Sunday, April 12, 2015

பதிவு 1 தமிழகத்தில் சத்திரியரே கிடையாதா? வர்ணாசிரமம் தமிழர்களுக்கு கிடையாதா?

தமிழகத்தில் சத்திரியரே கிடையாதா? வர்ணாசிரமம் தமிழர்களுக்கு கிடையாதா?

தமிழன் பழமையான ஒரு இனத்தை சேர்ந்தவன் ,வரலாற்று ஆய்வாளர்களின் காலக்கணிப்புகள் எட்டிப்பார்க்க முடியாத காலகட்டத்திலே கடல் கடந்து பல தேசங்களுக்கு சென்று தனது முத்திரைகளை பதித்தவன் தமிழன். ஆனால் அவன் எப்போதும் பாரதம் என்ற நீரோட்டத்திலிருந்து தனி நதியாக பெருக்கெடுத்து ஓடியவன் அல்ல அப்படி ஓட நினைத்தவனும் அல்ல.
இன்று இந்திய மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து உருவானவை என்பதை நாம் நம்புகிறோம். நாம் இன்று பேசும் தமிழுக்கும் பண்டைய தமிழுக்கும் வேறு பாடு உள்ளதை நாம் தெளிவாக அறிய முடியும். அதே வேறுபாடுதான் மற்ற மொழிகளில் மிக அதிகமாக உள்ளதே அன்றி அதுவும் தமிழே.தமிழிலிருந்து வந்ததே. அந்த மொழிகள் பிரிந்தவாறு நம்மிலிருந்து உருவானவர்கள்தான் இன்று பல இனமாக நாம் கருதும் இந்தியர்கள். இந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ததை நாம் ஏற்றுகொள்கிறோம் ஆனால் இந்தியர்கள் தமிழனிலிருந்து பிரிந்தவர்கள் என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது. தமிழன் என்பவன் தனி இனமல்ல அவனிலிருந்து வந்தவர்களே அனைவரும். தமிழ் நாடு என்பது தனி நாடல்ல நம்மிலிருந்து மொழியால் பிரிந்தவர்களயே நாம் வேறு இனமாக பார்க்கிறோம். அவர்களே இன்று நம்மை தனி இனமாக்கி நம் நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள் அது வேறு விஷயம். நாம் அவர்களிலிருந்து சளைத்தவர்கள் இல்லை என்று அவர்களுக்கு உணரவைக்க வேண்டும்.
உண்மையில் இந்துமதம் நம்முடைய சொத்து . இந்து மதத்திற்கு “இந்து மதம்” என பெயரிட்டது வேண்டுமென்றால் நாம் ஆரியன் என்று சொல்லும் ஒருவனாக இருக்கலாம். உண்மையில் அம்மதம் நம் பண்டைய தமிழர்கள் “மூதாதையர் வழிபாடாக” பின்பற்றியது. அதிலிருந்து வந்ததே இன்றைய இந்துமதம்.
இன்று சிலர் தமிழனுக்கும் இந்து மதத்திற்கும் ,தமிழனுக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எந்த சம்மந்தமும் இல்லை என்று பேசி வருகிறார்கள்.
உதாரணமாக திருக்குறள் என்பது எவ்வளவு சிறப்புவாய்ந்த ஒரு சிந்தனைக்களஞ்சியம் என்று நமக்கு தெரியும் , கொல்லாமை கள்ளுண்ணாமை போன்றவைகளை வள்ளுவர் பேசுகிறார் எனவே திருக்குறள் இந்து மதத்திற்கு சொந்த மானதல்ல அது தமிழன் என்ற தனி இனத்திற்க்காக அவனது கோட்பாடுகளால் (புதிதாக நம் மனதில் உருவாக்கப்பட்ட கோட்பாடு) வடுக்கப்பட நூல் போல சிலர் பெசிவருகிரார்கள். அகிம்சை மட்டுமே வள்ளுவரின் தத்துவம் என்றால் தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்குவது ராஜ நீதி என்று இலக்கணம் வகுத்து கொடுத்திருப்பாரா? தமிழனுக்கு இந்து மததத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றால் வள்ளுவர் ஏன் அதில் இந்து மதக்கடவுள்கள் பற்றியும் இந்து மத நம்பிக்கைகள் பற்றியும் அம்மதத்தின் சில ஆணிவேர் போன்ற எண்ணங்கள் பற்றியும் பல செய்திகளை கொடுத்தார்?
"வகுத்தான் வகுத்த வகைஅல்லால் ..", " அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு"
என்று கூறுவதிலும் இறைவனை அதுவும் திருமாலை உணர்த்துகிறார்.
"அடி அளந்தான்" என்பது திருமால். ஆண்டாள் கூட "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்று திருமாலை வழி படுகிறாள்.
"விசும்புளோர் கோமான் இந்திரனே சாலும் கரி" என்று வள்ளுவர் கூறும் போது தேவர்களின் தலைவன் இந்திரன் என்று இந்து மதத்தின் நம்பிக்கையை வலியுறுத்துகிறார்.
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"
- இங்கே எண்குணத்தான் என்பது 8 குணங்களை உடைய சிவ பெருமானைக்குறிக்கிறது. சிவ பெருமானுக்கு 8 குணங்கள் உள்ளன என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்"
- மலரின்மேல் அமர்ந்துள்ள கடவுள் - பிரம்மா - அடி சேர்ந்தார் இவ்வுலகில் நீடூழி வாழ்வார்
"அந்தணன் என்போன் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்" என்று கூறும் போது, அந்தணர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் நடக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
"ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்" என்று அறு தொழிலோர் என்று அந்தணர்களை குறிப்பிடுகிறார். மேலும், ஒரு நாட்டின் அரசன் சரியாக ஆட்சி புரியவில்லை என்பதை அந்த நாட்டின் பசு மாடுகளின் பால் வளம் குறைவதாலும், அந்தணர்கள் தங்கள் நூலான வேதத்தை மறப்பதாலும் உணரலாம் என்று கூறுகிறார்
இந்து மதத்தில் மறு பிறப்பு பற்றிய நம்பிக்கை மிகவும் இன்றியமையாதது.
மறு பிறப்பு பற்றி வள்ளுவர்:
ஒருவன் தன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு 7 பிறவிகளிலும் நன்மை பயக்கும் என்பதை ,
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து" என்று அறிவிக்கிறார்.
தமிழ்நிலத்தில் பார்புகழும் நல்லாட்சி தந்த ,பண்டைய தமிழகத்தை ஆண்ட மாபெரும் புகழுக்குரிய பெரிய மன்னர்களான சேர சோழ பாண்டியர்கள் அனைவரும் ஷத்திரியர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் ,மெய்கீர்த்திகள், கைபீதுகள் மற்றும் நம் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன.

மேலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற தமிழ் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் ஆன்மீகத்தன்மை மட்டுமல்ல வேதநெறியோடு தமிழர்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் மதிப்பையும் பக்தியையும் தெளிவாக காட்டுகிறது.பின்னர் எப்படி தமிழர்களுக்கும் இந்து மதத்திற்க்கும் சம்மந்தம் இல்லை, தமிழர்களுக்கு வர்ணாசிரமம் கிடையாது என்று கூறமுடியும் ?
வள்ளுவன் கூறிய
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்ற குறளின் விளக்கக்கத்தில் பிறப்பினால் அனைவரும் சமம், ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் அவர்களின் தகுதி ஒத்திருப்பதில்லை என்று கூறுவது அவரவரை செய்கின்ற தொழிலின் மூலம் வேறுபடுத்தி காட்டுகின்றதே? அதுவே இந்து மதத்தின் வர்ணாசிரமம். அக்குறளின் உண்மையான கருத்து. பிறக்கும் உயிர்கள் அனைத்தும் சமமே (சமமாக மதிக்கப்படவேண்டும்) தவிர ஒருவனின் குணம் அவன் செய்தொழிலால் வேறுபடும் என்பதே. இதன் மூலம் ஒருவன் தன் தகுதிக்கு எட்டாத இடத்தில் இருந்து அந்த பதவியின் கடமையை முடிக்க இயலாது என்பதே ஆகும்.
எடுத்துகாட்டாக சிறந்த ஆட்சியை ஒரு ஷதிரியனால்தான் வழங்கமுடியும் என்று அன்று இருந்தது. அந்த சிறந்த ஆட்சியை வேறு வர்ணத்தார் வழங்க இயலாது.ஆனால் இன்று அப்படி இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி.
ஒருவன் “நான் ஷத்திரியர்” என்று கூறிய உடனே அவன் பிராமணனுக்கு கீழ்நிலையில் உள்ளவன் என்றாகிவிட்டது என சிலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல. ஷத்திரியர்கள் இரண்டாம் தரக்குடியினர் அல்லர் .அவரே முதல் தரக்குடியினர். அதற்கான விளக்கம் மற்றொரு பதிவில்... கண்டிப்பாக இங்கு இடப்பட்டுள அனைத்து பதிவையும் படியுங்கள்.

1 comment: