Monday, March 30, 2015

பனையின் பூர்வீகம் இலங்கையா - கால்டுவெல் ஒரு அடிமுட்டாள்.

சாணார்கள்(நாடார்கள்) இலங்கையிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது அங்கிருந்து பனங்கொட்டைகளை கொண்டுவந்தனர் தமிழகம் முழுவதும் விதைத்தனர். அதற்க்கு முன் இந்தியாவில் பனைகள் கிடையாது. இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் நாடார்கள், என்று அறிவுகெட்ட ஆங்கிலேயன் கால்டுவெல் கூறுவதை நம்பும் அடிமுட்டாள்களே..
இதை முழுவதும் படியுங்கள்.
பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?
அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”
“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)
“பானிற வுருவிற் பனைக்கொடியோனும்” - (புறநானூறு 33-2,3)
பனை பற்றிய வேறுசில பாடல்கள்.
“பனைநுகுப் பன்ன சினைமுதிர் வராலோடு” –புறநானூறு 148-5
(வரால் மீனுக்கு பனம்பாளை உவமையாகக் கூறப்பட்டது)
“பனைத்திர ளன்ன” – அகநானூறு 148-1
“முழாவரைப் போத்தை” –புற 85-7.357-4.
(முழவைப் போன்று பெருத்த அடியை உடைய பனைமரம்)
“ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளறையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்..” – புற 288- 1,2,3
(இரவில் தோன்றும் அனுடத்தின் ஆறு நட்சத்திரங்களும் பனை போன்று தெரிவதால் அனுடத்திற்கு முடப்பனை என்று பெயர்)
“பனைத்தலைக் கருக்கு நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்” –குறுந்தொகை 372-1,2,3
(பனையின் உச்சியிலுள்ள கருக்குடைய நீண்ட மடல்களை,காற்றினால் வீசப்படும் மணல் மறைக்கும். அத்தகைய மணல்மேடுகலை உடைய கடற்கரையில்..)
இவ்வளவு ஏன்? இராமபிரான் பரிசாக பெற்ற பனைமரம் தெரியுமா?
இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன
ஏழு பனை மரங்கள்" என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இராமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.
கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆராய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான்
ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். அதுவே இப்போது நீங்கள் பார்க்கும் புகைப்படம்.

ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.
அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும்.
இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம்..
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் (பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர்) அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம்.
இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை.
சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை.
இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனை....ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது.
நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன காத்திருங்கள் தருகிறேன்.

No comments:

Post a Comment