Thursday, April 16, 2015

பதிவு 2 ஷத்திரியர் இரண்டாம் தரக்குடிகளா?

ஷத்திரியர் இரண்டாம் தரக்குடிகளா?
முந்தைய பதிவில் (பதிவு 1’ல்) தமிழகத்தில் சத்திரியர்கள் இல்லை என்று சொல்வது அறியாமை என்று பார்த்தோம்.
இந்தப்பதிவில் சத்திரியரே முதற்குடியினர் என்பதை பார்ப்போம். “ஒருவர் “நாங்கள் ஷத்திரியர்” என்று கூறிய உடனே அவர்கள் பிராமணனுக்கு கீழ்படிந்தவர்கள் என்றாகிவிட்டது போல சிலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல.
சத்திரியன் இரண்டாம் வர்ணத்தான் என யார்கூரியது? சத்திரியன் இரண்டாம் வர்ணத்தான் அல்லன் ,அவனே முதல் வர்ணத்தான். மநுதர்மத்திற்கு முந்தைய யுத்த தர்மம் ‘சத்திரியனே அனைவரிலும் உயர்ந்தவன் எனக் கூறுகிறது.

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’ -குறள் 543
எனத் திருவள்ளுவர் கூறியதின் பொருள் யாது? உலகை ஆளுதலும் மக்களை காத்தலும் சத்திரியனின் கடமையாகக் கூறப்பட்டுள்ளபோது அவன் எவ்வாறு இரண்டாம் வர்ணமாக முடியும்? (மநுதர்மம் –அத்தியாயம்,சுலோகம் 72)
வாகனம்,படைக்கலன் இவற்றை தொட்டாலே சத்திரியனுக்கு தீட்டு விலகும்; நீராடினால்தான் பிராமணனுக்கு தீட்டு போகும்(மேலது -6;125)
‘போரில் விழுப்புண்பட்டு இறக்கும் சத்திரியனுக்கு தீட்டு இல்லை; அவனுக்கு வேள்வி செய்வதனால் மேலுலக வாழ்வு கிடைக்கும் எனவும் மநுதர்மம் கூறுகிறது .
சத்திரியனிடம் பொருள்பெற்று ஜீவனம் நடத்த வேண்டியவனே பிராமணன். பிராமணனுக்கு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் கடமை உள்ளவன் சத்திரியன். ஆதலால் சத்திரியன் வசித்த இடத்திலே பிராமணனும் வசித்தான். “பிராமணன் பிழைப்பைத் தேடவேண்டியவன் ; வெகுமதியை ஏற்க வேண்டியவன். ஆனால் மன்னன் விரும்பாவிட்டால் விலக்கப்படக் கூடியவன்” என அயித்த்ரேயபிராமணம் கூறுகிறது.(R.S Sharma, Ancient India, Quoted by Er. T.Thangavel தமிழ் மறைகளும் வடவேதங்களும்)
இந்நிலையில் சத்திரியன் எவ்வாறு இரண்டாம் தரக்குடியவான்? அந்தணரால் உருவாக்கப்பட்டவர்களான அக்னிகுல சத்திரியர்கள் அந்தணர்ருக்கு கீழ்பட்டவர் ஆகலாம்.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் பிராமணர் சொற்ப்படிதான் ஆட்சி செய்தனர் , அவர்களுக்கு அடிபணிந்தே வாழ்ந்தனர் என்றெல்லாம் சில மேதைகள் கதைப்பது வேடிக்கையாய் உள்ளது. பிற்க்கலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் ,உடையாக்கள் ,ராயர் , போன்றோர் அவ்விதம் செயல்பட்டுள்ளனர். இன்றைய அரசியல் தலைவர்கள் எவரெவர் கால்களிலேல்லாமோ விழுகின்றனர்.இக்காலத் திரைப்படங்கள் ,தொலைகாட்சி தொடர்கள், பிராமணர் முன் அரசர்கள் அடங்கி ஒடுங்கிப் பிராணம் செய்வதாகவும், பிராமணர் ஆணவத்தோடு இடும் கட்டளைகளை அவன் கைகட்டிப் பயபக்தியுடன் கேட்டுக்கொள்வதாகவும் காட்டுகின்றன. சிறுவர்களுக்கான படக்கதை நூல்ககூட இவ்விதமாகவே உருவகப்படுத்தப்படுகின்றன. புராணங்களில் சொல்லப்பட்டவை உண்மைக்கதைகள். திரைப்படங்களில் வருபவை திட்டமிட்ட பிரச்சாரமாகும்.

பண்டைய தமிழ் மக்கள் சத்திரிய அரசர்களைத்தான் காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமாகப் போற்றி வந்தனரே அன்றி அந்தணரை அல்ல.
தி.வை சதாசிவ பண்டாரத்தார், சோழர் வரலாறு,பக்கம் 478 . “பெருமாள் முகங்கண்ட பின்னர் “- முத்தொள்ளாயிரம் 81.
“புகா அர்ப் பெருமானார்” –முத்தொ.. 90 .
‘திறந்திடுமின்... .... ..... ரமிழ்நர் பெருமானைக், கண்ணாரக் காணக் கதவு” – முத்தொ.. 85
“மன்னனைக் கண்டு மகிழ்தல் திருமாலைக் கண்டு மகிழ்வதற்கு ஒப்பாகும்” என ஆழ்வாரின் திருவாய்மொழி கூறுகிறது. ( 34-8) .
முறைசெய்து காக்கும் மன்னனைத்தான் மக்கட்கு இறை எனத் திருவள்ளுவர் கூறினாரே அன்றி,அந்தணரை அல்ல. நாட்டிற்கு உயிரானவன் அரசனே என மநுதர்மம் கூறுகிறது. மேற்சொன்ன நூல்களில் உயிரானவன் அரசன் எனக் கூறப்பட்டுள்ளோர் சத்திரிய குல மன்னர்களே ஆவர். அரசனின் அரண்மனையைத்தான் கோயில்,பெருங்கோயில் என அழைத்தனரே அன்றி அந்தணரின் வீட்டை அல்ல. ஆகவே சத்திரியன் இரண்டாம் தரக்குடி அல்லன்.
“அரச வருணத்தாற்குச் சேவை செய்வோரில் பார்ப்பாரும் அடங்குவர். பார்ப்பார் ,உயர்குடி பிறந்த செவகராகவே செயல்பட்டுள்ளனர். தமிழ் மரபு பெயரளவில் அந்தணருக்கு முதலிடம் கொடுத்தாலும். பிராமணங்கள் தருமசூத்திர மரபுப்படி அரசனுக்கே உச்ச அதிகாரத்தை கொடுக்கின்றது.
“மனுஸ்மிருதி இயற்றப்பட்ட காலத்தில் வட இந்தியா முழுவதும் சூரிய சந்திர குலங்களைச் சேராத அக்னிகுல (ராஜ புத்திரர்) அரசர்களின் ஆட்சியே நடந்தது. அக்னி குலத்தவரின் சமூக அந்தஸ்தை பிராமணர்களே தீர்மானித்தனர்.எனவே தான் மனுஸ்மிருதி சத்திரியர்களை பிராமணர்களை விடக் கீழ் நிலையில் வைத்தது”
நாடு முழுவதும் சத்திரியர் ஆட்சிகள் முடிவுற்று,ஆங்காங்கே தாழ்ந்த குலங்களின் ஆட்சிகள் ஏற்ப்பட்டன. புதிதாக ஆட்சிக்கு வந்த ராஜபுத்திரர்,லிச்சாவி, மல்லர், ராயர், உடையார், நாயக்கர், தம்புரான்கள் போன்ற்ப்பல அரசர்களும் தமது பதவியைக் காத்துக்கொள்ள பிராமணர்களின் அதிகாரத்தையும் ஆசியையும் நாடவேண்டிய இருந்தது. இல்லையெனில் ,”நீசனின் ஆட்சியில் நாடு நாசமாகிவிட்டது: ஆட்சியில் இருப்பவனிடம் தர்மம் ,நீதி இல்லாததால், வர்ணபகவான் வர்சாவை பொழியச் செய்யவில்லை; தெய்வக் குற்றத்தால் நாட்டில் கொள்ளை நோய்கள் ஏற்ப்பட்டு உயிர்ப்பலியாகிறது”, என்றெல்லாம் மக்களிடம் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கவிழ்த்திருப்பர் “நீயாவது படையெடுத்துவந்து தர்மத்தை காப்பாற்று” என ,அண்டை நாட்டு மன்னரைத் தூண்டி விட்டிருப்பர்.
பிராமணனுக்கு சாதகமாக ஆட்சிகளையே,நாட்டின் பொற்காலம் என வரலாற்றில் வரைவது வாடிக்கையாகிவிட்டது, சான்றாக சமண,புத்த மதங்களின் தாக்கத்தால் சரிந்து போயிருந்தப் பிராமணர் வாழ்வைத் தூக்கி நிறுத்தி மறுவாழ்வளித்த குப்தர்களின் ஆட்சியையே இன்று வரையில் போர்க்கால ஆட்சி எனப் போற்றுகின்றனர்.
சத்திரியர் ஆட்சிகளிலும், பிராமணனுக்கு சலுகைகள், தானங்கள் வழகப்பட்டுள்ளன. அமைச்சர் , தளபதி பதவிகள் தரப்பெற்றுள்ளன.ஆனாலும், அவற்றிற்கும் ஓர் வரம்பிருந்தது; வரைமுறைகளற்றச் சலுகைள் வழங்கப்படதில்லை. பிராமணராயிரும்,தவறு செய்தவரகளைத் தண்டிக்காமல் விட்டதில்லை.
ஆனால் இடையில் வந்தவர்களின் ஆட்சிகளில்தான்,பிராமணரின் அதிகார அத்துமீறல்கள் நடந்துள்ளன. சான்றாக “திருமலை நாயக்கனின் தளவாயாக இருந்த பிராமணனான ராமையப்பன் பழனிக்குச் சென்றிருந்த போது , அங்குள்ள தண்டாயுதபாணி கோயிலில் தரப்பெற்ற பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டான். காரணம், அக்கோயிலில் பரம்பரையாகப் பூசை செய்துவந்தச் சைவப் பண்டாரங்களின் கையால்ப் பிரசாதம் வாங்குவது,தன சாதி அந்தஸ்துக்கு இழுக்கு என அவன் எண்ணியதே தண்டாயுதபாணியின் பிரசாதத்தை விட,எவர்கையால் வாங்குகிறோம் என்பதே அவனுக்கு முக்கியமாகப்பட்டது. விளைவு? அப்பண்டாரங்கள் நீக்கப்பட்டு .அப்பணிக்கு ஐந்து பிராமணர்கள் உடனடியாக நியமிக்கப் பட்டனர். இப்படிச்சம்பவம் ஒன்றையாவது சத்திரியனின் ஆட்சியில் காணமுடியுமா? (நாடு விடுதலை அடைந்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக அறநிலைத்துறைக்கே மைச்ராக்கியது, ஒரு சத்திரியரின் ஆட்சிதான்.மூன்றாவது அமைச்சரவை அமைத்த போதுதான், ஒரு பிராமணருக்கே அமைச்சரவையில் இடம் தரப்பட்டது.)

சத்திரிய மன்னன் எவனும், பிராமணன் காலில் விழுந்து ஆசிபெற்றதாகச் சங்க நூல்களிலோ , பிற்கால இலக்கியங்களிலோ, கவேட்டு, செப்பெடுகளிலோ காணப்படவில்லை. காலையில் துயில் எழும்போது பிராமணன் முகத்தில் விழிக்கவேண்டும்; இரவில் படுக்கும் முன்னரும் பிராமணனிடம் ஆசிபெறவேண்டும்; உண்பதற்கு உறங்குவதற்கும் கூடப் பிராமனின் ஆலோசனையைப் பெறவேண்டும். அமைச்சராகும் தகுதி,பிராமணனுக்கே உண்டு என்ற நியதிகளேல்லாம். புதிதாக ஏற்றம் கண்ட பிறங்கடைகளின் ஆட்சியில் ஏற்ப்பட்ட புதுச்சட்டங்களே.
“புவன முழுதுடையாளோடும் வீற்றிருந்த..’,
உலகமுழுதுடையாலோடும் வீற்றிருந்தருளிய..”,
“முக்கோக் கிழனாடிகளோடும் வீற்றிருந்தருளிய ..”
என்றெல்லாம் , தம் பட்டத்தரசியுடன் அரியணையில் வீற்று இருந்ததாக மெய்க்கீர்த்திகளில் மூவேந்தரும் (சேர சோழ பாண்டியர்) கூறியுள்ளனரே தவிரே,
‘அந்தணரோடு வீற்றிருந்தருளிய ‘ என்றோ
‘அந்தணர் ஆசியுடன் ,அவர்தம் கீழ் வீற்றிருந்தருளிய ..’ என்றோ ஒருபோதும் அன்னோர் கூறியதில்லை.

மூவேந்தரிடம் , பிராமணர் கையேந்தி நின்றனரே தவிர, வேந்தர்கள் பிராமணரிடம் கையேந்தவில்லை. ‘குடியிருக்க பிரமதேயமாக நிலம் வேண்டும். (தங்களின் தொழிர்கூடங்களான) கோயில்களுக்கு மான்யம் வேண்டும்; மண்டபம் கட்டவேண்டும் ;கோபுரம் கட்டவேண்டும்; சம்ரோட்ஷணம் செய்ய வேண்டும். பாலாபிஷேகத்துக்கு பசு வேண்டும்; பஞ்சாமிர்தத்துக்கு பழம் வேண்டும் ‘ விளக்கு எரிக்க (போஜனத்துக்கு) நெய்வேண்டும்; இவ்வாறான வேண்டுகளுடன் தானத்திற்காக அரசரை அண்டியவர்கள் பிராமணரே. இதனை எத்தனையோ கல்வெட்டுகள், செப்பேடுகள் உணர்த்துகின்றன. பொருள் கொடுத்து வேள்வி செய்வித்தவன் சத்திரியன். ஊதியம் பெற்று வேள்வி செய்தவன் பிராமணன். தானம் பெற்று வாழ்வது பிராமணரின் கடமையெனவும் ,தானம் செய்வது சத்திரியரின் கடமையெனவும் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.
தொழ்ற்சாலையில் உடலால் கடினமாக உழைக்கும் தொழிலாளியைவிட, எழுத்துவேலையில் உள்ளவனுக்கு செல்வாக்கு அதிகம். அவனைவிட கண்காணிப்பாளன், மேலாளனுக்கு அதிகாரமும் ஊதியமும் அதிகம்.(ஆனாலும்,சம்பளம் கொடுக்கும் முதலாளியே சர்வ அதிகாரமும் படைத்தவர்) பொதுவாக உடல் உழைப்பைவிட மூளையால் உழைப்பவரே உயர்ந்த இடம் வகிப்பர். எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஐம்புலன்களில் நான்கு புலன்களாக கண் ,காது ,மூக்கு, நாக்கு போன்றவை இருப்பது தலையில். ஆகவேதான்,தலை உடலின் மேற்ப்பாகத்தில் அமைந்துள்ளது.

சிந்தனை ,நினைவு ,ஆற்றலுடன் அனைத்து உறுப்புகளும் கட்டளையிடும் மூளை உச்சத்தில் உள்ளது. ஆகவே மூளையால் உழைப்பவர் முதன்மை பெறுவது இயல்பே.பிராமணர் வேதத்தைக் காதால் கேட்டு, மூளையில் பதியவைத்து, வாயால் ஓதியதால் சிறப்பு பெற்றனர்.தலையால் பிழைப்பவர் என்பதையேப் பிரம்மாவின் தலையில் பிறந்தவர் எனப் பரப்பிவிட்டனர். சத்திரியன் தோள் வலிமையால் நாட்டைக்காத்ததுடன், தலையால் சிந்தித்து நீதி நெறியுடன் ஆட்சி செய்யும் கடமை பெற்றிருந்தான். ஆதலால் சத்திரியனே நாட்டின் தலைமையானவன். ஆனால், பிற்காலத்தில் தோள் வலிமை மட்டுமேப் பெற்றிருந்தோர் ஆட்சிக்கு வரநேர்ந்தமையால், அன்னோர் தம் புத்திக்கொள் முதலுக்காக பிராமணரை சரணடைந்தனர். அதனால் பிராமணர் ஏற்றம் பெற்றனர் .அதன் தொடர்ச்சியாகவே, நாடு விடுதலை பெற்றபோது, அனைத்து உயர்பதவிகளையும் பிராமணர் பங்குபோட்டு கொண்டனர்.
அரசு .மதம் இடையிலான போட்டி, நெடுங்காலமாகவேப் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வந்துள்ளது.இந்தியாவில் சத்திரியர் ,பிராமணர் இடையிலான ஆதிக்க போட்டி வேதகாலம் முதலே உள்ளது. கௌசிக மன்னனான விசுவாமித்திரன் – வசிட்டன் பூசல் முதல், பலவற்றை தனி நூலாகவே எழுதலாம். ஆனாலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம் போன்ற எண்ணற்ற புராணங்களும் சத்திரியரையே தலைவனாகக் கொண்டு இயற்றப் பெற்றுள்ளன அவற்றில் பிராமணர் துணைப் பாத்திரங்களே.
இராமன், கிருஷ்ணன் ,சிவன், முருகன், காளி, லட்சுமி, அய்யப்பன், போன்ற சத்திரிய தெய்வங்களையே, பிராமணர் உட்பட மக்கள் அனைவரும் வணகுகின்றனர் பிராமண தெய்வமாகக் கூறப்படும் பிரம்மாவுக்கோ, ருக்வேதத் தலைவனான இந்திரனுக்கோ வழிபாடில்லை. ஆதி முதலே இருந்துவரும் இந்து மதத்தில் ஏற்ப்பட்ட பிராமண ஆதிக்கத்தால், அதிலிருந்து மக்களை விடுவிக்க சத்திரியர் உருவாக்கிய மதங்களே சமணம்,பௌத்தம்.


இந்து மதத்தில் சங்கரர்,இராமானுசர், மத்வர்,சாய்பாபா,ராகவேந்திரர் போன்றோரின் சமயப்பணிகள், சமயத்திலும்,சமுதாயத்திலும் பிராமண மேலாண்மைக்காக நடைபெற்ற முயற்சிகளே ஆகும். ஆயினும் சத்திரியக் கடவுள்களுக்காக, சத்திரியர்களால் கட்டப்பெற்ற ஆலயங்களில், ஊதியம் பெற்றுப் பணி செய்தவர்களே பிராமணர்.
ஆதலால் சத்திரியர் என்று ஒருவர் சொல்வதினால் தவறோ, இழிவோ இல்லை.ஆனால் இன்று தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொள்வோரிடம் அந்த தகுதி இருக்கிறதா என்பது நியாயமான கேள்வி.

2 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  2. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete