நாடார் என்ற சொல்லை நாம் 19ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்த தொடங்கினோம், அதற்க்கு முன் சாணார் என்றே அழைக்கப்பட்டோம் என பலர் அறிவுகெட்ட முட்டாள்கள் இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களின் முகத்தில் சாணி அடிக்கும் விதமாகவே இந்த பதிவு.
"சிவகாசி நாடார் செப்பேடு"
சிவகாசி நகரைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர் 1779ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலின் மேலைக் கோபுரம் அமைப்பதற்குப் பெரும் தொகையினை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வசம் வழங்கியுள்ளனர். அதற்கான ஆவணம் தான் இச்செப்பேடு. திருவாவடுதுறை ஆதினத்தில் உள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அலுவலராகப் பணிபுரியும் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள்' என்ற நூலில் அச் செப்பேட்டின் வாசகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
அக் காலகட்டத்தில் சேதுபதி மன்னரின் ஆட்சியில் சிவகாசி அடங்கியிருந்தது. திருச்செந்தூர் மேலைக் கோபுரக் கட்டுமானப் பணியில் முதன்மையாக பங்கேற்ற பிறர், பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என்ற கம்பளத்து நாயக்கர் சமூகத் தலைவரும், ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் என்ற வன்னியக் கள்ளர் சமூகத் தலைவரும், சாத்தூர் எரபாப்ப நாயக்கர் போன்றவர்களும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்திலுள்ள ஏழூர் தட்டாப்பாறை வணிதம் சூழ்ந்த மகாஜனம் பிள்ளைமார், சாண்நாடார்கள் முதலாகிய 18 சாதியினரும் ஆவர்.
பாளையக்காரர்களுடைய ஆட்சியே இப்பகுதியில் வலிமையாக வேரூன்றி இருந்த போதும், இவர்களுக்குச் சமமாகச் சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் திருச்செந்தூர் மேலைக் கோபுரம் கட்டுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமது பட்டயத்தில்.
"சேர சோழ பாண்டியர் பூமியான இந்நாட்டில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த நாடாக்களும் பலபட்டடைக் குடிகளும் சேர்ந்து இந்த தர்மத்தைச் செய்வதாக"த்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்
1.அறியபுத்திர நாடான்
2.தம்பி நாடான்
3.சிவமுருக நாடான்
4.கூத்த நாடான்
5.முத்தையன் பெரியண்ணன் நாடான்
6.தாளமுத்து நாடான்
மற்றுமுண்டான நாடாக்களும் பலபட்டடைகளும் திருந்செந்தூர் முருகன் கோயில் கோபுர திருப்பணிக்காக தலைக்கு 1/2 பணம் வீதம் கொடுப்பதாகச் சம்மதித்துள்ளனர். பட்டயத்தில் கையப்பம்மிட்டுள்ளோர் வேலப்ப நாடான்,அளக நாடான் , சீனப் பணிக்க நாடான், அதீனமாகி நாடான், அவண நாடான், வகுத்த குட்டி நாடான் உ நயினார் திருப்பணிக்கு சிவகாசி நாடாக்கள் தாம்பர சாசனம் நீடூளி வாழ்க"
அப்போது அங்கே சேதுபதி, காது பதி,ஹோமியோபதி எல்லா பதிகளுடைய ஆட்சியையும் அங்கு நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அவர்களை ஏன் குறிப்பிடவில்லை.
அதாவது, சேதுபதியின் ஆட்சியையோ நாயக்க மன்னர்கள் ஆட்சியையோ அங்கீகரிக்காமல் பண்டொழிந்துபோன மூவேந்தர் ஆட்சியை மறக்காமல் நினைவு கூர்ந்து குறிப்பிடுவதிலிருந்து, சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் தம்மையும் மூவேந்தர் வழிவந்த ஆட்சிக் குடியினர் என்றே தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். பிற சாதியினர் பலபட்டடைகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்களுடைய எந்த ஆவணத்திலும் தமது நாட்டைச் 'சேர சோழ பாண்டியர் பூமி' என்று தொனிப் பொருளாகக் குறிப்பிடுவதைக் கூட நாம் காண இயலாது.
மேலும் திருச்செந்தூர் கோயிலின் கோபுரத்தில் 5 ஆம் நிலையில் தேக்குமர உத்திரத்தில் ‘’பிள்ளைக்குளம்சிவனணைந்த நாடான்30 பணம் தன்மம்’’என்றுசெதுக்கப்பட்டுள்ளது.அக்காலத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு மற்றும் பல ஆதிக்க சக்தியினர் இருப்பினும் நாடானின் பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது .
சிந்தனைக்குறியது.கோயிலைக்கட்டியவனுக்குக் கோயிலினுள் சென்று வழிபடும் உரிமை இருந்தது என்பதற்குச் சான்று. திருச்செந்தூர்கோயிலின் மேலக்கோபுரவாசல் ‘’நாடான்’’வாசல் ஆகும்.காயாமொழிஆதித்த நாடான்கள்திருச்செந்தூர் கோயிலுக்கு தேர் செய்தும் திருப்பணிகள் செய்தும் வந்துள்ளனர்.மூலப்புளி நாடான்கள்,நட்டாத்தி நாடான்களும்திருப்பணிகள் பல செய்துள்ளனர்.
நாடான் என்ற சொல் 19ஆம் நூற்றாண்டில்தான் வந்தது என்பதை விட அடிமுட்டாள்தனம் ஏதும் இல்லை.
இனி யாரும் அவ்வாறு தவறாக பதிவிட்டால் இந்த செய்தியை அவர்கள் முகத்தில் சாணி அடித்தார் போல் எறியுங்கள்.
இந்த செப்பு பட்டையம் மட்டுமல்ல இன்னும் பல செப்பு பட்டயங்கள் ,கல்வெட்டுகள் உள்ளன , தொடர்ந்து அதை பற்றிய பதிவுகள் வரும்.
arumai
ReplyDeleteஎவரும் மறுக்கமுடியாத ஆதாரம் நன்றிகள் பல
ReplyDelete