Monday, March 30, 2015

பனையின் பூர்வீகம் இலங்கையா - கால்டுவெல் ஒரு அடிமுட்டாள்.

சாணார்கள்(நாடார்கள்) இலங்கையிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது அங்கிருந்து பனங்கொட்டைகளை கொண்டுவந்தனர் தமிழகம் முழுவதும் விதைத்தனர். அதற்க்கு முன் இந்தியாவில் பனைகள் கிடையாது. இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் நாடார்கள், என்று அறிவுகெட்ட ஆங்கிலேயன் கால்டுவெல் கூறுவதை நம்பும் அடிமுட்டாள்களே..
இதை முழுவதும் படியுங்கள்.
பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?
அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”
“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)
“பானிற வுருவிற் பனைக்கொடியோனும்” - (புறநானூறு 33-2,3)
பனை பற்றிய வேறுசில பாடல்கள்.
“பனைநுகுப் பன்ன சினைமுதிர் வராலோடு” –புறநானூறு 148-5
(வரால் மீனுக்கு பனம்பாளை உவமையாகக் கூறப்பட்டது)
“பனைத்திர ளன்ன” – அகநானூறு 148-1
“முழாவரைப் போத்தை” –புற 85-7.357-4.
(முழவைப் போன்று பெருத்த அடியை உடைய பனைமரம்)
“ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளறையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்..” – புற 288- 1,2,3
(இரவில் தோன்றும் அனுடத்தின் ஆறு நட்சத்திரங்களும் பனை போன்று தெரிவதால் அனுடத்திற்கு முடப்பனை என்று பெயர்)
“பனைத்தலைக் கருக்கு நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்” –குறுந்தொகை 372-1,2,3
(பனையின் உச்சியிலுள்ள கருக்குடைய நீண்ட மடல்களை,காற்றினால் வீசப்படும் மணல் மறைக்கும். அத்தகைய மணல்மேடுகலை உடைய கடற்கரையில்..)
இவ்வளவு ஏன்? இராமபிரான் பரிசாக பெற்ற பனைமரம் தெரியுமா?
இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன
ஏழு பனை மரங்கள்" என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இராமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.
கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆராய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான்
ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். அதுவே இப்போது நீங்கள் பார்க்கும் புகைப்படம்.

ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.
அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும்.
இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம்..
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் (பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர்) அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம்.
இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை.
சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை.
இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனை....ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது.
நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன காத்திருங்கள் தருகிறேன்.

Tuesday, March 10, 2015

அருப்புக்கோட்டை நாடார் கல் கோவில்

அருப்புக்கோட்டை நாடார் கல் கோவில் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சமேத ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் திருக்கோவில் ஆலய வரலாறு :

பாரதத்தில் சிறந்த தென்நாட்டினில் பாண்டிய வளநாட்டில் பசுமை நிறைந்த வில்வ வனச் தேத்ரமாகிய திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை திருப்பதிகையில் பிரம்மா, விஷ்ணு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள். நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகள் முதல் வரும் உயிரணைத்தையும் வாழ்விக்க எண்ணி அமுதமயமாய் அழகிய திருஉருவோடு விமலமார் பரம்பொருள் யாமென, ஆதிபராசக்தி துவரிதழ் கொடியிடை அம்மையாம் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சமேத ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் பசுமைமாறா வில்வ மரத்தடியில் யாரும் அறியாமல் தோன்றாமல் தோன்றினார்.
1856 ஆம் ஆண்டு வாழ்ந்த தன வணிகரும், பெரும் நிலக் கிழாருமான க்ஷத்ரிய குலத் தோன்றல் தெய்வத்திரு மகனாகிய நாடார் குலத்திலகம் ஸ்ரீ மான் முதலாளி மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி “அன்ப நிவிரும் நும் க்ஷத்ரிய குலமும் மேன்மயுடன் விளங்குவீர்கள். நிலமும், சூரியனும் உள்ளவரை உங்கள் குலம் விளங்க யாம் அருள் வழங்குகிறோம்.யாம் இருக்குமிடத்தில் ஓர் கற்றளியமைத்து அதில் அமுதலிங்கமாக எம்மை பிரதிஷ்டை செய்வீர்களாக“ என்று திருவாய் மலர்ந்தருளினார். தான் கனவில் கண்ட இடத்தையும், வில்வ மரத்தையும் காண ஆர்வம் கொண்டு தன் பந்தங்களுடன் அந்த அடர்ந்த வில்வ வனத்தில் அலைந்து கண்டுபிடித்து “ நமசிவாயம், நமசிவாயம் என்று ஆனந்த கூத்தாடினார். அந்த வில்வ மரத்தடியைத் தோண்ட ஆயிரம் சூரிய ஒளியினை ஒருங்கே கொண்ட லிங்க வடிவமாக ஸ்ரீ அமுதவிங்கேஸ்பரர் மிகப் பிரகாசமான ஒளியுடன் திருக்காட்சியருளினார்,
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக கருதப்பட்ட நமது சமூகத்தினர் சிவாலயங்களில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டு வந்தனர். அவ்வாறு இருந்த காலகட்டத்தில் அனைவராலும் ஆச்சரியப்படும் வண்ணம் சிவாலயத் திருப்பணியைத் துவங்கி “என் கடன் இறைப் பணி செய்வதே“ என்று விரதமேற்றுக் கொண்டு கோவில் பன்னெடுங்காலம் பழுதுறாவண்ணம் கற்கோவிலாக கட்டி முடிக்க அருப்புக்கோட்டை க்ஷத்திரிய குல நாடார் பெருமக்கள் முடிவு செய்தனர்.
மார்க்கண்டேய புராணம், லிங்கபுராணம் மற்றும் நீலகண்ட புராணம் ஆகியவை “சிவனின் 1008 திருஉருவங்களிலும் முதன்மையானதும், அதிக சக்தியானதும் அனைத்திலும் சிறந்ந்தது ஸ்ரீ அமுதலிங்கமே யாகும்“ என கூறுகின்றன. தேவர்களுக்கு துருவாசர் இட்ட சாபம் நீங்க தேவர்களும், அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிழ்தம் எடுக்க விழைகையில் வாசுகி நாகம் தான் அதுவரை சேர்ந்து வைத்திருந்த ஆலகாலம் எனும் விஷத்தை தேவர்களை நோக்கி உமிழ்ந்தது. அந்த விஷமானது தேவர்களைத் தாக்காத வண்ணம் சுந்தரர் உதவியோடு சிவனே உண்டு விழுங்கினார்.அன்னை பராசக்தி தன் சக்தியினால் அவ்விஷத்தை சிவனின் கண்டத்தில் நிறுத்தினார் என நீலகண்ட புராணமும் பின்பு “பாற்கடலில் தோன்றிய அமுதத்தை அன்போடும் தேவர்களுக்கு வழங்கி துருவாசர் சாபம் நீங்கச் செய்து நல்வாழ்வு வழங்கி, ஸ்ரீ அமுதலிங்கமாக காட்சி தருகின்றார்“ என லிங்க புராணமும் கூறுகின்றது. அத்தகைய முதன்மை லிங்கமாகவே சிவன் வில்வ மரத்தடியில் யாரும் அறியாத வண்ணம் அழகிய திருஉருவுடன் தோன்றி அருள்பாலித்து வருகின்றார்.
இத்திருக்கோவிலை 54000 சதுரடி நிலப்பரப்பினில் அமைக்க அருப்புக்கோட்டை க்ஷத்திரிய நாடார்கள் முடிவெடுத்தனர். வேத ஆகம வித்தகர்கள் அறிவுப்படியும். சிற்பகலை வல்லுனர்கள் கொண்டும் பார்த்தவர் பிரம்மிப்பைடையும் படி அழகின் திருவுருவாய் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் திரு உருவச்சிலையை உருவாக்கினர். இன்று வரதராஜ பெருமாள் சன்னதி இருக்கும் இடத்தில் முதன்முதலாக ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரரையும், ஸ்ரீ அமுதவல்லி அம்மனையும் பாலாயம் செய்தனர். கடினமான மேடு பள்ளங்கள் நிறைந்த இத்தலத்தினில் மதில் சுவர்களின் அஸ்திவாரம் 20 அடி ஆழத்திற்கு தோண்டப் பெற்று அதை நிரப்பும் பணி 10 ஆண்டுகள் நடைபெற்றது. 20 அடி ஆழத்திற்கும் பலவகையான உறுதியான கற்களாலும் அரைத்த சுண்ணாம்பு கொண்டு உருவாக்கினர். ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பிற்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என அன்றே முன்னோர்கள் தயாரித்த திட்ட விளக்க வரைபடம் இன்றும் நம் கோவிலில் இருக்கின்றது. அதனால் ராஜகோபுர அஸ்திவாரம் மட்டும் பனை மர உயரத்திற்கு தோண்டி மூடப்பட்டுள்ளது. மேலும் ஆலய அமைப்பின் சிறந்த வல்லுனர்களின் அறிவுரைப்படி மூன்று பிரகாரங்களாக அமைத்து அதனைக் கட்டுவதற்கு தரமான கற்களை கொண்டு வர முன்னோர்கள் படாதபாடு பட்டனர் என்பது உறுதி.
கடினமான இந்த திருப்பணியினை அருப்புக்கோட்டையைச் சூழ்ந்துள்ள 56 பகுதி க்ஷத்திரிய குல நாடார்களின் கடினமான கூட்டு உழைப்பால் தொடர்ந்து உருவாக்கப்பட்டது தான் இத்திருக்கோவிலாகும். இதனை ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் ஆலய முதல் சுற்றுப் பிரகாரத்தின் தெற்கிலுள்ள மகா மண்டபத்தின் வெளிப்புற சுவரில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டினால் அறியலாம்.
1866 முதல் 1887 வரை ஸ்வாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் திட்டமிட்டபடி திருப்பணிகள் செய்தனர். அருப்புக்கோட்டை நகர் அப்போது இராமநாபுரம் சமஸ்தானத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தது. நம் சமுதாயத்தினர் மன்னர் அனுமதி இன்றி சிவாலயம் கட்டுவதாக சில இனத்தார் மன்னரிடம் புகார் செய்தனர். 1896 ஆம் ஆண்டு மானாமதுரை டி.மு. கோர்ட்டில் அவர்கள் பிராது செய்ய,கோவில் கட்டுவதை நிறுத்தும்படி சமஸ்தானத்திலிருந்து உத்தரவு கொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மன்னர் உயர்திரு. பாஸ்கர சேதுபதி அவர்கள் தன் அரண்மனையில் மகா நவமியைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவ்விழாவில் மன்னரைப் புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் செல்வது வழக்கம். ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரரின் பெருமைகளையும், சிறப்புகளையும் நன்கு உணர்ந்த அரன்வாயல் புலவர் வேங்கட சுப்பு பிள்ளை அவர்களும் மன்னரைக் காணச் சென்றார். தன்னை மிகவும் கவரும் பாடல் ஒன்றைப் பாடினால் அவர் கேட்கும் வரங்களை அளிப்பதாக மன்னர் வாக்களித்தார். இதையே தக்க வாய்ப்பாகப் பெற்ற கவியரசு:-
“பாட்டினைப் பாடும் பாவலர்க்கிளவை பாட்டினைக்
கொடுத்துளம் கருணை புரிவாய்
நாட்டினைக் கொடுத்தும் நகரினைக் கொடுத்தும்
நனியவர் வாழ்ந்திடக் குலவு
தேட்டினைக் கொடுத்தும் நின் புகழ் பேசும்
மிக்க சான்றோர் வாழ் அருப்புக்
கோட்டையில் ஓங்கு சிவாலயம் வளரக்
கொற்றவை கிருபை செய்குவையே“ என்று பாட, அதைக் கேட்ட மன்னர் மனம் மகிழ்ந்து திருப்பணியைத் தொடர உத்தரவு கொடுத்தார். 1898 ஆம் ஆண்டு நம் நகர் க்ஷத்திரிய நாடார்கள் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு ஊர்வலமாய்ச் சென்று மாலை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.
இதனை:-
“கடைந்த கோது பாற்கடலில் பொங்கி வந்த
கொடிய ஆலகால நஞ்சை உண்ட நாதர்
உடையவள் அமுதவல்லி திறத்தினாலே
அமுத லிங்க ஈஸ்பரராய் ஒளிரக் கண்டோம்
தடைகள் பலவும் திருப்பணிக்கு வந்த போதும்
தரணியாளும் லிங்கேசர் அருளினாலே
கொடை வள்ளல் சேதுபதி புலமை போற்றி
கோவில் நற்றிருப்பணிக்கு வாழ்த்தும் தந்தார்“
என்ற பாடல் மூலம் அறிகின்றோம்.
மிகுந்த உற்சாகத்துடன் நம் குல மக்கள் இறைப்பணியைத் திட்டமிட்டபடி செய்தனர்.கல் தச்சுப்பணி தொடங்கப்பட்டு, சிற்றுளியின் ஒலி எங்கும் கேட்டது. தொடர்ந்து திருப்பணிகள் பெருகப் பெருக சிவாலயப் பணியில் நம் மக்கள் ஒன்றி விட்டனர். ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் சன்னதி மற்றும் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சன்னதித் திருப்பணிகள் முடிவுற்று 24.4.1907 ம் நாள் மஹா கும்பாபிஷேகம் பெருவிழா தரணி காணச்சிறப்புடன் நடைபெற்றுள்ளது.அன்றைய கும்பாபிஷேகப் பத்திரிக்கை இன்றும் திருக்கோயிலில் உள்ளது.
கும்பாபிஷேகப் பெருவிழாவிற்குப் பின்னர் தேவதச்சனும் போற்றும் வண்ணம் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு ஆலயப்பணி வளர்ந்தோங்கியது. ஸ்வாமி சன்னதியில் ஆறு கால் மண்டபம், மணி மண்டபம், பந்தா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடம், கொடி மரம், அம்மன் சன்னதியில் ஆறுகால் மண்டபம் என்று திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. திருப்பணிகள் தொடர்ந்ததுடன் சிவாலயத்தில் நடைபெற்று வரும் அத்தனை விழாக்களுக்கும், பூஜைகளுக்கும் கட்டளைகள் ஏற்படுத்தி தவறாமல் நடைபெற்று வருமாறு செய்துள்ளனர். ஆலய வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவர சிற்றுளிச் சத்தம் இன்றும் கேட்டுக்கொண்டேயுள்ளது.

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய நாடார்

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய நாடார்

திரு.ஆறுமுக சுவாமி நாடார் சிலை அழகை பாருங்கள்.....



திருச்செந்தூர் இராஜ கோபுரத்தை கட்டிய மகான்.
இவரது ஊர் திருநெல்வேலி 'கடையம்'.

கடையம் சிவன்கோவிலில் பவனி வரும் திருத்தேரின் கைங்கர்யமும் திரு.ஆறுமுகசாமி இராஜ சித்தருடையதே!

பெரும்பாலான தமிழக கோவில்களில் உள்ள இராஜ கோபுரங்கள் மன்னர்களின் கொடையால்தான் கட்டப்பட்டுள்ளது.

சித்தர்களின் திருத் தலமான திருச்செந்தூரில் "என் முருகபெருமானுக்கு பல்லாண்டு காலமாக இராஜ கோபுரமே இல்லையே" எனும் ஏக்கத்தில் கடையத்தை விட்டு திருச்செந்தூருக்கு தான் சேமித்த பொருளாதாரத்துடன் புறப்பட்டு தன் இறுதி காலம் வரை வாழ்ந்து வந்தார் மகான் ஆறுமுகசாமி .

திருவாடுதுறை ஆதீனம் உள் பட பல சான்றோர் (நாடார்) குல கொடையாளர்களை ஒருங்கிணைத்து இந்த அதிசய இராஜ கோபுரத்தை உருவாக்கிய ராஜசித்தர் ஆறுமுகச்சாமி நாடார்.

திருச்செந்தூர் இராஜ கோபுரத்தின் உயரம் 120 அடி.
கடல் மண்ணாக இருப்பதாலும்,கடலை மிக அருகில் ஒட்டியே இருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு இடையில் சுமார் 90 அடி ஆழம் அடித்தள கட்டுமானம் அமைத்தார்.

அஸ்திவாரத்தில் நீரின்றி கோபுரம் வெடிப்பு விட்டு விடக்கூடாது என்பதால் கோபுரத்தின் நான்கு புறமும் சரளமாக நீர் புக கோபுரத்தின் நான்கு புறமும் மணற்பாங்கான காலி பகுதியாகவே இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார் திரு.ஆறுமுகசாமி அவர்கள்.

(இந்த நான்கு புறத்தின் ஒரு பகுதியில்தான் நீர் சரளமாக உள்ளே போகாதவண்ணம் இராஜ கோபுரத்தை மறைத்தும் கட்டப்படுகிறது)

இவர் திருச்செந்தூரில் ஒரு அற்புத தீர்த்த கிணறு ஒன்றை உருவாக்கினார்.கடல் அருகே உள்ள இந்தப் புனித நீரில் குளித்தால் தோல் நோய் நீங்கும்...மற்றும் சித்த பிரம்மையே நீங்கும்.

இம்மகனார்க்கு திருச்செந்தூர் திருக்கோவிலில் அற்புத திரு உருவச் சிலை உள்ளது.

இராஜ கோபுரத்திற்கு நேர் எதிராக அதன் அழகை கருணையுடன் பார்த்து மகிழ வைக்க வேண்டிய திரு.ஆறுமுகசாமி மகான்... தற்சமயம் சித்த மருத்துவம் நடைபெறும் அறையில் ஓரத்தில் இருக்கிறார்.

இது உங்களுக்கு தெரியுமா?

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"

எத்தனையோ இடம் முருக பெருமானுக்கு இங்கு இருக்க திருச்செந்தூர் இராஜ கோபுரத்தை மறைத்து தமிழக முதல்வர் தீர்மானத்துடன் காவடி மண்டபம் கட்டப்படுகிறது அதிசயமே!

அதை தடுத்து நிறுத்த உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர முருக பெருமானிடம் உத்தரவு கேட்கச் சென்றேன்(Balasubramania Adityan).
அதிசயமான உத்தரவு அன்று கிடைத்தது.
மறைக்க கூடாது என வழக்கு தொடர்ந்தேன் .

மறுநாள் திரு ஆறுமுகசாமி அவர்கள் பற்றியே அறிந்திராத எனக்கு (Balasubramania Adityan) . என் அருமை நணபரும்,தியாகி சுப்பைய்யர் அவர்களின் பேரனுமான திரு.வினோத் சுப்பையன் Vinoth Hinthu Nationalist Ks மூலமாக திருஆறுமுகசாமி அவர்களின் திரு உருவ சிலையை கண்டேன்.

அப்போது தான் அவர் இராஜ கோபுரத்திற்காக அவர் செய்த தியாகங்களையும் அறிந்தேன்....

எத்தனையோ முறை நான் வந்த போது காண இயலாத திருஆறுமுக சாமி அவர்கள் திரு உருவ சிலை இந்த இராஜ கோபுரம் வழக்கு தொடரும் நேரம் எனக்கு தெரிவானேன்!?...சிலிர்ப்பூட்டும் அதிசயம்.

அதிசயம் இன்னும் என்னை விட்டபாடில்லை....

திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகரை உருவாக்கிய ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு என் நண்பரின் இடம் சம்மந்தமான பிரச்சினைகள் குறிப்பை அறிய சென்றேன்.
அவர் எனக்கு முன் பின் தெரியாது.

அவர் அந்த குறிப்புகளை எல்லாம் கொடுத்து விட்டு....என்னிடம்

ஐயா...உங்க குடும்பம் இந்த முருகருக்காக எவ்வளவோ கைங்கர்யம் செய்து இருக்காங்க .

உங்க அப்பா தியாகி S.T.ஆதித்தனார் இந்த ஊருக்கே எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்காங்க.

நீங்க...இரண்டு வாசல் போட மூலஸ்தானத்தில் உள்ள 40 இஞ்ச் சுவரை உடைக்க வந்த அரசை கோர்ட்டுக்கு போய் தடை ஆணை பெற்று முருகருடைய மூலஸ்தானத்தை காப்பாற்றினீர்கள்.தாமிரபரணிக்காக எத்தனையோ செய்கிறீர்கள் ....

"எனக்கு வயது 84.
என் இடம் அமலிநகரில் உள்ளது.
திரு ஆறுமுகசாமி அவர்களின் இடமும் அதில் உள்ளது.
அந்த தீர்த்த கிணறில் குளித்தால் புத்தி சுவாதீனம் மற்றும் தோல் நோய்கள் தீரும்" என்றார்.
பீரோவைத் திறந்தார்.
சில பத்திரங்களை தந்தார் .
இது ஆறுமுகசாமி அவர்கள் இடத்தின் பத்திரம்.
அவர் பெயராலேயே பட்டாவும் உள்ளது.
ஏதோ இன்று ஆறுமுகசாமி பெயரில் உள்ளவர்கள் அதை பட்டா போட்டு விட கூடும்.
இடம் இன்று பல கோடி பெரும்.

"முருகனின் சொத்தாக சேர்க்க வேண்டிய பணி இனி உங்களது" என்று என்னிடம் பத்திரத்தை கொடுத்தார்.
பெரியவரின் பாதத்தில் விழுந்து ஆசி பெற்று ஒத்துக்கொண்டேன்.
அதிசயமே ...என் அதிசயித்தேன்.

இராஜ வாழ்க்கை வாழும் குடும்பத்தில் பிறந்து இறைவனுக்காக அனைத்தையும் துறந்து வாழ்பவர்கள் இராஜ சித்தர்கள் என போற்றப்படுகின்றனர்.

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய மகான் ராஜ குடும்பத்தை சார்ந்த "ஆறுமுகக்சாமி நாடார்" ஒரு ராஜ சித்தர் ஆவர்,

"திருச்செந்தூர் கோவிலில் மேலைக் கோபுரம் கட்டப்பட்டப்போது, 1779ல் சான்றோர் சான்றோர் சமூகத்தவரே அதில் முதன்மையான பங்கு வகித்தனர். என்பதை " 1872ல் ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்றத்தில் இதை நிருபித்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர்..இவர் வம்ச வழியினர் களை தேடி மீண்டும் உண்மையை நிருபித்து சித்த மருத்துவம் நடைபெறும் அறையில் ஓரத்தில் மறைத்து வைக்க பட்டிருக்கும் இவர் சிலையை வெளிக்கொண்டு வந்து ராஜகோபுரம் முன்னால் நிறுவ போராடும் அய்யா தாமிரபரணி நிறுவனர் Balasubramania Adityan அவர்களுக்கு தமிழ்ச்செல்விநாடாரின் மனமார்ந்த நன்றி.....

நீங்க திருச்செந்தூர் கோவிலுக்கு போனால் இதை பார்க்க முயற்சி பண்ணுங்க.நாடார்களே! நம் வரலாறுகள் மறைக்கபடுவதை தடுப்போம் நாடார்களே......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா ! நாடார்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் உரிமை கொடு முருகா ! நன்றி !

30 நாட்களுக்கு முன்பு பதிவிட்ட ஐயா Balasubramania Adityan தகவலுடன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் வம்ச வழியினருடன் நான் (தமிழ்ச்செல்வி நாடார்) தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொது இதை மீண்டும் நிருபிக்க முடியும் ,கோபுரத்தை கட்டியது நாடார்களே என உறுதிபட சொல்லியதால் இதை இன்று 01.03.2015 ல் பதிவிடுகிறேன்.இப்போ என்மனம் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறது..ஒவ்வொரு நாடார்களுக்கு பரவ வேண்டிய செய்தி இது.சத்தியம் ஒரு நாளும் அழியாது என்பது உண்மை...........

என்றும் அன்புடன்

தமிழ்ச்செல்வி நாடார்.

Sunday, March 8, 2015

ஆண்ட வம்சம் எவனுக்கும் அடங்காது


"ஆண்ட வம்சம் எவனுக்கும் அடங்காது "

இந்த வாக்கியத்தை சொல்ல நாம் தகுதியானவர்கள்தான்.

"கொத்தெடுத்து மண்வெட்டோம் கொற்றவரை கைமுகைப்போம் கூடை தொடோம்"
செங்கோல் ஏந்த வேண்டிய கையில் மண்வெட்டி பிடித்து வெட்டி வேலை செய்ய மாட்டோம் என்றும் பொருள்பட “கொத்தெடுத்து மண் வெட்டோம் கூடையில் மண் சுமவோம்” என்று சொல்லி அடங்கமறுத்து தொடங்கிய நம் போராட்ட வரலாறு.. இன்றுவரை தொடர்கிறது.

ஆண்டுகள் பல ஆயிரம் போர்வீரர்களாக இருந்து போர்புரிந்த வம்சம்..

நமக்குள்ளே வாரிசுரிமை போர்களை செய்து ஆட்சியை கைவிட்ட சேர சோழ பாண்டிய வம்சம்.

ஆட்சியை கைவிட்டு அன்று அடக்கு முறையினர் கைகளில் சிக்கி அடங்க மறுத்து போராட்டம் செய்த வம்சம்.

இன்று உரிமையை மீட்டெடுக்க போராடுகிறது..

என்று தொடங்கியதேன்றே தெரியாத நம் போராட்ட வரலாற்றில் எத்தனை உயிர் தியாகங்கள் எண்ணிக்கையில் சொல்லி மாளாது.
நாம் எதற்காக பல உயிர்களை இழந்தோம்?

நம்மால் ஏன் அமைதியாக வாழமுடிய வில்லை?

சிந்தியது பார்த்தால் ஒரே விடைதான் கிட்டுகிறது.

ஆம், நாம் தன்மானத்தை, உரிமைகளை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத குணமுடையவர்கள் என்பதையே நம் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

"நாம் எவருக்கும் அடிபணியாதவர்கள்"

நாம் வரலாற்றில் யாருக்கும் அடிபணிந்து இருந்ததில்லை,யாருக்கும் அடிபணிந்து தொழில் செய்ததில்லை. அடக்கு முறைகளை எதிர்த்து போராடுவதே நாடார்கள் குணம்.போராடுவது தான் நம் இனத்திற்கு அழகு.

துஷ்டர்களை பார்த்து நாம் பின்வாங்க வேண்டாம், நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்தது ஒன்றுதான்.
அது...

"உயிரை விட மானம் பெரிது"

வாள் பிடித்த கைகள் ஆயுதம் பிடிக்க தயங்காது என்பதை நாம் உணர்த்த வேண்டும்.

நாடார்கள் ஓன்று சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- நாடார் நற்பணி இயக்கம்.

தியாகத்தாய் சிவகாமி அம்மையார்


மகளிர்தினமான இந்நன்நாளில் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரின் தியாகத்தை தெரிந்துகொள்வோம்.
காமராஜரைப் போன்றவர்களைக் கொண்டாடத்
தவறுவதால்தான், இந்த தேசத்தில் ஒழுக்கமும், நேர்மையும் அழிந்து போய் மனிதாபிமானம் தெருவில் கிழிபட்டுக் கிடக்கிறது.
பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.
அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல் போனதுதான், ‘அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்’ என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.
அந்தப் பேட்டி (2.7.1961):
விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.
அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.
மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.
“வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.
பண்புமிக்க அந்த மூதாட்டியார், ‘நீங்கள் யார்?’ என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).
“ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை,
தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”
“ஆமாம் அய்யா… அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!” தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.
“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”
“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”
“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”
“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”
“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”
“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”
“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”
“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)
“இந்த வீடு எப்போது கட்டினது?”
“அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…”
“ஏன் படிப்பை விட்டுட்டாரு…”
“எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோ… எங்க திரிவானோ… வலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானா… அப்பவும் வரமாட்டான்.
ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யா… அதோ இருக்காரே முருகன்… அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!”
இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’, என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!
“உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…”
“ஆமாம் அய்யா… அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…”, தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.
“நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…”
“உண்மைதானய்யா…”
“நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே… அவர் என்ன சொன்னார்?”
“சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலேதான் இருந்தான்.”
“நேருஜி என்ன சொன்னார்?”
“அவங்க பாஷை எனக்குப் புரிதாய்யா… என்னமோ சொன்னாரு… வேறென்ன சொல்லியிருப்பாரு… எல்லாரையும்போல் ‘இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னு’ சொல்லியிருப்பாரு…!”
“இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா… நாங்கள் விடைப் பெற்றுக் கொள்ளலாமா?”
“மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும் சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…”
அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.
“ஏன் கண்கலங்குகிறீர்கள்… இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்.”
“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”, என்று கூறினார்.
தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

Saturday, March 7, 2015

மகளிர் தின சிறப்புப்பதிவு

மகளிர் தின சிறப்புப்பதிவு.




அம்மாவும் , அக்காவும் , மனைவியும் பெண்ணாக வேண்டும் ! குழந்தை மட்டும் ஏன் பெண்ணாக வேண்டாம் !

ஒரு கையில் உலக பெண்கள் தினம் கொண்டாடி மகிழுந்து விட்டு ; மறு கையால் ஒவ்வொரு 1000 பெண் சிசுவில் 88 பெண் சிசுவை அழிக்கிறது இந்தியா !

பெண்ணை அதிகமாய் ஆராதிப்பதும் இந்தியா தான் !

பெண் சிசுவை அதிகமாய் அழிப்பதும் இந்தியா தான் !

பெண்ணை ஓவியம் ஆக்கி ரசிக்கும் அதே நேரத்தில் ;

பெண்ணை ஒளிர விடாமல் தடுப்பதும் இந்தியா தான் !

பெண் கடவுள் ஏராளம் ஏராளம் ! லக்ஷ்மி, சரஸ்வதி, காளி .......



பெண்ணை கடவுள் ஆகி வழிபடுவதும் நாம் தான் !
ஒரே ஒரு பெண் கேரளா ஐயப்பன் கோவியில் கால் வைத்ததற்காக அவளை தண்டித்தும் ; கோவிலையே கழுவி விட்டு, பரிகார பூஜை செய்து பெண் இனத்தையே அசிங்க படுத்தியதும் நாம் தான் !

ஒரு பெண் சிசு அழிப்பு ; ஒரு வம்ச அழிப்பு !
ஒரு பெண் வளர்ப்பு ; ஒரு வம்ச வளர்ப்பு !

அந்த வம்சத்தில் எத்தனை மருத்துவரோ ? எத்தனை அன்னை தெரசவோ ???? யாருக்கு தெரியும் !

வசதி படைத்த கோடிஸ்வரன் கூட புதிதாய் பிறந்த பெண் சிசுவை பார்த்த உடனே "பெண்ணா" என்று முகத்தை சுருக்கும் குறிகிய புத்தி எப்போ நம்மை விட்டு போகும்???

கடவுளே ,இறைவா,ஆண்டவா, தேவனே,கர்த்தரே என்று எத்தனை முறை சொன்னாலும், உதடுகள் ஒட்டாது "அம்மா" என்று ஒருசொல் சொல்லிப்பார் உதடுகள் கூட ஓட்டும்.

பெண் சிசு அழிப்பதை தடுப்போம்,தாய்மையை மதிப்போம்,!
--------------------------------------------------------.
முகநூல் சகோதரிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை.



முன் பின் அறியாதவர்களே முகநூலில்
நாட்புகரம் நீட்டுகிறார்கள் ,அவர்களை பூரணமாக நம்புதல் கூடாது,ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான்
நட்பு ஒருவன் சாகும் வரைக்கும் துன்பம்
தரும் என்பார் வள்ளுவர்.

நண்பர்கள் நம் கருத்தை விரும்புவதாலேயோ ,
ஆமோதிப்பதாலேயோ, நாம எதைச்சொன்னாலும் விரும்புவதால் (இவர்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்) . மற்றவர்கள் மட்டும் நல்லவர்களாகி விடமாட்டார்கள்.

ஒருவர் எல்லை மீறுகிறார்
என எப்படி அறிந்து கொள்ளலாம்?

1. பொதுவாக இல்லாமல் தனியாக
உங்கள் மெஜேஜ் பாக்சில் காலைமதியமாலை இரவு வணக்கம் போடுவது. இதில் என்ன
தவறு என்று கேட்கலாம் அப்படி கேட்பதே உங்களை ஒருவர் தன் தனிப்பட்ட கவனத்தில் ஈர்த்து விட்டார் என்றாகும்.

2. உங்களுக்கு தனிப்பட்ட செல்லப்பெயர் வைத்தோ,
அல்லது சினாமா பாணியில் ராட்சசி, பிசாசு, தேவதைன்னு குறிப்பிட்டாலோ நீங்க
விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இப்படி அழைப்பது ஒருவர் மீது தன்
ஆதிக்கத்தை செலுத்த என்பதை மனதில் கொள்ளவும்.

3.முகநூல் தவிர வேறு தளங்களில்
மின்னஞ்சல், அல்லது எஸ்எம்எஸ் மூலம்
வணக்கம் வைத்தல், முகநூலில் வாதிட்ட அல்லது கூறிய கருத்தை உங்களுக்கு விளக்க நினைத்தல்
இது அவர்களின் மீது நீங்க கொண்ட நல்அபிப்பிராயத் திற்கு பங்கம் வந்து விடக்கூடாதென்ற முன்
எச்சரிக்கையின் விளைவு என்பதை கவனத்தில்
கொள்ளவும்.

4. உங்கள் செல்போன் எண்ணை கெஞ்சிக்கூத்தாட
ி வாங்கி தொடர்பற்ற நேரம் கெட்ட நேரத்தில் அழைத்து, உப்புச்சப்பில்ல ாத
விடயத்தைப்பேச முற்படுதல். உடனே எண்ணை பிளாக்செய்து விட வேண்டும்.

5. நேற்று உங்களிடம் பேசாததால் நாளே என்னமோ மாதிரி இருந்திச்சுன்னு ஆரம்பித்து நான் பேசாட்டியும் நீங்க ஒரு மிஸ்டுகால் கொடுங்க என்றால்
சுதாரித்துக்கொள ்ள வேண்டும்.

6. அடுத்து உங்க குரல் சரிய இல்ல உடம்பு சரியா இல்லையா இல்ல வீட்டில் பிரச்சனையான்னு தொடர்வது.(எப்படி உங்க குரலை வைத்தே உங்க
நிலையை ஊகித்து விட்டேன்னு உளவியரீதியாக அனுகுவது இதில் தான் பலபெண்கள் விழுந்து விடுகிறார்கள்)

7. திருமணமாகாத பெண்கள் ஒரு உற்சாகத்தில் தங்கள்
படங்களை வேறுபதிவேற்றி விட்டு படா
ர்கள். பொதுவாக தோழர்கள் கவனிக்க
வேண்டியது. என்தான் நட்பு இருந்தாலும்
கண்ணியமான சொற்களை பயன்படுத்த
வேண்டும்.
---------------------------------------------------------
பெற்றோர்களுக்கு.



உங்கள் குழந்தை முகநூலில் என்ன கருத்தை விரும்புகிறார், எந்த மாதிரி கருத்துக்களை இடுகிறார்கள்னு கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.

முகநூலில் தனிப்பட்ட விடயங்களைப்பதியும் நாட்குறிப்பல்ல, முகம் தெரியாத எத்தனையோ பேர் பார்க்கும் விடயம் எனவே, பெற்றோர்கள், பார்ப்பதால் குறைந்து போய்விடாது, குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை கண்டுகொள்ள உதவும் நிலைடதுமாறும் போது கைகொடுத்து விழாதவறு காக்க கைநீட்ட முடியும்..

குழந்தைகளின் பாஸ்வேர்டை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும் செல்போனாக இருந்தாலும் வந்து சென்ற குறுஞ்செய்திகளை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க கூறவேண்டும், பெற்றோர் பார்க்கூடாத செய்தி எனில் அதில் ஏதோ தவறாக இருக்க இடம் உண்டு.

நாட்குறிப்பு தனிப்பட்டது , கடிதங்கள் கூட தனிப்பட்டதாகக்கருத் முடியாது, அதே போல் கணவன்மனைவியும் இருவரும் முகநூலில் இருந்தால் இது என் தனிப்பட்ட விடயம்னு சொல்லக்கூடாது.

முன்பே ஒரு இழையில் குறிப்பிட்ட செய்தி கணவனுக்கும் மனைவியின் பாஸ்வேர்டும் மனைவிக்கு கணவனின் பாஸ்வேர்டும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

முகநூல் போழுது போக்கிர்க்கே. நேரத்தை வீணடிக்காமல் படிப்பு,மற்றும் வீட்டுவேலைகள் செய்வதற்கு முற்படுங்கள்.
பெற்றோர்கள் நம்பிக்கையை வீணடிக்காதீர்கள்.

அதுபோல எக்காரணத்தை கொண்டும் உங்களது புகைப்படங்களை facebook 'ல் உபயோகபடுத்த வேண்டாம். சில நேரங்களில் அவர்கள் ஆபாசமான படங்களை கோர்த்து விடுவது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். கவனமாக இருங்கள் சந்தேகம் உள்ள நபர்களை unfriend செய்து BLOCK செய்துவிடுங்கள்.

சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதை பகிருங்கள் ,அல்லது தெரிந்தவர்களுக்கு message மூலம் தெரிவியுங்கள்.

தங்கள் பெற்றோர் தம்மை நம்பாமல் கண்காணிப்பதாக குழந்தைகள் நினைக்கக்கூடாது , பெற்றோரும் நம்பமுடியாத நிலையில் உலகம் செல்வதை பக்குவமாக குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும்.
------------------------------------------------------
காதல் என்றால் என்ன?


இப்போது பத்தாவது செல்லும் பள்ளி மாணவர்களும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த பருவத்தில் வருவது காதலா என்றால் , நிச்சியமாக இல்லை. அது ஒரு இன ஈர்ப்பு அவ்வளவுதான். அந்த வயதில் ஏற்ப்படும் ஹார்மோனின் தூண்டுதலே இதற்க்கு காரணம்.

"டேய் மச்சான் உனக்கு ஆளு இல்லையா டா, ஏண்டி உனக்கு ஏதும் ஆளு இல்லையா? இந்த மூஞ்சிக்கு எவனும் சிக்கலயா"ன்னு ஒரு சில மாணவ/மாணவிகளே மற்ற மாணவ/மாணவிகளிடம் கேட்கும் பொது அவர்களுக்கு அந்த காதல் எனும் ஆசையானது தூண்டப்படுகிறது. அது ஒழுக்கக்கேடு என்று அவர்கள் அறிவதில்லை .இறுதியில் வகுப்பறையில் இருக்கும் அனைவரையும் காதல் வலையில் தாமாகவே விழுந்து சீரழியும் அவலம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் அப்படி மாற முக்கிய காரணம் இன்றைய சினிமாக்கள். காதல் ,முத்த காட்சிகள் இல்லாத படங்களே தற்ப்போது வருவதில்லை. அதை பார்க்கும் விடலை பருவ (டீன் ஏஜ்) குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், நாமளும் யாரையாவது காதலிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுகிறது.

அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அம்மாதிரியான சினிமாக்களை பார்க்கவிடக்கூடாது. வீட்டில் டிவியில் அந்த காட்சிகள் வரும் பொது சேனலை மாற்றிவிட வேண்டும். ஆபாசமான புகைப்படங்கள் கொண்டுள்ள பத்திரிக்கைகளை அவர்கள் கண்ணில் படாமல் தவிர்ப்பது நல்லது.

அவர்கள் ஒழுக்கமான குழந்தைகளுடன் பழகுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தகாத நட்பு அது பற்றி எடுத்து கூறவேண்டும்.

- Rex Nadar (நாடார் நற்ப்பணி இயக்கம் )

திருநெல்வேலி


திருநெல்வேலி

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே.

சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே,தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே.

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பர்.

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர் இருந்தால் அவர் நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார்..
Familiar Industriallists from Nellai are
T V Sundram Iyengar ( TVS Group ), S Anatharamakrishnan ( Amalgamations Group ), Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ),
AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi Masala Group ), V G Paneer Das ( Founder, VGP Group ), M G Muthu ( Founder, MGM Group ),Dr.Sivanthi Adhiththanar ( Dina thanthi daily ).

தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத் ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8 ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள் தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான் நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது.




தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள் தாமிரபரணி தாய் தான்..

தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள் என்றால் எங்கள் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள் தான்...
சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.

தமிழக புவியியல் அமைப்பில் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என தமிழன் வகுத்த கடல்,மலை,காடு,வயல்,பாலை ஐவகை நிலங்களும் உடைய ஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான். எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூட சொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள் ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள் ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர் போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும், சில ஊர்கள் அதிக காடுகள் கொண்ட ஈரோடு போலவும் இருக்கிறது.குறுகிய நிலத்தில் இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்த நிலப்பரப்பிலும் இல்லை.



தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர் வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே
முடியாது.. wink emoticon





தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள் நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமாலே" என இங்கு பேசப்படும் நாடார் வழக்கு தமிழ் பிரபலமானது.நெல்லை தமிழ் நாடார்களாலே அதிகம் பேசப்படுகிறது,எனவே இதை நாடார் வழக்கு தமிழ் என்றே சொல்லலாம்.

திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாக பிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்ட மக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை.. mass of NR

ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம். சென்னை,கோவை.திருச்சி.
மற்றும் மதுரை யை விட. முதல் முன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள்.

பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம் நெல்லை தான்.




இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும் தான்.

உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி, இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.

மணிமுத்தாறு அணையை கட்டிய
கே.டி.கோசல்ராம்,மாவீரன் வீர தளபதி ஆசான் அனந்தபத்மநாபன் நாடார்(கன்னியாகுமாரி), 


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை,இந்தியவிடுதலைக்காக போராடி தூக்கில் இடப்பட்ட மாவீரன் ராஜகோபால் நாடார்., வீர பாண்டிய கட்டபொம்பன்.பாரதியார், சுப்பிரமணிய சிவா, பூலித் தேவன், வாஞ்சிநாதன், வீரன் அழகு முத்துகோன், ஒண்டி வீரன், மார்ஷால் நேசமணி நாடார், தோழர் ஜீவா, வீரமாமுனிவர், முஹமது இஸ்மாயில், சுந்தரலிங்கம் போன்றோர்கள் பிறந்த வீரபூமி இது.
கர்ம வீரர் காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும் அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும் குமரி மக்கள் மீது அன்பு அதிகம்.



நெல்லைகார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம். 



மதச்சார்பின்மைக்கு சான்று நங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச் யை பார்க்கலாம்.

Tirunelveli Medical College( govt ) TMC, Govt College of Engg Tirunelveli, Tirunelvili Law College, Govt agricultural college, Govt Siddha Medical College, Govt Veterinary College, என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை....

தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான்.

எங்களை விட ஒருவயது கூட இருந்தாலும் வாங்க போங்கன்னுதான் சொல்லுவோம்.

பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி முதலிடம்.

பதிவு திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.

முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான்.

தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்கு பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். " District of Youth "

ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50% படங்கள் திருநெல்வேலியை மையமாக கொண்டே வெளிவருகிறது....

அப்புறம் எங்க அல்வா...கொடுத்துட்டேன்......! 




I am proud to be an "TIRUNELVELIAN ".

மதுரையை ஆட்சி செய்த நாடான் உலகுடையபெருமாள்

மதுரையை ஆட்சி செய்த நாடான் உலகுடையபெருமாள் :-


மதுரையில் பிற்காலப் பாண்டியர்களாக நாடார் குலத்தின் ஐந்துசகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர்.அவர்களுள் மூத்தவன் ஜடாவர்மன் குலசேகர பராக்கிரமப் பாண்டிய நாடான் ஆவான் [1480-1507].

வலங்கைச் சான்றோராட்சி மதுரையில் கல்வெட்டும் செப்பேடும் கண்டு;அன்னை மீனாட்சிக்கும், சொக்கநாதருக்கும்,தேரும்;திருவிழாவும் தினமும் கண்டு சீரும்,சிறப்புமாக ஆட்சி செய்து வந்த நேரத்திலேயில் மாற்றார் படையெடுத்து வந்தனர். துணையாய் நின்ற வீரத்தளபதிகள் பதவி ஆசையினால் மாற்றாருக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்தனர்.எதிரிகளுக்குத் துணையாயினர்.

ஐவர் ராஜாக்களும் போரில் வீர சொர்க்கம் புகுந்தனர்.ராஜாக்கள் குடும்பம் மதுரையை விட்டு அகன்றனர்.ஐவருக்கிளையவள் பொன்னுருவியின் அருந்தவத்தால் அவளுக்கு ஐந்து புதல்வர்கள் பிறந்தனர் மூத்தவர் உலகுடையபெருமாள்,அவருக்கு இளையவர் சரியகுலப்பெருமாள் ஆவார். உடைவாள் வெட்டு,மல்யுத்தம்,குதிரையேற்றம்,யானையேற்றம் களரி உள்ளிட்ட அனைத்து அரசகுலவீரப் பயிற்சிகளும் பெற்றனர்.

மதுரை மண்ணில் தாய் மாமனுக்கேற்பட்ட அவலத்தைத் துடைத்திட உறுதி கொண்டனர். அவர்கள் வளர,வளர அவர்களது வைராக்கியமும் வளர்ந்த்து.தருணம் பார்த்து வீறு கொண்டெழுந்தனர் உலகுடையபெருமாளும்,சரியகுலப்பெருமாளும் அவரது தம்பியரும்.மாமனின் பழிதீர்க்க நடைபெற்றப் போரில் மதுரையை மீட்டெடுத்தார் உலகுடையப்பெருமாள்.’’மாமன்மார் பழியை அழித்தவன்’’என்ற நற்பெயர் பெற்றார்.மதுரையைச்சுற்றிலும் தெப்பக்குளங்கள்,கோயில்கள், அறச்சாலைகள் அமைத்தார் மதுரையில் பொற்கால ஆட்சி செய்தனர்.

தோற்றோடிய மாற்றார் படைகள் 12 ஆண்டுகள் மலைப்பகுதியில் ஆயத்தம் செய்து படை திரட்டி வந்து போரிட்டு மதுரையைக் கைப்பற்றினர். மாற்றார் கையில் சிக்கி இறப்பதை விட நம்மை நாமே மாய்த்துக்கொள்வோம் என்று தங்களத் தாங்களே குத்திக் கொண்டு மாண்டனர்.அவர்களுடைய ஆன்மீக பலத்தாலும் மதுரை மீனாட்சியின் அருளாலும் தெய்வமாகி பல வரங்களைச் சிவனிடம் பெறுகின்றனர்.மதுரையிலிருந்து குடிப்பெயர்ச்சியான தங்களுடைய குலத்தோரைக் காத்திடவே பூவுலகில் அமர்கின்றனர். உலகுடையபெருமாளுக்கும் சரியகுலப்பெருமாளுக்கும் தமிழகத்தில் வழிபாடுகள் காணப்படுகின்றன.

-நெல்லைதமிழன் அருண் சேர்மதி



நட்டாத்தி நாடார்கள்

நட்டாத்தி நாடார்கள்
சுந்தரசெகர அரங்கன் திருவழுதி நாட்டினை (தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி) பெருங்குளத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்.அவரது சிலை பெருங்குளம் கோவில் அருகில் தற்போது அமைந்துள்ளது. இவரே ராஜ ராஜ சோழனின் வலங்கை பிரிவின் தலைவனாக இருந்தவர். வலங்கை பிரிவானது சோழ மன்னர்களின் உறவினர் பிரிவாகும்.
கிபி 1002 ல் சோழரான சுந்தரசெகர அரங்கன் வலங்கை படைகளுக்கு தலைமை தாங்கி பாண்டியர்களை தோற்காடித்தார் , அதன் காரணமாக அவர் திருவழுதி நாட்டின் ஆட்சியாளராக நியமிக்க பட்டார். பெருங்குளத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்.
சுமார் 200 வருடங்களுக்கு பிறகு சுந்தர பாண்டியனின் எழுச்சியால் திருவழுதி நாடு பாண்டியர்களின் ஆட்சிக்கு திரும்புகிறது. அப்போதைய திருவழுதி நாட்டின் ஆட்சியாளர்கள் குறுகிய வறண்ட பகுதிகளுக்கு தள்ளப்பட்டு குறுநில மன்னராக்க படுகின்றனர்.
அந்த குறுநில மன்னர்கள் அவ்வறண்ட பகுதிகளை விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றுகின்றனர். பின் அவர்கள் நட்டாத்தியார் என்றும் அந்த நிலமானது நட்டாத்தி என்றும் அழைக்கப்பட்டது. சுந்தரசெகர அரங்கனாரின் சிலை நட்டாத்தி கோவிலில் அமைந்துள்ளது.

நட்டாத்தி:
நட்டாத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய ஊராட்சி,அது வைகுண்டபுரம் ,பட்டாண்டிவிளை,கொம்புக்காரன் பொட்டல் மற்றும் சின்ன நட்டாத்தி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
அங்கு வாழ்ந்த குறுநில மன்னர்கள் நட்டாத்தியார் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஜமீன்தார் நிலையை அடைவதற்கு முன் 18 ஆம் நூற்றாண்டு வரை தங்களை சோழர்களின் வம்சாவழியினர் என்றே கூறி வந்தனர்.
சுந்தரசேகர அரங்கன் மற்றும் அவர் வாரிசுகளின் காலமான 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் நட்டாத்தியார்கள் திருவழுதி நாடு முழுவதும் சக்தி வாய்ந்த ஆட்சியை நிறுவினர். சோழர்கள் வீழ்ச்சிக்கு பிறகு அவர்கள் 13 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் போதே குறுநில மன்னர்களாக்கப்பட்டனர்.
நட்டாத்தியார்கள் நாடன் ,நாடர் நாடாழ்வார் என்றும் அழைக்கப்பட்டனர். நாயக்கர்களின் படையெடுப்புக்குப்பின்னர் அவர்கள் நட்டாத்தி நாடார் என்று அழைக்கப்பட்டனர்.. நாயகர்களின் படையெடுப்புக்கு பின்னரே மக்கள் சாதி பெயரை வைத்து அழைக்கப்பட்டனர்.

நட்டாத்தியார்கள் கோயில்களில் மற்றும் தங்கள் சடங்குளில் அதிகமாக தங்களை அர்ப்பணித்து கொண்டனர்., இதன் காரணமாகவே அவர்கள், மதுரை நாயக்கர் மன்னர்களிடமிருந்து எந்த தாக்கமும் இல்லாமல் இருந்தனர். 1801 வரை அங்கு நட்டாத்திகளின் சுதந்திரமான குறுநில ஆட்சி நிலவியது. பிரிட்டிஷ் வருகைக்கு பின்னர் அவர்கள், ஜமீன்தார் அந்தஸ்திற்கு இறக்கப்பட்டனர்.
கட்டபொம்ப நாயக்கரும் நட்டாத்தி மன்னரும்.
கட்டபொம்மன் நாயக்கருக்கும் நட்டாத்தி மன்னருக்கும் இடையே ஒரு நல்ல உறவு நிலவியது. நட்டாத்தி மன்னர்களின் பகுதியில் கட்டபொம்மன் அவ்வப்போது ஒரு வாரம் வரையில் தங்குவார். ஆகவே அவர்களிடையே நல்லறவு வளர்ந்தது. இதன் மூலமே கட்டபொம்மன் சிலம்பம்,மற்றும் குஸ்தி (மல்யுத்தம்) போன்ற கலைகளை நட்டாத்தி மன்னர் தயார் செய்த ஆட்களிடம் இருந்து கற்றுக்கொண்டார் என ஒரு கருத்தும் நம்பப்படுகிறது.
1799 மற்றும் 1801 களில் நட்டாத்தி மன்னர் பிரிட்டிஷ்கு எதிரான போரில் கட்டபொம்மன் நாயக்கருக்கு துணைபுரிந்தார். மேலும் நிதி உதவி மற்றும் ஆட்களை வழங்கினார். ஊமைத்துரை கைதுக்குபின்னரே நட்டாத்தி மன்னர் கட்டபொம்மனுக்கு போர்காலத்தில் உதவியது தெரியவந்தது. பின் நட்டாத்தி மன்னருக்கு கைது ஆணை பிரபிக்கபட்டது.
நட்டாத்தியார்கள் மன்னர் அந்தஸ்திலிருந்து ஜமீந்தார் அந்தஸ்திற்கு வந்தமை.
நட்டாத்தி மன்னருக்கு கைது ஆணை பிறபித்த பின்பு, அதிலிருந்து தப்பும் விதமாக களக்காடு மற்றும் முண்டந்துறை பகுதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் வரை பதுங்கலாயிற்று. பின்னர் எட்டயபுரம் ராஜா உதவியுடன் பிரிட்டிஷ் அரசினை சமாதானப்படுத்தி மீண்டும் இப்பகுதியை ஒரு ஜமீன்தாராக ஆட்சி செய்யும் அந்தஸ்தை.பெற.1866 ல் தூத்துக்குடி அருகில் நடந்த ரப்பர் கொள்ளைகளை தடுக்க உதவியதால் நட்டாத்தி ஜமீன்தாருக்கு சென்னை காவல்துறை ஆய்வாளரிடம்மிருந்து. பாராட்டு கடிதம் வந்தது. அதோடு அவர் அவரது சொந்த பகுதிக்கு அவரது படையாட்கள் மற்றும் பல்லக்குடன் திரும்பசெல்ல ஆணைப்பத்திரம் ஓன்று பிரிடிஷ் அரசிடமிருந்து வந்தது.
கடைசி நட்டாத்தி ஜமீன்தார்.
கடைசி நட்டாத்தி ஜமீன்தாரான திருவழுதி வைகுண்ட நாடான் 1864 ல் பிறந்தார், அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரின் தந்தையார் இறந்துவிட்டார்,எனவே தாயார் வெள்ளாச்சி அம்மாள் அவர்களே நிர்வகாக பொறுப்பினை எற்றுகொள்ளும்படி ஆயிற்று. அவருக்கு நிர்வாக உதவியாக மதுரகவி என்பவர் இருந்தார்.

திருவழுதி வைகுண்ட நாடான் அவர்கள் குதிரை ஏற்றம், சிலம்பம் மற்றும் குஸ்தி (மல்யுத்தம்) போன்ற கலைகளை சிறுவனாக இருந்த போதே கற்றுக்கொண்டார். "பாபாஜன் பட்டாணி" அவரை குஸ்தியில் சிறந்தவராகவும், "ராமு நாயக்கர்" (கட்டபோம்மனின் வாரிசு) அவரை குதிரை ஏற்றத்தில் சிறந்தவராகவும் மற்றும் சுப்பா நாயக்கர் அவரை சிலம்பத்தில் சிறந்தவராகவும் செய்தனர்.
1880 ல் திருவழுதி வைகுண்ட நாடான் அவர்கள் நட்டாத்தி ஜமீன்தார் முடிசூட்டப்பட்டார்.பிற்காலத்தில் அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் போனதால், அவருக்குப் பின் ஜமீன்தார் ஆட்சி முடிந்துவிட்டது. பின்னர் அவரது மகள்கள் வழித்தோன்றல்களே, இக்காலத்தில் இன்று பண்ணையார்களாக அப்பகுதியில் உள்ளனர்.

மற்ற ஜமிந்தார்களுடன் நல்லுறவு:
அவரது ஆட்சியின் போது எட்டயபுரம், மணியாச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஜமீன்தார்களுடன் ஒரு நல்லுறவு இருந்தது.அவர் வளர்ச்சி கண்ட எட்டையபுரம் ராஜா அவருக்கு ஒரு குதிரையை பரிசளித்தார். அக்காலகட்டத்தில் நட்டாத்தி பண்ணைவீட்டு வேட்டை நாய் அப்பகுதியில் பிரபலமாக இருந்தது. அதில் ஒன்றை வைகுண்ட நாடான் அவர்கள் சிவகங்கை ஜமீனுக்கு பரிசளித்தார். அதற்க்கு பதிலாக சிவகங்கை ஜமீன் பரிசாக அளித்த பல்லக்கு ஓன்று இன்றும் அப்பகுதியில் உள்ளது.
ஜமீன் அரண்மனை:
8 ஆண்டுகளுக்கு சட்ட போராட்டத்தின் பிறகு அவரது மகள் பொன்னம்மாள் நாடாச்சிக்கு சொத்துரிமை கிடைத்தது. அரண்மனையானது 3 ஏக்கர் பரப்பளவில். இருக்கிறது அதில் ஒரு கொலுமண்டபம், அந்தபுரம், மாடமாளிகை, ஆயுத அறையும் இருக்கிறது. அது ஆதிநாராயண சுவாமி சுப்ரமணியர் கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ளது.

தற்போது உள்ளூர் மக்கள் திருவழுதி வைகுண்ட நாடான் நட்டாத்தி ஜமீன்தாருக்கு ஒரு சிலைஅமைக்க நடவடிக்கைகளை எடுத்து அதை அரசு அங்கீகரிக்க கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.