம் முழுவதும் பரவ தொடங்கினர்கள் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி யாரும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி அதிகரிக்கவேண்டும் வரி அதிகரிக்க வேண்டும் இதனை சரியாக பயன்படுத்தி சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாடார்கள் பல தொழில் பேட்டைகள் அமைத்து அதன் மூலம் வந்த வருமானத்தில் வங்கி ஒன்றை தொடங்கி தற்போதையTMT பல பள்ளிகூடங்களைகட்டி அனைவருக்கும் கல்விதந்தவர்கள் நாடார்கள் அந்த நாடார் கட்டிய பள்ளியில் தான் காமராஜர் படித்தார் நாடார்கள் சங்கம்அமைத்து முன்னேற்றம் அடைந்தவர்கள் நாடார்கள் மட்டுமே வேறு எவரும் இப்படி குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்தாக எவருக்கும் வரலாறு இல்லை
    தண்ணீருக்குள் புதைத்து வைத்த பந்து விட்ட உடன் சீற்றம் கொண்டு மேலே வருவது போல் உள்ளது நாடார்களின் வளர்ச்சி இவையெல்லாம் நடந்தது சுதந்திரத்திற்கு முன்பு என்பதை என்னிப்பார்த்தால் வியப்பாக உள்ளது இவர்கள் சத்திரியர்களே என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை 500ஆண்டு அடக்கப்பட்டாலும் இவர்கள் யாரிடத்திலும் அடிமையாக இருந்ததில்லை இதுவே சத்திரியர்கள் நாடார் என்பதற்க்கு சான்று

    ReplyDelete
  5. உண்மைதான் நாடார்கள் சத்திரியர்களே என்பதற்கு சான்று நாடார்களே நாயக்க வடுகர் ஆட்சிகாலத்தில் நாடார்கள் தென் தமிழகத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை500ஆண்டுகள் ஆனால் நாயக்கர் ஆட்சி முடிவுக்குவந்த உடனே நாடார்கள் படைஎடுப்பு தமிழகம் முழுவதும் பரவ தொடங்கினர்கள் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி யாரும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி அதிகரிக்கவேண்டும் வரி அதிகரிக்க வேண்டும் இதனை சரியாக பயன்படுத்தி சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாடார்கள் பல தொழில் பேட்டைகள் அமைத்து அதன் மூலம் வந்த வருமானத்தில் வங்கி ஒன்றை தொடங்கி தற்போதையTMT பல பள்ளிகூடங்களைகட்டி அனைவருக்கும் கல்விதந்தவர்கள் நாடார்கள் அந்த நாடார் கட்டிய பள்ளியில் தான் காமராஜர் படித்தார் நாடார்கள் சங்கம்அமைத்து முன்னேற்றம் அடைந்தவர்கள் நாடார்கள் மட்டுமே வேறு எவரும் இப்படி குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்தாக எவருக்கும் வரலாறு இல்லை
    தண்ணீருக்குள் புதைத்து வைத்த பந்து விட்ட உடன் சீற்றம் கொண்டு மேலே வருவது போல் உள்ளது நாடார்களின் வளர்ச்சி இவையெல்லாம் நடந்தது சுதந்திரத்திற்கு முன்பு என்பதை என்னிப்பார்த்தால் வியப்பாக உள்ளது இவர்கள் சத்திரியர்களே என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை 500ஆண்டு அடக்கப்பட்டாலும் இவர்கள் யாரிடத்திலும் அடிமையாக இருந்ததில்லை இதுவே சத்திரியர்கள் நாடார் என்பதற்க்கு சான்று

    ReplyDelete
  6. உண்மைதான் நாடார்கள் சத்திரியர்களே என்பதற்கு சான்று நாடார்களே நாயக்க வடுகர் ஆட்சிகாலத்தில் நாடார்கள் தென் தமிழகத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை500ஆண்டுகள் ஆனால் நாயக்கர் ஆட்சி முடிவுக்குவந்த உடனே நாடார்கள் படைஎடுப்பு தமிழகம் முழுவதும் பரவ தொடங்கினர்கள் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி யாரும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி அதிகரிக்கவேண்டும் வரி அதிகரிக்க வேண்டும் இதனை சரியாக பயன்படுத்தி சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாடார்கள் பல தொழில் பேட்டைகள் அமைத்து அதன் மூலம் வந்த வருமானத்தில் வங்கி ஒன்றை தொடங்கி தற்போதையTMT பல பள்ளிகூடங்களைகட்டி அனைவருக்கும் கல்விதந்தவர்கள் நாடார்கள் அந்த நாடார் கட்டிய பள்ளியில் தான் காமராஜர் படித்தார் நாடார்கள் சங்கம்அமைத்து முன்னேற்றம் அடைந்தவர்கள் நாடார்கள் மட்டுமே வேறு எவரும் இப்படி குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்தாக எவருக்கும் வரலாறு இல்லை
    தண்ணீருக்குள் புதைத்து வைத்த பந்து விட்ட உடன் சீற்றம் கொண்டு மேலே வருவது போல் உள்ளது நாடார்களின் வளர்ச்சி இவையெல்லாம் நடந்தது சுதந்திரத்திற்கு முன்பு என்பதை என்னிப்பார்த்தால் வியப்பாக உள்ளது இவர்கள் சத்திரியர்களே என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை 500ஆண்டு அடக்கப்பட்டாலும் இவர்கள் யாரிடத்திலும் அடிமையாக இருந்ததில்லை இதுவே சத்திரியர்கள் நாடார் என்பதற்க்கு சான்று

    ReplyDelete
  7. நாடார்களின் குல தெய்வம் தாய் பத்திரகாளி ஆவள்...அவளே போர்களதின் கடவுள் ...சத்திரியர்கலை ஈன்றவல் ...ஆக நாடார் குலமே உண்மையான சத்திரிய குலம் என்பதற்கு இதை விட சிறந்த சான்று இல்லை

    ReplyDelete
  8. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  9. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர்.

    ReplyDelete
  10. வில்லவர் மற்றும் பாணர்

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    ReplyDelete
  11. நாகரும் களப்பிரரும்
    _________________________________________


    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் - மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    ReplyDelete
  12. நாகரும் களப்பிரரும்

    நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
    மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.


    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)


    மறவர்
    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

    இலங்கை
    குஹன்குலத்தோர்
    இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
    கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

    மறவர்களின் வன்னியர் பதவி
    கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

    முக்குவர்(முற்குகர்)
    மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
    முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

    வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    ReplyDelete
  13. நாகரும் களப்பிரரும்


    வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

    சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

    வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
    கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
    வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.


    களப்பிரர்

    வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

    வேளிர் வேளாளர்
    கரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
    கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

    புல்லி
    காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
    அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.


    முடிராஜா
    ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

    பல்லவர்

    வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

    முத்தரையர்

    மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
    முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

    ReplyDelete
  14. நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.


    களப்பிரர் தோல்வி

    கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.


    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    ReplyDelete
  15. குமரிக்கண்டம்

    பாண்டியன் இராச்சியத்தின் தோற்றம்.

    பாண்டியன் இராச்சியத்தின் ஆரம்பம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியம் (கிமு 9990)
    2. முதலாவது பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டியன் இராச்சியம்
    4. இரண்டாவது பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாம் பாண்டிய இராச்சியம்
    6. சங்க காலத்தின் முடிவு (கி.பி 1)

    புதிய கற்காலம் (கிமு 10000)

    பாண்டிய இராச்சியம் நிறுவுதல்(கிமு 9990)
    ______________________________________

    பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னர் காய்சின வழுதி கிமு 9990 இல், பாண்டிய நாட்டை நிறுவினார். அதாவது தற்போதிலிருந்து 11,971 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியநாடு நிறுவப்பட்டது.

    பாண்டியன் நாடு

    பாண்டிய நாடு குமரிகண்டத்தில் நிறுவப்பட்டது. இது கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்திருந்த ஒரு பெரிய பழங்கால நிலப்பரப்பு ஆகும். குமரிக்கண்டம் குமரி நதிக்கும் பஃறுளி நதிக்கும் இடையில் இருந்தது.

    தமிழ் சங்கங்கள்

    கி.பி 5-8 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை மூன்று தமிழ் சங்கங்களின் காலம் குறித்த விவரங்களைத் தருகிறது.

    தலைச்சங்கம் (கிமு 9990 முதல் கிமு 5550 வரை)

    பாண்டிய மன்னர் காய்சின வழுதி அதே காலகட்டத்தில் தலைச்சங்கம் என்று அறியப்பட்ட முதல் தமிழ் சங்கத்தை நிறுவினார்.

    முதல் தமிழ் சங்க காலத்தில் குறைந்தபட்சம் 89 பாண்டிய மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர், ஆனால் உண்மையில் மன்னர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.


    பாண்டிய நாட்டின் முதல் தலைநகரம் தென் மதுரை ஆகும். இது 4440 ஆண்டுகள் நீடித்த முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில் பெரும் பிரளயத்திற்குப் பிறகு கடலுக்கு அடியில் மூழ்கிய தென் மதுரை ஆகும்.

    மூன்று மதுரைகள்

    உண்மையில் மதுரை என்று அழைக்கப்படும் மூன்று தலைநகரங்கள் இருந்தன. குமரிகண்டத்தில் உண்டாயிருந்த தென் மதுரை, பண்டைய பாண்டிய இராச்சியத்தின் தலைநகராக இருந்த மதுரை, மற்றும் வட இந்தியாவில் மதுரா புரி என்று அழைக்கப்பட்ட வட மதுரை. மதுரா புரி பழங்காலத்தில் ஒரு பாணப்பாண்டியன் தலைநகராக இருந்திருக்கலாம்

    முதல் தமிழ் சங்கம்

    முதல் தமிழ் சங்கம் பாண்டிய மன்னன் காய்சின வழுதியின் ஆட்சியின் போது தொடங்கி சுமார் 4440 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது, இது கடுங்கோன் மன்னரின் ஆட்சியில் முடிவுக்கு வந்தது.

    புறநானூறு எனும் ஒரு பண்டைய தமிழ் இலக்கியத்தின் படி, பாண்டிய மன்னன் பஃறுளி ஆறு கடலிற் கலக்குமிடத்து மூந்நீர் விழா எடுத்தான் என்று கூறுகிறது.

    முதல் பிரளயம்(கிமு 5,550)

    பண்டைய தமிழ் இலக்கியங்களின்படி, முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில், கடுங்கோன் மன்னனின் ஆட்சியின் போது, ​​அதாவது கிமு 5,550 இல் குமரிக்கண்டத்தை ஆழத்தில் மூழ்கடித்த ஒரு பேரழிவு பிரளயம் ஏற்பட்டது.

    முதல் பிரளயத்தில் பஃறுளி நதி, குமரி மலைத்தொடர், குமரி நதி மற்றும் தென் மதுரை ஆகியவை கடலுக்கு அடியில் மூழ்கின.

    இதேபோல் ஒரு பண்டைய பிரளயம், பல பண்டைய இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது எ.கா. சுமேரிய ஆவணங்களில் கில்கேமேஷ் காவியம், ஆதியாகமம் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நோவாவின் பிரளயம் என்பவையாகும்.

    ஸ்ரதாதேவா மனு

    மகாவிஷ்ணுவின் அவதாரமான ஒரு பெரிய மீனால் இழுத்துச் செல்லப்பட்ட படகில் ஏறி பிரளயத்திலிருந்து தப்பிய திராவிட மன்னரான ஷ்ரதாதேவா மனுவின் கதையை மத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.

    பிரளயத்திற்குப் பிறகு, ஷ்ரதாதேவா மனுவின் படகு கரைக்கு வந்து மலைய மலையின் உச்சியில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தரையிறங்கியது.

    ஸ்ரதாதேவா மனு-பாண்டியன்

    குமரிக்கண்டத்தை வெள்ளம் சூழ்ந்தபோது, ​​பாண்டியன் குடும்பத்தினர் படகில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பியிருக்கலாம்.

    அந்த படகு மலைய மலைகள் என்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் தரையிறங்கியிருக்கலாம். மீனவரின் முந்தைய கதை மத்ஸ்ய புராணத்திற்கு அடிப்படையாக இருக்கலாம். மீனவரின் வடநாட்டு உறவினர்கள் மீனா மற்றும் மத்ஸ்யா என்னும் பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

    கிமு 5550 இல் குமரிக்கண்டத்தை மூழ்கடித்த பிரளயம் ஆரம்பகால தமிழ் வரலாற்றில் கூறப்பட்ட இரண்டு பிரளயங்களில் முதன்மையானது.

    ReplyDelete
  16. குமரிக்கண்டம்

    பாண்டிய இராச்சியத்தின் புனரமைப்பு (கிமு 5500)
    ________________________________________

    இரண்டாவது தமிழ் சங்கம்
    இடைச்சங்கம் (கிமு 5550 முதல் கிமு 1850 வரை)

    பாண்டிய மாநாடு அதன் புதிய தலைநகரான கபாடபுரத்தில், பாண்டிய மன்னர் வெண் தேர் செழியனால் மீண்டும் நிறுவப்பட்டது. இடைச்சங்கம் என்று அழைக்கப்படும் தமிழ் சங்கத்தின் இரண்டாவது அமர்வு கபாடபுரத்தில் கூட்டப்பட்டது.

    செம்புக்காலம்(கிமு 4500)

    இரண்டாவது தமிழ் சங்கம் மீன் கூடல் காலம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய பஃறுளி ஆற்றின் வடக்கே சுமார் 700 காதம் (1120 கி.மீ) மற்றும் குமரி நதி கழிமுகத்திற்கு தெற்கே குவாடம் அமைந்திருந்தது.

    பாண்டிய மாநாட்டின் இடைச்சங்க காலம் கிமு 5550 முதல் கிமு 1,850 வரை சுமார் 3700 ஆண்டுகள் நீடித்தது. முதல் மன்னர் வெண் தேர் செழியன், கடைசி பாண்டிய மன்னர் முடத்திருமாறன் ஆவார். அந்த காலகட்டத்தில் 59 பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்ததாக இறையனார் அகப்பொருள் கூறுகிறது.

    இரண்டாவது பிரளயம் (கிமு 1850)

    கிமு 1850 இல் இரண்டாம் தமிழ் சங்கத்தின் முடிவில் பாண்டிய தலைநகரம் கபாடபுரம் மற்றொரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இந்த பிரளயம் குவாடம் மற்றும் குமரிக்காண்டத்தின் மீதமுள்ள பகுதியை என்றென்றுமாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த பிரளயம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு ஒத்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிகிமு 1900 முதல் கிமு 1700 வரைபுள்ள காலகட்டத்திலாகும்.

    பாண்டிய இராச்சியத்தின் இடமாற்றம் (கிமு 1850)
    _________________________________________

    மூன்றாம் தமிழ் சங்கம்(கிமு 1850 முதல் கி.பி 1 வரை)

    கிமு 1850 இல் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய மாநாட்டின் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்றாவது தமிழ் சங்கம் கூட்டப்பட்டது. 49 பாண்டிய மன்னர்களும், 449 பங்கேற்ற கவிஞர்களும் கொண்ட மூன்றாவது தமிழ் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது.

    கொற்கை மற்றும் தென்காசி இரண்டாம் தலைநகரங்களாக இருந்தன. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த, கொற்கை பாண்டியர்களின் பண்டைய தலைநகரம் ஆயிருந்தது. மலைய மலைகளுக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய பாண்டிய தலைநகரம் தென்காசி. இலங்கை மிகவும் பழங்காலத்திலிருந்தே பாண்டியர்களால் ஆளப்பட்டது. ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர் தாம்பபாணி, தாமிரபரணி நதியின்பெயரிலிருந்து வந்தது.


    மூன்றாவது தமிழ் சங்கம் முடத்திருமாறன் மன்னரின் ஆட்சியில் தொடங்கி, உக்கிரப்பெருவழுதி(கிமு 42 முதல் கி.பி 1 வரை) மன்னனின் ஆட்சியுடன் முடிந்தது என்று சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

    இரும்பு யுகம் (கிமு 1300)

    கி.மு 1850 ல் பிரளயத்திற்குப் பிறகு தலைநகரம்கபாடபுரம் நவீன மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. கபாடபுரம் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை வட இந்திய காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது மீண்டும் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.

    ராமாயணத்தில் கபாடபுரம்

    இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையில் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள். ராமாயணம் கபாடபுரத்தை கவாடம் என்று குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  17. குமரிக்கண்டம்
    _________________________________________

    குமரிக்கண்டத்தின் இருப்பிடம்

    பாரம்பரியமாக கன்னியாகுமரிக்கு தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது என்றும் அது ஒரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது என்றும் கருதப்பட்டது. அந்த நிலப்பரப்பு நிச்சயமாக ஸ்ரீலங்காவையும் சேர்த்திருக்கும்.

    ஸ்ரீலங்காவில்
    கொமரி

    கொமரி என்பது இலங்கையின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இடமாகும். இது கொமரி காயலை ஒட்டிய ஒரு மெல்லிய நிலப்பரப்பு ஆகும். கடலுக்குள் கொமரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், கொமரி முகடுகள் என்று அழைக்கப்படும் மூழ்கிய மணல் முகடுகள் உள்ளன. கொமரியா என்று அழைக்கப்படும் ஒரு இடம் இன்னும் உள்நாட்டில் உள்ளது.

    ஸ்ரீலங்காவில்
    மதுரா

    உள்நாட்டில் கொமரிக்கு மேற்கே சுமார் 140 கி.மீ தொலைவில், மதுரா ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் மதுரா என்ற இடம் உள்ளது. மதுரு ஓயா என்ற நதி அங்கிருந்து கொமரிக்கு வடக்கே வடக்கு மத்திய மாகாணத்திற்குள் பாய்கிறது.

    ஸ்ரீலங்காவில்
    மஹாவெலி கங்கா

    மஹாபலியின் பெயரிடப்பட்ட மகாவெலி கங்கை என்ற நதி மதுரு ஓயாவின் வடக்கே பாய்கிறது. மகாபலி தமிழ் வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோரின் முன்னோடியாக கருதப்படுகிறார். வில்லவர்கள்வழிவந்த பண்டைய பாண்டியர்களின் ஆட்சியின் போது இந்த நதிக்கு பெயரிடப்பட்டிருக்கலாம்.

    இந்தோனேசியா

    ஜாவா தீவின் வடக்கில் மதுரா என்ற தீவு உள்ளது. ஜாவா தீவில் சுரபயாவுக்கு அருகில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா தீவுவாசிகள் நீண்ட வாள்களை எடுத்துச் செல்கிறார்கள். வாள்களின் முனை முன்னோக்கி வளைந்திருக்கும். மதுரா தீவுக்கு பாண்டியர்களுடன் தொடர்பு இருக்கலாம்.

    லெமூரியா

    லெமூர் புதைபடிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது அரேபியாவிலோ காணப்படவில்லை.1864 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர், லெமுரியா என்ற மீப்பெருங்கண்டம் கடந்த காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதினார். லெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நிலப்பரப்பு மடகாஸ்கரையும் இந்தியாவையும் இணைத்ததாகவும் நம்பப்பட்டது. கி.பி 1912 இல் கண்டப்பெயர்ச்சி கோட்பாடு தோன்றிய பின்னர் லெமூரியா கோட்பாடு பெரும்பாலும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    குமரி வரம்பு

    1964 ஆம் ஆண்டில் கேப் கொமொரினுக்கு தெற்கே கடற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கடல் கோடு கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமாரிக்கு அருகாமையில் இருப்பதால் இதற்கு கொமொரின் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.

    இலங்கைக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 200 கி.மீ தொலைவில் இந்த கடற்கோடு அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் வடக்கு-தெற்கில் 500 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்கில் 150 கி.மீ அகலமும் கொண்டவை..

    கொமோரின் ரிட்ஜ் NNW இலிருந்து SSE திசையை நோக்கி அட்சரேகைகள் 1.5 ° N மற்றும் 6.5 ° N க்கு இடையில் நீண்டுள்ளது. கடல் தளத்திலிருந்து கடலின் சராசரி ஆழம் 2 முதல் 4.2 கி.மீ ஆகும், கொமரின் ரிட்ஜில் கடலின் குறைந்தபட்ச ஆழம் 1 கி.மீ ஆகும்.

    வடக்கு எல்லையில், கொமொரின் ரிட்ஜ் கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கண்டத் திட்டுடன் இணைகிறது. கொமரின் ரிட்ஜ் குமரிகண்டத்தின் எச்சமாக இருக்கக்கூடும். ஆனால் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் ஒரு நிலத்தை மூழ்கடிக்கும் பேரழிவு என்ன என்பது தெரியவில்லை.

    புவி வெப்பமடைதல் காரணம் துருவ பனிக்கட்டி உருகுவதால், கடல் மட்டம் உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய புவித்தட்டு யூரேசிய புவித்தட்டுடன் மோதியபோது, ​​அதன் தெற்கு விளிம்புகீழ்நோக்கி சாய்ந்து குமரிக்கண்டம் மூழ்கியதா?
    அல்லது ஒரு பண்டைய விண்கல் பொழிவு காரணமாக, நிலம் வெடித்து சிதறியிருக்கலாம்.

    முடிவுரை

    குமரிகண்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    என்றாலும்

    இது திராவிட மக்களின் தென்னிந்திய அட்லாண்டிஸ் ஆகும்.

    ReplyDelete